மாணவர்களின்
விடைத்தாளில் மிக நன்று, மோசம்
என்று கருத்து தெரிவிக்கக்கூடாது என
ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களின் கல்வி தரம் குறித்து
தேர்வு வைத்து பரிசோதிக்கப்படுகிறது. இதனால் வகுப்பில்
ஆசிரியர்கள் சொல்லித்தரும் பாடங்கள் மாணவர்களை சென்றடைகிறதா என்பதை அறிந்து கொள்ள
முடியும்.
இதன்படி அதிக மதிப்பெண்
பெற்ற மாணவர்களுக்கு மிக நன்று, சராசரி
மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நன்று,
குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கவலை
அளிக்கிறது என விடைத்தாளில் எழுதுவது
வழக்கம்.
இதேபோல்,
அறிவியல் செய்முறை நோட்டு புத்தகங்கள் மற்றும்
சமூக அறிவியல் பாடத்தில் வரை படங்களை குறித்தல்
போன்றவற்றில் ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பது
பள்ளி அளவில் நடத்தப்படும் தேர்வுகளில்
மட்டுமே நடைமுறையில் உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்படும்
ஆசிரியர்களின் கருத்துக்கள் மாணவர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதன்படி ‘மிக நன்று’ அல்லது
‘நன்று’ என குறிப்பிட்டால் மாணவர்கள்
மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். மாறாக, ‘மோசம்’ அல்லது
‘மிக மோசம்’ என குறிப்பிட்டால்,
மாணவர்கள் நாள் முழுவதும் கவலைப்படுவதுடன்
படிப்பில் கவன சிதறல் ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற எதிர்மறையான குறிப்புகளை மாணவர்களுக்கு அளிக்கக்கூடாது என கல்வியாளர்கள் மற்றும்
உளவியலாளர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய உயர்நிலை கல்வி
ஆணையத்தின் (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தில் இயங்கும்
பள்ளிகளில் விடைத்தாள் மதிப்பீட்டில் ஆசிரியர்களின் கருத்துக்களை தெரிவிப்பதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து
சி.பி.எஸ்.இ.
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 1 முதல்
5ம் வகுப்பு வரை படிக்கும்
மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு
ஏற்ப மிக நன்று, நன்று,
மோசம், கவலை அளிக்கிறது என
ஆசிரியர்கள் குறிப்பு எழுதி வந்தனர். வருங்காலங்களில்
ஆசிரியர்கள் இதுபோன்று எழுதக்கூடாது. கருத்து தெரிவிக்க வேண்டாம்
மாறாக மாணவர்களை கவரும் வகையில் நட்சத்திரம்,
ஐந்து நட்சத்திரம், சித்திரங்கள் (கார்ட்டூன்) போன்றவற்றை குறிப்பிட்டு ஊக்குவிக்க வேண்டும். இதனால் ஒரு தேர்வில்
சரியாக படிக்காத மாணவர்கள் கூட மறு தேர்வில்
நன்றாக படித்து விடையளிக்க முடியும்.
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மத்தியில், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை நீக்கலாம். இதேபோல் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றாமல் தடுக்கலாம். எனவே, ஆசிரியர்கள் மாணவர்களை பாதிக்கும் வகையிலான கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
super plan.............
ReplyDelete