தமிழக அளவில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் விவரம் அறிவிப்பு கிடப்பில் இருப்பதால், பதவி உயர்வு ஆசிரியர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.2014-15ம் கல்வியாண்டிற்கான தரம் உயர்வு பட்டியலில்
இடம் பெற்றுள்ள அரசு பள்ளிகளில் 100 பள்ளிகள் மேல்நிலையாகவும், 50
உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும் என, சட்டசபையில் கல்வித்துறை மானிய
கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதுகலையில் 900,பட்டதாரியில்
300 புதிய ஆசிரியர் பணி காலியிடங்கள் உருவாகும்.
இந்த இடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு ஆசிரியர்கள்,எஞ்சிய 50 சதவீதத்தில்
புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில், சட்டசபை
அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டதால் பாடம் வாரியாக பதவி உயர்வு பட்டியலில்
இடம் பெற்றுள்ள 450க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை-பட்டதாரி
பதவி உயர்வில் 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் தரம்
உயர்வு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் விவரம் வெளியிடவேண்டும் என, அவர்கள்
கோரியுள்ளனர்.
இது தொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "மாவட்ட அளவில்
தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் விவரம் அறிவிக்காததால், சீனியர்
ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறமுடியவில்லை. கல்வியாண்டின் துவக்கத் தில் தரம்
உயர்வு பள்ளிகளை அறிவித்து, உருவாகும் இடங்களை நிரப்பினால் மாணவர்களின்
கல்வி பாதிக்காது. 50 சதவீத புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு டி.ஆர்.பி.,
தேர்வு நடத்தவேண்டிய நிலையில், தாமதிப்பது மாணவர், ஆசிரியர்களுக்கு
பாதிப்பு ஏற்படும்,” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...