Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் புரிதலுடன் கூடிய கல்வி கற்பிக்க வேண்டும்; இயக்குனர் வலியுறுத்தல்

              "புரிதலுடன் கூடிய கல்வி அறிவை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்," என தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் வலியுறுத்தினார். மதுரையில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கற்றல் அடைவுதிறன் மேம்படுத்துதல் பயிற்சி முகாமை நேற்று துவக்கி வைத்து அவர் பேசியதாவது: மாணவர்களுக்கு எளிய முறையில் எழுத்தறிவை வளர்க்கும் வகையில் கற்பித்தல் பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு புதிய வார்த்தைகளை கற்பிக்கும் போது, அதன் அர்த்தத்தை மாணவர்கள் மனதில் பதியும் வகையில் விளக்க வேண்டும்.
 
            வரலாற்று சம்பவங்களை, தற்போது நடைமுறையில் உள்ள சில நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு கற்பித்தல் முறையை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். 'புரிதல் இல்லாத அறிவு என்பது வீண்' என்று ஆசிரியர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

           முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன் (டி.கல்லுப்பட்டி), விஜயராஜன் (நர்சரி பள்ளிகள்), மோசஸ் பெஞ்சமின் (மதுரை வடக்கு) உட்பட பலர் கலந்துகொண்டனர். 15 கல்வி வட்டாரங்களில் இருந்து வாசிப்பு மற்றும் எழுதும் திறனில் மிகவும் பின்தங்கிய தலா ஐந்து பள்ளிகள் வீதம் 75 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.




2 Comments:

  1. @@@@@@@@@@@@@@
    கூடுதல் பணியிடம் பெறுதல் தொடர்பாக
    @@@@@@ௐ@@@@@@@

    இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிவான வேண்டுகோள்:

    நமக்கு ஆசிரியர் பணி கிடைக்காமல் போனதுக்கு முழுமுதற்காரணம் TRB அறிவித்த குறைவான காலிப்பணியிட அறிவிப்பே என்பதை உணர வேண்டும்.


    தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைவான காலிப்பணியிட அறிவிப்பால் நாம் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    விழுமின்;
    எழுமின்;
    உழைமின் ;
    கருதிய காரியம் கை கூடும் வரை-விவேகானந்தர்.

    என்பதன் விளக்கத்தை நம் மாணவர்களுக்கு கற்பிக்க தொடங்கும் முன் நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டிய தருனம் இதுவே.

    வெற்றி என்பது நிச்சயம் உண்டு.ஆனால் அதற்கு ஆகும் கால நேரமும், சந்தர்ப்பமும் நம் முயற்சிகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
    கடந்த நமது முயற்சி தோல்வியே தோல்வியே தழுவியதற்கான காரணம் உங்களின் முழு பங்களிப்பின்மையே, என்று கூற கடமைப்படுகிறோம்..

    குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது சென்னையில் ஒன்றினைய வேண்டும். நம் ஒவ்வொருவரும் நாம் வேதனைகளையும், நமது கோரிக்கைகளையும் குறைந்தபட்சம் 5 நிமிடத்தில் DIGITAL CAMERA மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அவை DVD cassettes ஆக மாற்றி, இத்துடன் இடைநிலை ஆசிரியர்களின் 15 பக்க கோரிக்கை மனுவையும் இணைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அதிகாரி அவர்களுக்கும், 38 மந்திரிகளுக்கும்,ஆசிரியர் தேர்வு வாரிய நிர்வாக தலைவர் அவர்களுக்கும், சில மீடியாவிற்கும் பதிவுத்தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

    ஒரு மீடியா நிறுவனம் நமது பதிவுகளை ஒரு வார கால அவகாசத்தில் ஒளிபரப்பு செய்வதாக நமக்கு உறுதி அளித்துள்ளது.


    நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
    இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.


    ஆதலால் காலம்தாழ்த்தாமல் வருகின்ற ஞாயிறு (21.09.14)அன்று, அனைவரும் சென்னை மெரினாவில் ஒன்றுகூட வேண்டும்.

    குறைந்தது 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கான
    SOURCES உண்டு.அவை நமது கோரிக்கை மனுவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    தயக்கம் வேண்டாம்.நாம் அனைவரும் சென்னையில் ஒனறிணைவோம்.

    *********WE (SGT)DEMAND ONLY ADDITIONAL VACCANCY******************

    10,000 காலிபணியிடம் அதிகரித்தால் நமக்கும் பணிவாய்ப்பு கிடைக்கும் என நம்பும் OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்
    ******************************
    தொடர்புக்கு
    sathyamoorthy(Avinashi)
    95433 91234
    9597239898
    Sathyajith (Bangalore)
    09663091690
    Mahendran (chennai)
    7299053549.
    Ravi (kadalur)
    8675567007
    Dharmaraj (Ramnad)
    9843521163
    Kanagaraj (Theni)
    9597734532
    Karuppusamy (erode)
    7200670046
    sivadeepan (trichy)
    8012482604
    Sakthivel (dharmapuri)
    9094316566
    Kulanthaivel (kallakuruchi)
    9994282858
    Deva (vellur)
    9566203861
    Saravanan(vathalagundu)
    9003444100



    ####################
    Date :21/09/14
    Place : chennai merina.

    ******************************
    Thanks to all.
    ******************************

    ReplyDelete
  2. வாயிலேயே வடை சுட்டா அதை சாப்பிட முடியாதுப்பா. உண்மையா சுட்டாதான் சாப்பிட முடியும். அது மாதிாி தான் எல்லாரும் பன்ற அட்வைஸ்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive