தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தல் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோவை அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில், தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்தனர்.
சங்கத்தின் மாநில தலைவர் சோலை ராஜா, மாநில அமைப்பாளர் சேசுராஜா, துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலுள்ள 16 ஆயிரத்து 549 சிறப்பு ஆசிரியர்களும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், உள்ளாட்சி இடைத்தேர்தலில் களப்பணியில் ஈடுபடுவதாகவும் உறுதிமொழி கடிதத்தை, அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் ஒப்படைத்தனர்.
அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''பாட ஆசிரியர்கள் மட்டுமின்றி, சிறப்பு ஆசிரியர்களையும் நியமித்து, அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் பணியாற்ற ஒவ்வொரு அமைப்பினரும் ஆர்வத்துடன் வருகின்றனர். சிறப்பாசிரியர்கள் ஓட்டுகள் மட்டுமின்றி, குடும்பத்தினர், உறவினர் ஓட்டுகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...