இன்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா அவர்களை சந்தித்து மனுகொடுக்க சென்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை
போலிஸார் தடுத்தனர்.
அனுமதி வாங்கிய பின்புதான் திருமதி சபிதா அவர்களை சந்திக்க முடியும் என்று காவல்துறை விளக்கமளித்தது.
ஆனால் போராட்டக்காரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.இதனால் கோபமுற்ற காவல்துறை சட்டத்தைக்காக்கும் பொருட்டு போராட்டக்கார்ர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் ஒரு பெண் உட்பட பலர் காயமடைந்தனர் போராட்ட குழு தலைவர் செல்லதுரை கைது செய்யப்பட்டுள்ளார்.அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து தற்போது மதுரவாயல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கைது செய்தவர்களை வைத்துள்ளனர் .
இது குறித்து போராட்டகாரர்களில் ஒருவர் கூறியது நாங்கள் அமைதியாக போராடினோம் எங்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர் இதில் ஒரு பெண்னுக்கு பலமாக காயம் ஏற்பட்டுள்ளது அவர் சேப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனக்கு சட்டை கிழிந்துள்ளது கையில் அடிபட்டுள்ளது எங்கள் போராட்டத்தை திசை திருப்பிய சிலர் மீதும் எங்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீதும் இன்று மாலை மாநகர காவல் துறை ஆனையாளரிடம் புகார் மனு கொடுக்க செல்ல உள்ளோம். என்று கூறினார்.
யாா்? பொியவா் ?
ReplyDeleteஅமொிக்காவில் ஒபாமாவை கூட மக்கள் எளிதில் காண முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் முதல்வா். இன்னும் சொல்ல போனால் அமைச்சா்கள் இன்னும் சொல்ல போனால் கல்வித்துறை செயலாளரை கூட பாா்ப்பதற்கு போராட்டம் நடத்தி விஷம் குடித்து காவல்துறையினாிடம் தடியடி பட்டால் கூட பாா்க்க முடியவில்லை.
இப்போது சொல்லுங்கள் ஒபாமா பொியவரா அல்லது தமிழ்நாட்டில் உள்ள மேற்கண்டவா்கள் பொியவா்களா ?
Obama makkalal select anavar nammavarkalo panaththaal minister anavarkal... thakuthiye illathavangakita poruppa kodukarathum kurangu kaiyila malaya kodukarathum onnuthan... ithu than tamilnaddula nadakkuthu
ReplyDelete