புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு, நேற்று முன்தினம்
விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு, நேற்று, பணி நியமன
உத்தரவுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர
வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.பள்ளி கல்வித்துறை மற்றும்
தொடக்கக் கல்வித் துறையில், 12,700 புதிய ஆசிரியரைநியமனம்
செய்வதற்கானகலந்தாய்வு, ஆகஸ்ட் இறுதி யில் துவங்கி, செப்., முதல் வாரம் வரை
நடந்தது.
'வெயிட்டேஜ்' மதிப்பெண் தொடர்பான வழக்கில், புதிய ஆசிரியர்கள் பணியில் சேர,
உயர் நீதிமன்ற மதுரை கிளை, இடைக்கால தடை விதித்தது. 'வெயிட்டேஜ்'
மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்கள் அனைத்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில்
தள்ளுபடிசெய்யப்பட்டன.இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய
இடைக்கால தடை உத்தரவும், நேற்று முன்தினம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான ஆசிரியர் களுக்கு, நேற்று
பிற்பகல்,திடீரென, பணி நியமனஉத்தரவுகள் வழங்கப்பட்டன.இதுகுறித்து,
பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு:செப்., 1ம் தேதி முதல், 5ம் தேதி
வரை நடந்த கலந்தாய்வில் பங்கேற்று, பணியிடத்தை தேர்வு செய்தவர்களுக்கு,
இன்று (நேற்று), பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும்,
உடனடியாக, சம்பந்தபட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும்.இவ்வாறு,
கல்வித்துறை அறிவித்துள்ளது.இதேபோல், தொடக்கக் கல்வித் துறை வெளியிட்ட
அறிவிப்பில், 'இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மாவட்ட தொடக்கக்
கல்வி அலுவலகங்களுக்கு, உரிய சான்றிதழ்களுடன் சென்று, பணி நியமன உத்தரவை
பெற்று, உடனடியாக, பணியில் சேர வேண்டும்' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.'புதிய
ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும்' என, பணி நியமன உத்தரவை
வழங்கிய அதிகாரி கள், அறிவுறுத்தி உள்ளனர்.
ஒரு புதிய விளையட்டினை தொடங்கியுள்ளது,கல்வித்துறை.அவசர அவ்சர்மாகப் பணினியமணங்களை முடித்துள்ளது.உச்சநீதிமன்றம் இறுதித்தீர்பு வழங்கும் வரை காத்திராமல் அவசரம் காட்டவேண்டிய அவசியம் என்ன?பணியில் இரண்டாண்டுகள் இருந்த கணிணி ஆசிரியகளின் தற்போதய நிலைக்கு ஆசிரியர்கள்தள்ளப்படவேண்டுமா?அவசரம் ஏன்?
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇந்த வேகத்தை ஜனவாி 2014ல் 90 க்கு மேல் எடுத்தவா்களுக்கான சான்றிதழ் சாாிபாா்பிற்கு பின் செய்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது. ஏன் அப்போது உங்களுக்கு வரவேண்டிய பெ.....டி வரவில்லையா?
ReplyDeleteநன்று இடைநிலை ஆசிரியர் 1645 போக 750 பற்றி ஒன்றுமே தெறியலையே?
ReplyDelete