Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணி நியமனத்துக்கு தடை: தமிழக அரசின் ‘அப்பீல்’மனு வழக்குவிசாரணை இன்று நடைபெறுமா?

      இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு ஐகோர்ட்டில் 'அப்பீல்' செய்துள்ளது. 
 
பணி நியமனத்துக்கு தடை 
 
        இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என்றும்,தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல்செய்தனர்.மனுவை விசாரித்த தனி நீதிபதி, 'பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கானகவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமனஉத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது'என்று உத்தரவிட்டார்.

         இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்தமனுவை அவசர மனுவாக எடுத்துக்கொண்டு உடனே விசாரிக்க வேண்டும் என்றும்கேட்டுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து, மனுவை தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள்,அவ்வாறு மனுவை தாக்கல்செய்து விசாரணைக்கு பட்டியலிடும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.கோர்ட்டு பணி நேரம் முடிவடையும் நேரம் (மாலை 4.45 மணி) வரை 'அப்பீல்' மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

       திங்களன்றும் நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விடுமுறை என்பதால் நீதியரசர்கள் எஸ். மணிக்குமார் கே.எஸ் இரவி வேறு அமர்வுக்கு அடங்கிய அமர்வுக்கு முன் வழக்கு விசாரணை நடைபெறக்கூடும் எனஎதிர்பார்க்கப் படுகின்றது.
 
பின்குறிப்பு -  மதுரை நீதிமன்றத்தில் வாதாடுவதற்காக அரசு வழக்கறிஞர்கள் குழுவினர் ஞாயிறு காலையே மதுரை சென்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதே போன்று போராட்டக் காரர்கள் சார்பாக வழக்றிஞர் குழுவும் இதற்கு தயாராக தங்கள் தரப்பு வாதத்தை வைக்க தயாராக உள்ளனர் என்றும் அறியப்படுகிறது.




4 Comments:

  1. Whatever be the method TET or anything else, the TRB should first tally the vacancies subjectwise with the reservation roster to ensure that for each subject, distribution of vacancies is done correctly for each community to their entitled percentage as per constitution.
    The Honourable High Court may kindly kindly direct the TRB and Edn Department in this regard because only if this is done, it would be useful to deserving and entitled candidates. This is constitutional right and we expect the Hon HC to give utmost importance to this point. Hon Court may peruse the present list as to whether it tallies the representation roster as per Court Orders on the subject.

    Sundar

    ReplyDelete
  2. Sir, whatever be the method the Hon High Court is requested to ensure distribution of vacancies subjectwise to each community as per representation roster percentage as envisaged in the Constitution. The subjectwise selection and vacancy distribution may be listed in one lot for each community so that all will know the reservation done and it should tally with the total vacancies in all to ensure correctness. Otherwise it will not be useful to really deserving entitled people. Sundar

    ReplyDelete
  3. 11.50 am Madurai High Court will start the case. God only decide the judgement.

    ReplyDelete
  4. அனைத்து தமிழக Tet ஆசிரியர்களும் தமிழக அரசின் முடிவையும், நீதிமன்ற தீர்ப்பையும் -'கடைசி நம்பிக்கையாக' எதிர்பார்த்து தவமிருக்கிறார்கள்...

    எவ்வாறேனும் நீதி வெல்லட்டும்....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive