Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET அரசு பணி நியமனத்தை நம்பி வேலையிழந்த ஆசிரியர்கள்

          அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்தை நம்பி, தனியார் பள்ளிகளில் பார்த்து வந்து வேலையை இழந்த ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

          ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் 11 ஆயிரத்து 700 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 1,700 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன கலந்தாய்வு நடந்தது. அப்போது,"வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் நியனம் நடப்பதால் 10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதி இழப்பதாகக் கூறி டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து புதிய ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை ஆணை பெற்றனர். இதனால் கவுன்சிலிங்கில் பங்கேற்று வேலை கிடைக்கும் என்ற ஆசையில் இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் பணி நியமன கவுன்சிலிங்கில் பங்கேற்ற பலர், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

           அரசு பள்ளியில் ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனியார் பள்ளி வேலையை விட்டனர். தற்போது, அரசு ஆசிரியர் பணி கிடைக்காததால் தவிக்கின்றனர். இவர்களில் தேனி மாவட்டத்தில் பணி நியமன கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் தேனி கலெக்டர் பழனிசாமியிடம் பணி நியமனம் கேட்டு நேற்று மனு அளித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதில் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ளது போல் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சிக்கலுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.




17 Comments:

  1. கணம் நீதிபதி அவர்களே நாங்கள் அறியாத ஊரில் அதாவது குக் கிராமத்தில் பள்ளி கல்வியை முடித்துள்ளோம். எங்கள் ஊரில் 25 மாணவர்கள் தான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தோம். அதில் நான் 602 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன் எங்கள் ஊரில் 4 மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றனர். அந்த காலத்தில் மருத்துவராக வேண்டும் என்றால் 90 சதவிதம் மேல் மார்க் வேண்டும். அந்த கணவூ எல்லாம் சிட்டி டவூன் சைடு மாணவர்கள் தான் அதை எல்லாம் ஆசைபடமுடியூம். பிறகு என்னுடைய மார்க் கல்லூரியில் இடம் கிடைத்தது. நான் ஒரு அளவூக்கு வயலில் வேலை செய்து தான் படித்தேன். தேர்வூ சமயத்தில் வயலில் வேலை இருக்கும் அப்போது வேலையூம் பார்க்கனும் படிப்பும் படிக்கனும் பிறகு அரியர்ஸ் வைத்து 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தான் டிகரி முடித்தேன். டிகரி முடித்து என்ன செய்யலாம் என்று எனக்கு சொல்லுவதற்கு யாரும் இல்லை.

    இந்த சு+ழ்நிலையில் பி.எட். படித்தேன் அவ்வாறு பி.எட். கல்லூரிக்கும் வயல் வேலைய மற்றும் பஸ் பிரச்சனையால் சரியாக போக முடியவில்லை. நான் குறைந்த அளவே மார்க் வாங்க முடிந்தது. 60 சதவீதம் தான்.

    எனக்கு திருமணம் நடைபெற்றது. வயலில் உள்ள வருமானத்தை நம்பி. பிறகு படிப்படியாக குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. மழையூம் தக்க சமயத்தில் எங்களுக்கு கருணை காட்ட வில்லை. நான் தமிழ் ஆசிர்pயர் படிப்புக்கு படித்தேன். நான் வேலை வாய்ப்பு பதிவூ செய்து காத்திருந்து காத்திருந்து வேலை கிடைக்காததால் வெறுத்து போய் கிடைக்கிற வேலையை செய்து குடும்பம் நடத்தி வந்தேன்.

    அரசு டெட் என்ற தேர்வை அறிவித்தது. இது எனக்கு ஒரு வாழ்வா சாவா? என்ற போராட்டத்திற்கிடையில் நான் சிறப்பு வகுப்பு நடத்தும் பாடசாலைக்கு சென்று படித்தேன். அதில் நான் 115 எடுத்தேன். எப்படியோ எனக்கு வேலை கிடைத்துவிடும் என்று என் குடும்ப உறுப்பினர்கள் மிகவூம் சந்தோதஷமாக இருந்தார்கள்.

    பிறகு வெயிட்டேஜ் என்ற அடிப்படையில் என்னுடைய கணவூ நொறுங்கி விட்டது. தற்சமயம் மீண்டும் கிடைக்கும் வேலைலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். இந்த நிலை நம்மில் பலருக்கும் இருக்கும் இதை நான் எனது கண்ணீர் துளிகளுடன் உங்கள் பார்வைக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Nanum ithey nilayil than irukiren nanbare.... nammai ponravarkalukku kadavul than thunai....

      Delete
  2. இந்த நிலைதான். நண்பரே பலரது வழ்க்கையில் இன்னும் நிகழ்ந்து கொண்டு. உள்ள து.நீங்கள் வெளிப்படையாக சொல்லி விட்டீர்கள்...இருப்பினும். நம்பிக்கை இளக்கா தீர் .வெற்றி கிடைக்கும் .வாழ் தாதுக்கள்.

    ReplyDelete
  3. All the best your bright future friend

    ReplyDelete
  4. போராடுவோம்
    வெற்றி மிக அருகில் உள்ளது
    மறுநியமனம் நிச்சயம் நடக்கும் இது இறைவன் தீர்ப்பு

    ReplyDelete
  5. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ரத்துசெய் ரத்துசெய் வெயிட்டேஜ் முறையை அறவே. ரத்துசெய்தால் நன்றாக. இருக்கும் .அமல்படுத்து அமல்படுத்து தகுதிதேர்வில் ( TET. ) வெற்றிபெற்றவர்களை வேலைவாய்ப்பு பதிவுமூப்பின்படி வேலைவழங்கினால் அனைவரும் பயன்பெறுவர்

    ReplyDelete
  7. maru niyamanam poota athala velai ponavan oru kathai solluvan athukum kesa poduvingala? satharana clerk postuku varusakanaka paduchi vaya moodikitu velaya vangikittu pooranga .pala pillainga ethirkalatha uruvakara teacher velaiku ennala padika mudiyala vela kodu vayasaiduchi vela kodunu kekaringale niyayamaaaaa

    ReplyDelete
  8. நியாயமானதே , மூத்தவர்களுக்கு முன்னுரிமை என்ன. தவறு

    ReplyDelete
  9. கருணாகரன் சார் நீங்களும் 15. ,,20. வருசம் காத்திருங்க. அப்பதெரியும் வலி.

    ReplyDelete
  10. muthavagaluku munnurimai, kathirupavagluku palan ok naan taluk officela velai seyaren en velaku naan padithavai eralam atharkum naan seiyum velaikum sampanthame ellai appadieruka aasiriyar paniyai vendum neengal eppadi paditiruka vendum

    ReplyDelete
  11. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வெயிட்டேஜ் முறையை முற்றிலுமாக. ஒழிக்கவேண்டும்

    ReplyDelete
  13. சமூக நீதி காக்க. வேண்டும்

    ReplyDelete
  14. கடவுள் (அம்மா)காப்பாற்றுவார்

    ReplyDelete
  15. வெற்றிபெற்றவர்களில் வயதைப் பார்க்கவும்., முன்னுரிமை தரவும்

    ReplyDelete
  16. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive