தமிழ்நாடு
திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் சிறப்புக் கல்விகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
வியாழக்கிழமை (செப்.11) முதல் விநியோகிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திமாற்றுத்திறன் குழந்தைகளுடன்:
பணிபுரியக் கூடிய பயிற்சி பெற்ற
வல்லுநர்களின் தேவை அதிகரித்து வருவதைக்
கருத்தில் கொண்டு சிறப்புக் கல்வியில்
முதுநிலைத் தொழிற் பட்டயம், முதுநிலை
தொழில் சான்றிதழ் படிப்புகளை 2015-ஆம் ஆண்டு முதல்
பல்கலைக்கழகம் வழங்க உள்ளது. ஏற்கெனவே,
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல்
பி.எட். சிறப்புக் கல்வியை
பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. இப்போது
மாநிலத்திலேயே முதன் முறையாக எம்.எட். சிறப்புக் கல்வியும்
பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர் சேர்க்கைக்கான
நுழைவுத் தேர்வு நவம்பர் 23-ஆம்
தேதி நடத்தப்பட உள்ளது.
இந்த எம்.எட். படிப்புக்கான விண்ணப்பம், புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள சிறப்பு கல்வி படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக தலைமை அலுவலகத்திலும், சிறப்புக் கல்வி கற்றல் மையங்களிலும் வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Teaching experience venuma
ReplyDelete