ஆசிரியர்கள் பணி நியமனத் துக்காக கொண்டு வரப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர் பணிக்கு தேர்வு
செய்வதற்காக வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் முறை கொண்டு வரப்பட்டது.
இதன்படி தகுதித் தேர்வில் ஒருவர் 90 சதவீதம் மற்றும் அதற்கும் மேற்பட்ட
மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 60 கிடைக்கும். 80
சதவீதத்துக்கு மேல் 90 சதவீதத்துக்குள் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு
வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 54 கிடைக்கும். 70 சதவீதத்துக்கு மேல் 80
சதவீதத்துக்குள் பெற்றவர்களுக்கு 48 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 60-க்கு
மேல் 70 சதவீதத்துக்குள் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 42
கிடைக்கும். இதேபோல் 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு
மதிப்பெண்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் எனக்
கூறப்பட்டிருந்தது.
இந்த அரசாணையை எதிர்த்து பலர் வழக்கு தொடர்ந்தனர். குறிப்பிட்ட
சதவீதத்துக்கு மேல் குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண்கள் பெற்ற
அனைவருக்கும் ஒரே வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது (உதாரணத்துக்கு 90
சதவீதம் மதிப்பெண் பெற்றவருக்கும், 99 சதவீதம் மதிப்பெண் பெற்றவருக்கும்
ஒரே வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது) சரியல்ல என்று அவர்களின் மனுக்களில்
கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தகுதித் தேர்வில் அவரவர் பெற்ற
மதிப்பெண்களுக்கு நேர் விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் வகையில்
புதிய மதிப்பெண் கணக்கிடும் முறையை பரிந்துரை செய்தார். இந்த தீர்ப்பையும்
அதன்படி வெளியிடப்பட்ட அரசாணை எண் 71-ஐயும் ரத்து செய்யக் கோரி பலர் மனு
தாக்கல் செய்தனர்.
“ஆசிரியர் தேர்வுக்கான விதிமுறைகள்படி எழுத்து தேர்வும் முடிந்து
விட்டநிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பை அடுத்து, விதிமுறைகளில் மாற்றம்
செய்தது சரியல்ல. மேலும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தகுதி
மதிப்பெண்களில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கியது சரியல்ல’’ என்று
மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி ஹோத்ரி,
எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அனைத்து மனுக் களையும் தள்ளுபடி செய்து நேற்று
தீர்ப்பளித்தனர். “வெயிட்டேஜ் மதிப் பெண்களை கணக்கீடு செய்வதற்காக தனி
நீதிபதி பரிந்துரையை ஏற்று, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதற்கான புதிய
முறையை அரசு கொண்டு வந்தது. அரசின் இந்த கொள்கை முடிவை எதிர்த்து பலர் இந்த
வழக்கை தொடர்ந்துள்ளனர். எனினும் அரசின் நடவடிக்கை தன்னிச்சையானது,
பாரபட்ச மானது மற்றும் நியாயமற்றது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள்
எதுவும் நீதிமன் றத்தில் தாக்கல் செய்யப்பட வில்லை” என்று நீதிபதிகள்
தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...