Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மதிப்பெண் சான்று உண்மைத்தன்மை ஆன்லைன் மூலம் பெறலாம்

           பள்ளி மதிப்பெண் சான்றுகளின் உண்மைத் தன்மை அறிய  விரும்புவோர் இனிமேல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சரிபார்த்துக்  கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

         அரசுத் தேர்வுகள் இயக்ககம்  நடத்தும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் வழங்கப்படும்  மதிப்பெண் பட்டியல்கள் அனைத்து அரசுப் பணிக்கும், தனியார் பணிக்கும்  அடிப்படையாக உள்ளன. பணியில் சேரும் எந்த நபரும் தங்கள் உண்மை  சான்றுகளை பணி வழங்கும் நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.  பணி வழங்கும் நிறுவனம் அந்த சான்றுகளின் உண்மைத் தன்மை  குறித்து சம்பந்தப்பட்ட தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கும். இதை ஏற்று  பணி நாடுவோர் நிறுவனங்களுக்கு கொடுத்த சான்றுகள்  உண்மையானவையா இல்லையா என்பது குறித்து தேர்வுத் துறை ஆய்வு  செய்து சான்று வழங்கும். இந்த சான்றுகளை அந்தந்த நிறுவனங்களே  தேர்வுத்துறைக்கு நேரடியாக அனுப்பி நேரடியாகவே பதில் பெறுவார்கள்.
           தேர்வுத்துறைக்கு ஆயிரக்கணக்கில் சான்றுகள் வருவதால் உண்மைத்  தன்மை குறித்து ஆய்வு செய்ய கால விரயம் ஆகிறது. இதனால்,  அனைத்து சான்றுகளும் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டன. இது  குறித்து அரசுக்கு தேர்வுத் துறை கடிதம் எழுதியது. அரசும் தற்போது  ஆன்லைனில் மூலம் உண்மைத் தன்மை குறித்து விவரங்கள்  கொடுக்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, தற்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கேட்டுள்ள  3000 சான்றுகளுக்கு உண்மைத் தன்மை வழங்க அரசுத் தேர்வுகள்  தயாராகிவிட்டது. அதே போல தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ  பல்கலைக் கழகமும் விவரம் கேட்டு அரசுத்  தேர்வுகள் துறைக்கு மனு  செய்துள்ளது. அதற்கும் விவரம் வழங்க தேர்வுத்துறை அரசிடம்  அனுமதி கேட்டுள்ளது. இதையடுத்து இனிமேல் உண்மைத் தன்மை  குறித்த விவரங்கள் ஆன்லைன் மூலம் மனு செய்து ஆன்லைன் மூலமே  பதில் பெற முடியும்.




12 Comments:

  1. மாண்புமிகு முதல்வர் அம்மா,
    TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது.
    BA, BEd,DTEd, இது எல்லாம் எப்படி ஆசிரியர் பதவிக்கு அடிப்படை தகுதியோ, அதே போல் இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதும் ஒரு தகுதி அவ்வளவே.
    ஆனால் TET மதிப்பெண்ணோ, Degree மதிப்பெண்ணோ, BEd மதிப்பெண்ணோ, இவை அனைத்தின் மதிப்பெண்ணோ கொண்டு தேர்வு செய்வது தேவையற்றது மற்றும்அல்லாமல் சமூக நீதிக்கு எதிரானதும் கூட.
    +2 முதல் ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே TET தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார் எனவே, இந்த TET தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற அனைவருமே ஆசிரியர் பதவி பெற தகுதி,திறமை கொண்டவர்கள் ஆவர்.
    selecetion என்பது, இத்தனை பிரச்சினைக்குரிய விசயம் அல்ல. மிக சிறந்த தீர்வு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள,
    TET பாஸ் செய்த நபர்களை அவர்களின் Employment Registration Seniiority படி Selection செய்து பணி வழங்கினால் அனைவரும் சம வாய்ப்பு பெற முடியும்.
    For Example: TET என்ற தேர்வு நடைமுறை படுத்தும் முன்பு வரை DTEd, BEd முடித்த ஆசிரியர்கள் Employment Exchange இன் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றனர். இது எந்த வகையான பிரச்சினையையும் தராமல், தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போதும், employment Exchange இல் பதிவு செய்தவர்களில் TET PASS செய்து, அதை பதிவு செய்த நபர்களில் இருந்து மட்டுமே வாய்ப்பு என்பது, தரமான, பல வருடம் காத்திருந்த முதல் ஆசிரியர்க்கு பணி வழங்குவது தான் நீதி, நியாயம், தர்மம்.
    இதில் தகுதி குறைந்த ஆசிரியர் என்ற பேச்சும் இல்லை, தனக்கு நீதி இல்லை என்றும் யாரும் கூற வாய்ப்பும் இல்லை.
    சமீபத்தில் படிப்பு முடித்து,TET பாஸ் செய்த நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள், இப்போது முடித்து உடனே பணி எதிர்பார்க்கும் நம்மை போலவே தான் கடந்த 10-15-20 ஆண்டுகள் காத்திருக்கும் (Rs.2000,3000 என சொற்ப சம்பளத்தில் பல வருடம் உழைத்து,) தன் 35-40-45 வயது வரை govt ஆசிரியர் பணி என்பது வெறும் கனவாகி விடுமோ என கண் கலங்கும் மூத்த ஆசிரியர்களுக்கு துரோகம் அல்ல ஒரு தாய் போல நன்மை மட்டுமே செய்வேன் என நீங்கள் சிறப்பான இந்த முடிவை அறிவுக்கும் நாள் உண்மையான ஆசிரியர்களின் பொன் நாள்.
    மேலும் ஒவ்வொரு 6 மாதம் அல்லது வருடத்திருக்கு ஒரு முறை TET தேர்வு நடத்தும் போது, தற்போது Seniority இருந்தும், TET தகுதி இல்லாத மூத்த ஆசிரியர்கள் வாய்ப்பை பெற முடியும். தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என உறுதி கூற இயலாது.
    தற்போது உள்ள weightage system Degree, DTEd, BEd தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அதிகம் தர, பெற பெருமளவு லஞ்சம் தர வழி செய்யும், மேலும் கல்வியின் தரம் என்பது தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கிடைக்கும் வரம் என பெற்றோர் மற்றோர் நம்பும் வகை செய்யும்.

    ReplyDelete
    Replies
    1. Well said Mr.Manjunath Easwaran.
      What you are telling is the fact which everyone is missing, esp. TRB.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. that's tru sir.நாங்களெல்லாம் கவர்மெண்ட் பள்ளி மற்றும் கல்லூரியில் தான் படித்தோம்.பள்ளியில் சில பாடத்திற்கு ஆசிரியர்களே இல்லை நாங்கள் படித்தபோது. கல்லூரியில் 3 வருடமும் வகுப்புகள் சரிவர நடந்ததே இல்லை. சிலபஸ் மட்டுமே கொடுத்தார்கள் லைப்ரரியில் புத்தகமே தர மாட்டார்கள். HOD லைப்ரரியில் அவர் பெயரில் புத்தகம் வாங்கி தருவார் . எங்கள் பேட்ச்சில் 50 நபரில் உண்மையாகவே 5 நபர் மட்டுமே(B.SC-PHYSICS) முடித்தோம்.

      ஆனால் இன்று அனைத்து கல்லூரிக்கும் தனாட்சி அந்தஸ்து வழங்கி CLASS ATTEND பண்ணினாலே அவர் பாஸ்.நல்லா தெரிந்த மாணவன் என்றாலே அவனுக்கு அதிக மதிப்பெண்

      எனவே அம்மா அவர்கள் வெயிட்டேஜ் முறையை விடுத்து TET-ஐ மட்டுமே கருத்தில் கொண்டு பணி நியமனம் அளிக்க வேண்டுகிறோம்

      Delete
    2. Sir physics ல் உங்கள் wtg என்ன ?

      Delete
  3. TNTEU AHH B.Ed genuineness amount evlo sir

    ReplyDelete
  4. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 75000 பேர், தேர்வு செய்யப்பட்டவர்கள் 15000 மீதம் உள்ள 60000 குடும்பங்கள் வீட்டில் ஒளியேற்றுவது அம்மாதான் !
    @ டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்தால் நல்லது
    @ டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் + சீனியாரிட்டி + அனுபவம் முறையே சிறந்தது.
    @புதிய முறையில் +2 + டிகிரி + பி.எட் + எம்பிளாய்மெண்ட் + அனுபவம் = 10+10+10+10+10 =50 + டெட் 50 மதிப்பெண் முறையில் தேர்வு செய்யலாம்.
    @

    ReplyDelete
  5. நாளை ஆசிரியர் தினம். ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!அம்மா போராடும் ஆசிரியர்களுக்கு நல்லசெய்தியைத்தாருங்கள்!

    ReplyDelete
  6. ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
    teacher :anitha tho avargalukku ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
    நல்லசெய்தி நாளை ???????????????????????????????????????

    ReplyDelete
  7. From which web site this genuineness is available.

    ReplyDelete
  8. IS ANY ONE HAVING COURT ORDER
    THOSE WHO DONE CV ON MAY 2010 TO FEB 2011..
    NO NEED TO WRITE TET

    ReplyDelete
  9. IS ANY ONE HAVING COURT ORDER
    THOSE WHO DONE CV ON MAY 2010 TO FEB 2011..
    NO NEED TO WRITE TET

    CONTACT 9962228283

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive