Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்விசார் கணினி வளங்கள் தயாரித்தல் பயிற்சிப் பணிமனையில் கல்வித்துறை முதன்மை செயலர் அவர்கள் பேசியது என்ன?


                                             
      கல்விசெயலர் திருமதி சபிதா அவர்களை SCERT இயக்குனர் வரவேற்று ,ECS ,Digital lessons பற்றிய சில நடைமுறைகளை சுருங்கக் கூறி அமர, செயலர் அவர்கள் ஆசிரியர்களிடையே ஆசிரியர்களுக்காக உரையாற்றினார்….

      “ பள்ளிக்கல்வி முதன்மைச் செயலரின் உரை மிக நேர்த்தியாக இருந்தது. ஆசிரியர்களை உற்சாகப்படுத்துவதாகவும், செயலில் இறங்கும் ஆற்றலைத் தருவதாகவும் இருந்தது.

      பள்ளிக் கல்வித் துறைக்கென ஒரு தனி server இல்லாதது கண்டு எனக்கு வருத்தமாக இருந்தது. ஆகவே மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் இந்த செய்தியைக் கொண்டு சேர்த்து,அனுமதி பெற்றேன்.DATA BASE தகவல் முறைமைத் திட்டம் (EMIS) ,வழியாக அனைத்துப் பள்ளிக் கல்வித் துறைகளையும் இணைப்பதற்கான (Integration of School Educational Departments) முயற்சி இது. முதல் முயற்சியாக நம் தமிழகத்தின் அனைத்து ஆசிரியர்கள், குழந்தைகள்,பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே நம் (ICT Award) விருது பெற்ற ஆசிரியர்களின் துணையும் கொண்டு அடுத்த ECS ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ECS-இன் தேவை
 
         ஒரு சிலருக்குப் பேசினால் புரியும்,சிலருக்கு வரைந்தால் புரியும்..எல்லோருடைய புரிந்துகொள்ளலும் ஒரே மாதிரியாக இல்லை.சில விஷயங்களை ஒலி-ஒளி மூலம் காட்டினால் உடனே கிரகித்துக்கொள்வார்கள். அதை அவர்கள் வாழ்வில் மறக்கவே மாட்டார்கள்.
 
       பாடப் புத்தகங்களைத் தாண்டி, நம்மிடம் கல்வித்தொலைக்காட்சிப் படப்பதிவு நிலையம்(EDU TV STUDIO),பல்வேறு கல்வி செயற்கைக்கோள் இணைப்புகள்(EDU-SAT) செலவின்றி கிடைக்கின்றன.ஆனால் நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை.இது தவிர அண்ணா பல்கலைக்கழகத்திலும் நமக்கு ஒரு நிலையம் உள்ளது.அதைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.PART –II Scheme இல் இதற்கான நிதியுதவி ஒதுக்கி, முதலில் SCERT கடிதம் அனுப்பியது.

         பல தனியார் நிறுவனங்கள் என்னை அணுகின. ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.ஏனெனில் ,நமது அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தவிர்த்து யாராலும் இதை சரியாகச் செய்யமுடியாது. உங்களைவிடக் குழந்தைகளை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. பாடநூல்களை மிகச் சரியாக குழந்தைகளிடம் சேர்க்க அவர்களால் மட்டும்தான் முடியும்.

      நீங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு காணொலித் தகடும்(CD) மதிப்பீடு செய்யப்படும்.பாடப்பொருள் (CONTENT), பாடத்திட்ட வரைவு (Syllabus) சார்ந்தும்,எளிதில் மாணவர் புரிந்து கொள்ளும் விதத்திலும் மதிப்பீடு செய்யப்படும்.

         இவற்றைத் தயார் செய்யும்போது வகுப்பு,பாடம், பாடப்பொருள் ஆகியவை தெளிவாக இருக்கவேண்டும். தர்க்கரீதியாக சரியாக(Logic) இருக்க வேண்டும்.அது மிக முக்கியம்.இவற்றையெல்லாம் உங்கள் மனதில் கொண்டு உருவாக்கினால் அதுவே மிகநல்ல வளமாக இருக்கும்.

          கற்பனை செய்து பாருங்கள்,எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு ஆசிரியராக நீங்கள் தயாரிக்கும் DIGITAL RESOURCE உலகம் முழுமைக்கும் உங்களை அடையாளப்படுத்தும்,அந்த வாய்ப்பை இந்தப் பயிற்சி தரும், பயிற்சி என்றுகூட சொல்லக்கூடாது, ORIENTATION எனலாம்.நான் ICT –AWARD க்காக என்னிடம் ஆசிரியர்கள் வருவார்கள்.அவர்கள் செய்துள்ளவற்றைப் பார்க்கும்போதெல்லாம் அதிசயமாக இருக்கும்,அவ்வளவு நல்லாப் பண்ணுவாங்க நம்ம டீச்சர்ஸ்.

            எங்களுக்குத் தேவை …Simplicity, Sincerity, Dedicative that’s all. அதிகமாக உயர் வகுப்புகளுக்கான E-Content தயார் செய்ய வேண்டும் . நிறைய DIETs இருக்கு.அவர்களோடு நீங்கள் இணைந்து பணியாற்றி 3 மாதங்களுக்குள், இப்போதைய பணியின் முதல் தொகுப்பாக உங்கள் வளங்களைத் தர வேண்டும்.WISH YOU ALL THE BEST”….

         இவை நமது கல்விச் செயலர் நமக்காகப் பேசியவை,எவ்வளவு நம்பிக்கையோடு வெளிப்படையாகப் பாராட்டினார். அவ்வளவு சந்தோஷம் நம் ஆசிரியர்களுக்கும்நம்மை வாழ்த்திவிட்டு விடைபெற்றுவிட்டார் கல்விச் செயலர்.

அறிக்கை

Uma Maheswari Gopal




1 Comments:

  1. கல்விச் செயலா் அவா்கள் பேச்சு மிக அருமை. கணிவழிக் கல்வி மறக்காது மனதில் நிலைத்து நிற்கும். கணிப்பொறியில் பி.எஸ்.சி., பி.எட் படித்தவா்களை ஒவ்வொரு பள்ளியிலும் நியமித்தால் கணினி வழிக்கல்வி மிக நன்றாக இருக்கும். மல்டிமீடியா படித்த கணிப்பொறி ஆசிாியா்கள், செயலா் அவா்களின் செயல்திட்டத்தை மிக விரைவாக நடைமுறைப்படுத்துவாா்கள். பல வருடங்களாகப் படித்து வேலை இல்லாமல் இருக்கும் கணினி ஆசிாியா்களுக்கு வாழ்வு அளித்ததாகவும் இருக்கும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive