வெயிட்டேஜ் மதிப்பெண் முறை என்பது அரசு எடுத்துள்ள கொள்கை முடிவு. அதில் கோர்ட் தலையிட முடியாது. எனவே, பட்டதாரி
ஆசிரியர்களின் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று தங்கள் உத்தரவில்
கூறியுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய
கோரி, பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தனர். இந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: தகுதி தேர்வில் வெற்றி
பெற்றவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண் வைத்துதான் ஆசிரியர் பணி வழங்க
வேண்டும். வெயிட்டேஜ் என்று பிளஸ் 2, பிஎட், மற்றும் இதர பட்டப்படிப்பு
ஆகியவற்றை கணக்கிட்டு தனியாக மார்க் வழங்கி ஆசிரியர்களை தேர்வு செய்வது
தவறானது. இதனால் புதியதாக பிளஸ் 2 படித்தவர்கள் அதிகமாக வெயிட்டேஜ் மார்க்
பெற்றுவிடுவார்கள். பழைய பாடதிட்டத்தின்படி பிளஸ் 2 படித்தவர்கள் குறைவான
மார்க் பெற்று இருப்பார்கள்.
இது பாரபட்சமானது. வெயிட்டேஜ் மார்க்கில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது.
அவர்களுக்கு விருப்பப்பட்டவர்களுக்கு அதிகமாக மார்க் வழங்கிவிடுவார்கள்.
எனவே வெயிட்டேஜ் மார்க் முறையை ரத்து செய்ய வேண்டும். இதற்கு தடை விதிக்க
வேண்டும்.
இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம்
விசாரித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அரசு சார்பாக
சிறப்பு பிளீடர் கிருஷ்ணகுமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், அரசு
கொள்கை முடிவு எடுத்துள்ளது. உயர் நீதிமன்றம் உத்தரவின்படி தான், அதாவது
நீதிபதி நாகமுத்து தீர்ப்பின் அடிப்படையில் தான் வெயிட்டேஜ் மார்க்
கொடுக்கப்பட்டது. இதை ரத்து செய்யக்கூடாது என்று கூறியிருந்தார். இந்த
வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு
விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பாக வக்கீல்கள் சங்கரன்,
ஆனந்தி ஆகியோர் உள்பட பலர் ஆஜராகி வாதாடினார்கள். பின்னர் அரசு தரப்பில்
அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி, ஆசிரியர் பணிக்கு கல்வி, திறமை மற்றும்
அறிவியல் ரீதியான தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வுகள்
நடத்தப்படுகிறது. இந்த முறையை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின்
அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்த முறையை பின்பற்றுவதில் எந்த
விதிமுறைகளும் மீறப்படவில்லை.
இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. இதில் அரசு கொள்கை முடிவு
எடுத்துள்ளது என்றார். இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள் நேற்று
அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தகுதியான ஆசிரியர்களை தேர்வு
செய்வதற்கே இது போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படுகின் றன என்று அரசு
சார்பில் கூறப்பட்டது சரியானது தான். மனுதாரர் சார்பில் 2000ம் ஆண்டுக்கு
முன்புள்ள தேர்வு முறைக்கும், அதன்பின்புள்ள தேர்வு முறைக்கும் பெரும்
வித்தியாசம் உள்ளது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் மதிப்பெண் வழங்குவதில்
பெரும் வித்தியாசம் உள்ளது. எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும்
என்று வாதிடப்பட்டது. இதை ஏற்க முடியாது. வெயிட்டேஜ் முறையில் அரசு கொள்கை
முடிவு எடுத்துள்ளது. இதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதில் நாங்கள்
தலையிட விரும்பவில்லை. மனுதாரர்கள் அரசு மீது கூறிய குற்றச் சாட்டுக்கு
எந்த ஆதாரமும் இல்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பு
கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...