Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போராட்டம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்

         போராட்டம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல் - தினத்தந்தி

        இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர்கள் போராட்டம்

 

        தற்போது ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதித்த தடையை எதிர்த்து அரசு அப்பீல் செய்திருப்பதாகச் செய்தி வந்திருக்கிறதே?
 

       பதில்:-இடை நிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு “வெயிட்டேஜ்” மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டுமென்று நாங்கள் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, “தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டும் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 18 பேர் மனு தாக்கல் செய்திருந்த வழக்கில், மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, “பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக் கொள்ளலாம்; ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின்போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது” என்று இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார். ஆசிரியர் நியமனம் குறித்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்களுக்கு அது ஒரு நல்ல உத்தரவாக அமைந்தது.
 

           ஆனால் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், 4-9-2014 அன்று நீதிபதிகள் எம். ஜெயச்சந்திரன், ஆர். மகாதேவன் ஆகியோர் முன் ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்வதாகவும், அதனை உடனே விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்றால், எந்த அளவுக்கு ஆசிரியர் நியமனத்தில் பிடிவாதமாக இந்த அரசு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
 

       இந்த நிலையில் தமிழக அரசு இதிலே கவுரவ பிரச்சினை பார்த்துக் கொண்டு செயல்படாமல், மனிதாபிமான நோக்கத்துடன், பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதையும், அதிலே நான்கு பேர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதையும் மனதிலே கொண்டு, போராட்டம் நடத்துவோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி விரைவிலே ஒரு சுமூகமான முடிவு காண வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.




5 Comments:

  1. அன்புள்ள வாசகர்களே,

    வணக்கம், பாடசாலை பல்வேறு கல்வி சார் செய்திகளையும் வழங்கி வரும் ஒரு பொது வலைதளம். இங்கு தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் பார்வையிட்டு வருகின்றனர். ஆனால் தற்போது ஒவ்வொரு நிமிடமும் கமெண்ட்களை பார்வையிட்டு ஒழுங்குபடுத்துவதிலேயே நேரம் கழிகிறது.புதுமையாக சிந்திக்கவும் இயலவில்லை. தேவையற்ற சண்டைகளை தவிர்க்க கூடாதா? டெட்டை தவிர்த்து கல்வி சார் வளர்ச்சி செயல்களில் ஆக்கபூர்வமான புதுமையான யோசனைகளை தெரிவிக்க கூடாதா? ஆசிரியர் பணியில் சேரவேண்டும் என்ற வேகத்துடன் உள்ள தங்களால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

    அன்புடன் - பாடசாலை.

    ReplyDelete
  2. நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.blogspot.com என்று type செய்து தேடவும்.

    தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://selectedcandidates.blogspot.in/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
    PLEASE VISIT

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே,

    இயன்றவரை நமது பாடசாலை வலைதளத்தில் மற்ற வலைதளங்கள் பற்றிய அறிமுகத்தை தவிர்த்து உள்ளோம். இருப்பினும் தற்போது டெட் தேர்வர்கள் மிகுந்த மனவேதனையில் இருப்பதாலும், அவர்களுக்கு வடிகால் தேவைப்படுவாலும் இத்தகைய வலைதளங்கள் துவக்கி தங்கள் கருத்துகளை வெளியிட்டுக்கொள்ள ஆதரவு தருகிறோம்.

    இதேபோன்று மாற்று கருத்து கொண்டவர்களும் தங்களுக்கென வலைதளம் துவக்க விரும்பினால் அதற்கான ஆலோசனைகள் வழங்க தயாராக உள்ளோம். தங்களுக்கான வலைதள முகவரியையும் இன்று பாடசாலை வலைதளத்தில் வெளியிட்டுக்கொள்ளலாம்.

    ஆலோசனைக்கு - நமது இமெயில் ஐ.டி. - Padasalai.net@gmail.com

    என்றும் நடுநிலையுடன்
    அன்புடன் - பாடசாலை.

    ReplyDelete
  4. ஒரே ஒரு தீக்குச்சியானது பெரும் காட்டையே அழித்து விட்டது ...
    என்றும் அமைதியை விரும்புகிறேன்...
    மீண்டும் அமைதியான முறையில் கருத்துக்களை பகிர்வதற்கு இடமளிக்குமாறு பாடசாலையை வேண்டுகிறேன் ... நன்றி ...

    தனிப்பட்ட பகைமையை மறப்போம் ...இனிவரும் நாட்களில் ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்வோம் நண்பர்களே...

    ReplyDelete
  5. மீண்டும் அமைதியான முறையில் கருத்துக்களை பகிர்வதற்கு இடமளிக்குமாறு பாடசாலையை வேண்டுகிறேன்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive