Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணை ரத்து : மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

மதுரை, செப்.26-

       தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தகுதித்தேர்வு

மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் கே.கே.ராமகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டது. அதன்படி தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

பாரபட்சமானது

இதன் பின்பு, 2 முறை தகுதித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் மதிப்பெண் சலுகை வழங்கலாம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி 6.2.2014 அன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

2 முறை நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் அனைவரும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று கூறி விட்டு அதற்கு பின்பு நடத்தப்பட்ட தேர்வுகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது என்று கூறுவது பாரபட்சமானது.

தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்குவது, கல்வித் தரத்தில் சமரசம் செய்து கொள்வது போன்றதாகி விடும்.

எனவே, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் விதியை சுட்டிக்காட்டி தகுதித்தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுபவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

முரண்பாடாக உள்ளது

இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். அவர்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதித்தேர்வில் மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உரிமை கோரி அரசுக்கு மனு கொடுத்ததால் அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. யார் உரிமை கோரினார்கள் என்பதை அரசு கூறவில்லை.

ஏற்கனவே 2 முறை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற அனைத்து தரப்பினரும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று கூறி விட்டு அதன்பின்பு தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும் என்று கூறுவது முரண்பாடாக உள்ளது.

சரியான நடைமுறை அல்ல

ஏற்கனவே நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் மிக குறைவானவர்களே தேர்ச்சி பெற்ற காரணத்தினால் மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது. ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது போட்டித்தேர்வு அல்ல. தகுதித்தேர்வை போட்டித்தேர்வு போன்று எடுத்துக்கொள்வது சரியான நடைமுறை அல்ல. இதுபோன்று சலுகை மதிப்பெண் அளிப்பதன் மூலம் கல்வித்தரம் பாதிக்கும்.

இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முந்தைய நாள் (5.2.2014) தகுதித்தேர்வு சலுகை மதிப்பெண் விவகாரம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஐகோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசாணை ரத்து

அந்த உத்தரவு நகலில் நீதிபதி கையெழுத்திட்டு அந்த ‘மை’ காய்வதற்குள் சலுகை மதிப்பெண் வழங்கி மறுநாள்(6.2.2014) அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, நீதிமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பு போல கருதுகிற விஷயம் ஆகும்.

பள்ளிகளில் அனைத்து தரப்பினரும் 100-க்கு 35 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்று ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தான் தகுதித்தேர்விலும் அனைத்து தரப்பினருக்கும் ஒரே மாதிரியாக குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட வேண்டும். தகுதித்தேர்வில் அனைத்து தரப்பினரும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்பது தான் சரியாக இருக்கும்.

எனவே, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதித்தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கி 6.2.2014 அன்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. எனினும், இந்த அரசாணை அடிப்படையில் ஏற்கனவே பணி நியமனம் பெற்றவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது. தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களையும் தொந்தரவு செய்யக்கூடாது. அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கலாம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.




14 Comments:

  1. ஒரு புதிய விளையட்டினை தொடங்கியுள்ளது,கல்வித்துறை.அவசர அவ்சர்மாகப் பணினியமணங்களை முடித்துள்ளது.உச்சநீதிமன்றம் இறுதித்தீர்பு வழங்கும் வரை காத்திராமல் அவசரம் காட்டவேண்டிய அவசியம் என்ன?பணியில் இரண்டாண்டுகள் இருந்த கணிணி ஆசிரியகளின் தற்போதய நிலைக்கு ஆசிரியர்கள்தள்ளப்படவேண்டுமா?அவசரம் ஏன்?

    ReplyDelete
  2. NALLA THEERPPU? NALLA NEETHI ARASARKAL? COMEDY PANNA ACTER VADIVELU EVARKALIDAM KATTRUKOLA VENDUM.

    ReplyDelete
  3. ஐயா நீதியரசர் அவர்களே இந்த 5% மதிப்பெண் சலுகையால்தான் எனக்கு வேலை கிடைக்கவில்லை.இந்த சலுகையை முன்பே ரத்து செய்திருந்தால் இன்று நானும் வேலையில் சேர்ந்திருப்பேன்.சலுகையில் பணிநியமணம் பெற்றவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தாங்கள் சொல்வது பணிநியமனம் பெற்றவர்கள் மனமுடைந்து போவார்கள் என தாங்கள் எண்ணுவது சரியே.90 க்கு மேல் எடுத்து எங்களை போன்றவர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை முயற்சியிலும் தோல்வியுற்று வாழ்க்கையிழந்து தவிக்கின்றனர். நானே மனமுடைந்து இரண்டு நாட்கள் மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் பெற்று நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பியுள்ளேன். 5% தளர்வில் பணி ஆணை பெற்றவர்கள் மனம் மட்டும் தான் உடையுமா? 90 க்கு மேல் எடுத்தவர்கள் மனம் மட்டும் இரும்பினாலானதா?
    என்னைப்போன்றோர்க்கு தாங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்????!!!!!!!!!.............

    ReplyDelete
  4. 5 வயது பிள்ளைகள் போல தமிழக அரசும் நீதிபதிகளும் விளையாடுவது நியாயமா? தமிழ்நாடு அந்த அளவிற்கா தரங்கெட்டு விட்டது? அரசு அரசாணை வெளியிடுவதும், அதை நீதியரசர்கள் முதலில் சரி என்பதும் வேலை முடிந்த பிறகு தவறு என்று நீக்குவதும் விளையாட்டாகி விட்டது. TETல் 89 எடுத்தவர் 101 எடுத்த என்னைப் பார்த்து சிரித்தபடி செல்கிறார் பணியில்சேர. நானோ நம் விதி என்ன, எப்படி சாகலாம் என்று என் விதியிடம் வினவுகிறேன். என்ன நடக்கிறது இங்கே?

    ReplyDelete
  5. TRB and JUDGE and TN GOV இல் இருப்பவர்கள் படித்தவர்களா? இல்லை மாடு மேய்த்துவிட்டு போலிசான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்தவர்களா?

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. ஐயா ஜட்ஜ் ஐயா operation success but many patients are died. என்ன ஆபரேஷன்ல டாக்டரோட சொந்தக்காரர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்

    ReplyDelete
  8. ஏமாற்றப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள்

    தற்போது TET- தேர்வில் இட ஒதுக்கீட்டில் 5% மதிப்பெண் தளர்வு அளித்து பணிநியமனம் வழங்கப்படிருக்கிறது. இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வு அளித்தது தவறு என்று அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த 5% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டாம் என்றும் இனிவரும் காலங்களில் இந்த 5% மதிப்பெண் வழங்கக்கூடாது என்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் 652 கணினி ஆசிரியர்கள் விஷயத்தில் TRB நடத்திய தேர்வில் 50% மதிப்பெண் எடுத்தால் அவர்களுக்கு பணிவழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. தேர்வு நடந்து முடிந்த பின்பு அரசு 50% இலக்கை மாற்றி 15% தளர்வு கொடுத்து 35% எடுத்தால் போதுமானது என்று கருதி அரசு தெரிவித்தது. இதனடிப்படையில் TRB தேர்வு முடிவை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தன் தீர்ப்பை வெளியிட்டது.

    தீர்ப்பில் 35% சதவீதமாக அரசு குறைத்தது தவறு. இதனால் 35% மேலும் 50% குறைவாகவும் மதிப்பெண் எடுத்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் 652 கணினி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    TET-ல் 5% தளர்வு அளித்தது தவறு என்றும், கணினி ஆசிரியர்களுக்கான தேர்வில் 50% என்று உள்ளதை 15% தளர்வு 35% ஆக குறைத்தது அளித்தது தவறு என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த முறை மட்டும் 5% தளர்வால் தேர்வானவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. கணினி ஆசிரியர்கள் தேர்வு விஷயத்தில் 50% என்று உள்ளதை 15% தளர்வு அளித்து 35% மதிப்பெண் பெற்று தேர்வானவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டாம் என்று நீதிமன்றம் கூறவில்லை,
    மாறாக 50%-திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் 35% மேல் மதிப்பெண் பெற்றவர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
    TET-ல் 5% மதிப்பெண் குறைவால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு நியாயம், இதே TRB நடத்திய வேதர்வில் 15% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நியாயம். நீதி எங்கே இருக்கின்றது.
    தமிழக அரசும் பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
    TET-ல் 5% மதிப்பெண் குறைவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று தான்(26.09.14) பணியில் சேர உள்ளனர். ஆனால் கணினி ஆசிரியர்கள் தேர்வில் 15% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து 4 ஆண்டுகள் 6 மாதங்கள் முறையான ஊதியத்தில் பணிபுரிந்துள்ளனர். இந்நிலையில் இவர்களை (652 கணினி ஆசிரியர்களை) பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
    652 கணினி ஆசிரியர்கள் ஏமாற்றப்பட்டனர். தற்போது இவர்களின் நிலை --------------------------.(டேஷ்).

    ReplyDelete
  9. One idea, we are all should return our certificate to TRB.

    ReplyDelete
  10. One idea, we are all should return our certificate to TRB.

    ReplyDelete
  11. yaravathu setha than ithu oru viduvu kalam kidakum nw i am ready to do it

    ReplyDelete
    Replies
    1. SISTER,UNGAL VARUTHAM PURIKIRATHU. ATHARKU SAVATHU THEERVU ALLA.EVARKALUKKU THAKKA PADAM PUKATTA VENDUM. NICHAYAM NEETHI VELLUM.

      Delete
    2. மறதி! ஒரு தேசிய வியாதி!

      Delete
  12. dear brothers and sisters , unga varutham puriyudu. naanum ungalum oruthy dan. idhilurundhu naam veliyil vandaaga vendum. manmudaindhu nimmadhiyatru iruppadal nashtam nammakke. naan idhil irundu veliyera muyarchithu vetri adaya thodangi ullen. contact me 9884652666

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive