ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களின் பணி அனுபவத்தை மட்டுமே
ஆசிரியர் நியமனத்துக்கான தகுதியாக கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால், தகுதிகாண் மதிப்பெண் முறையில் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்.
படிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்
கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கை, கடந்த சில ஆண்டுகளில் பிளஸ் 2
முடிப்பவர்களுக்கே நிச்சயம் சாதமாக இருக்கும்.
அதோடு, பட்டப்படிப்பில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு மதிப்பீட்டு
முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அனைவரையும் ஒரே அளவுகோலில் கருதுவது
சரியானதாக இருக்காது.
எனவே, ஆசிரியர் நியமனத்துக்கான தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...