Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிறந்த ஆரம்ப பள்ளிகளை அரசால் அமைக்க முடியாதது ஏன்?

         சிறந்த மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் அரசால், சிறந்த ஆரம்ப பள்ளிகளை அமைக்க முடியாதது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

         கல்வி உரிமை சட்டப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கும்படி சிறுபான்மையினர் அமைப்பும் நடத்தும் சில பள்ளிகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிறுபான்மையினர் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன.

          இந்த மனு நீதிபதிகள் ஏ.ஆர்.டாவே, லலித் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. கல்வி உரிமை சட்ட வரம்புக்குள் சிறுபான்மையினர் பள்ளிகள் வராது என்றும், தங்களிடம் சிறுபான்மையினர் தேசிய கமிஷன் சான்றிதழ் இல்லாததால் பிற்படுத்தப்பட்டமாணவர்கள் சேர்க்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு தடை விதிக்க வேண்டும் என சிறுபான்மையினர் பள்ளிகள் சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு தடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

         அப்போது நீதிபதிகள் கூறியதாவது: அரசு பள்ளிகள்தரமானதாக இல்லாததால், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் மாணர் களை சேர்க்க போட்டி நிலவுகிறது. மருத்துவக் கல்லூரிகள் விஷயத்தில், தனியாரை விட, அரசு கல்லூரிகள்தான் சிறந்தவை என தேர்வு செய்யப்படுகிறது. அப்படியிருக்கும்போது அரசால் ஏன் தரமான ஆரம்ப பள்ளிகளை அமைக்க முடியவில்லை? தரமான ஆரம்ப பள்ளிகளை அதிகம் அமைக்க வேண்டியது அரசின் கடமை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.




1 Comments:

  1. comedy:governmentirku thevai varumanam matumae.atharkaga avamanapattallum paravaiyillai endruthaan TASMAC kadaigalaga open seigirathu.AASIRIYAGALAI nirapuvathil kavanam seluthuvathillai.Onru matum purinthukoolungal makalae entha KATCHI AACHI SEITHALLUM varudam muluvathum AACHINATATHA VENDUM.aanal indru ELECTION samayathil mattum NALLA AACHI NADAKIRATHU.ELLAM EHARKAGA UNGALIN OOTU PICHAIKAGA.MATRAM VENDUM ENDRALL AACHI MURAIYAI NANDRAGA KAVANIYUNGAL.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive