காலாண்டு தேர்வை உரிய நேரம் வரை எழுதாமல் நடுவில் விடைத்தாள்களை கொடுத்து செல்லும் மாணவர்களின் பெயர், விபரம் சேகரிக்கப்படுகிறது என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு செப்.26ம்
தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. காலாண்டு தேர்வை பொதுத்தேர்வு
போல நடத்த அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார்
கூறுகையில், காலாண்டு தேர்விற்கு அறைக்குள் வரும் மாணவர்களை சோதனையிட்டு
உள்ளே அனுப்ப வேண்டும். ஆசிரியர்கள் தேர்வு நேரத்தில் சுற்றி வர வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட நேரம் வரை மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். முன்கூட்டியே
விடைத்தாள்களை தந்து வெளியே செல்லக்கூடாது. அவ்வாறு வெளியேறும் மாணவர்களின்
பெயர், விவரம் சேகரிக்கப்படுகிறது.
தேர்வு நேரத்திற்கு முன்னதாக வெளியேறும் மாணவர்கள் உரிய முறையில் பாடங்களை
படிக்கவில்லை என கருதப்படும். விடைத்தாள் குறிப்புகள் தயாரித்து
பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...