Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்ச்சி விகிதத்தைக் காட்டி முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி: ஆசிரியர் சங்கம் கண்டனம்

           சென்ற கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி காட்டாத பாடங்களின் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏற்பாடு செய்துள்ள பயிற்சிக்கு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

        இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ.வீரபாண்டியராஜ், செயலாளர் கே.எம்.மூர்த்தி, பொருளாளர் காளிதாஸ், தனியார் பள்ளிச் சங்கச் செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் கூட்டாக சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சென்ற கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டாத பாடங்களின் முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி மற்றும் விசாரணை என்ற நடவடிக்கையை எடுத்துள்ளார்.

         மாணவர்களின் தேர்ச்சி என்பது ஆசிரியர், தலைமையாசிரியர் ஆகியோரை மட்டும் சார்ந்தது அல்ல. மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம். பள்ளிக்கு தவறாமல் வந்த அத்தனை மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், பள்ளிக்கு வராமல், எப்போதாவது பள்ளிக்கு வரும் மாணவர்கள்தான் தேர்வில் தோல்வியடைந்துள்ளார்கள். குறிப்பாக அரசுப் பள்ளியில் எந்தப் பாடம் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லையோ, அந்தப் பாடத்தில் மட்டுமே அதிகமான மாணவர்கள் தோல்வியுற்றுள்ளார்கள்.

            சென்ற கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெறாமல் 99.75 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெறச் செய்த ஆசிரியர்களும் கண்டிப்பாக பயிற்சிக்கு வந்து விளக்கக் கடிதம் கொடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையையும், மனச் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. 250 மாணவரில் ஒருவர் தேர்ச்சி பெறாவிட்டாலும் அந்தப் பாடத்தின் ஆசிரியரின் பணி சரியில்லை எனக் கூறுவது சரியில்லை.

           100 சதவீதம் தேர்ச்சி காட்டாதவர்களுக்கு பயிற்சி என்பதைவிட, தேர்ச்சி விகிதம் 60 சதவீதத்திற்கு குறைவான பாட ஆசிரிர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் முதுகலை ஆசிரியர்களை ஊக்கப்படுத்தாமல், மன உளச்சலுக்குள்ளாக்குவது போல பயிற்சி, விசாரணை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்படுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

          எனவே இந்தப் பயிற்சியை ரத்து செய்துவிட்டு, 60 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி விகிதம் காட்டியுள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.




2 Comments:

  1. மாணவர்களின் தேர்சிக்குமாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம். பள்ளிக்கு வராமல் தேர்வுக்கு வரும் மாணவர்கள் எப்படி தேர்வில் வெற்றி பெற இயலும்?நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் மாணவர்களின் தோல்விக்கு ஆசிரியர்கள் காரனமல்ல,மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதைச்சுட்டிக்காட்டியுள்ளது.9ஆம் வகுப்பு வரை பள்ளிகே வராதமாணவர்களை அவர்களின் வீட்டிற்கே சென்று அழைத்து வந்து தேர்வு எழுத்ச்செய்து தேர்ச்சி வழங்கப்படுகிறது. இம்மாதிரியான மாணவர்களை 10ஆம் வகுப்பிலும்,12ஆம் வகுப்பிலும் எவ்வாறு தேர்ச்சியடைவார்கள் என்பதனை பள்ளிக்கல்விதுறை சிந்திக்கவேண்டும்.முதலில் மாணவர்களுக்கு பயிற்சி வழ்ங்குங்கள்.வகுப்புகளுக்கு வராத மாணவர்களை நீக்குங்கள் இலவசதேர்ச்சி வழங்காதீர்கள்.

    ReplyDelete
  2. காலாண்டு ,அரையாண்டு விடுமுறைகளில் சிறப்பு வகுப்புகள் என்றபெயரில் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்ப்டுகின்றார்கள்.விழாக்களில் கலந்து கொள்வது ,உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது என்பது 10 ஆம் வகுப்பு,+2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கிடையாது.பள்ளிகளில்9ஆம்வகுப்பு மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு பாடங்க்ளும்,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு+2 பாடங்களும் நடத்தப்படுகின்றன.மாணவர்கள் கசக்கிப்பிழியப்படுகிண்றார்கள். தனியார் பள்ளிகளில் மட்டுமல்லாமல் தற்பொழுது அரசுப்பள்ளிகளிலும் இத்தகையப்போக்கு தலைத்தூக்க ஆரம்பித்துள்து.குறிப்பாக நாமக்கல், தர்மபுரி,பெரம்பலூர்,மாவட்டங்களில்.தலைமை ஆசிரியர்கள்,சிறப்பு வகுப்புகளுக்கு இப்பிபோதே அட்டவணை தயார் செய்துள்ளார்கள். வருகை தராத மாணவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றார்கள்.சிறப்பு வகுப்புகள் நடத்துவது தொடர்பாக நீதி மன்றத்தில் வழ்க்கு நிலுவையில் உள்ளது.நீதி மன்றம் இடைக்கால உத்தரவு வழங்கி இத்தகையசிறப்பு வகுப்புகளை தடை செய்யவேண்டும்.அல்லது பள்ளிக்கல்வித்துறை உ த்தரவிடவேண்டும்.சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடும் தலைமைஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகமல் தடுக்கவேண்டும்.மாணவர்களின் மன அழுத்தமே பிற்காலங்களில் வன்முறையாக மாறுகிறது. மாணவர்களின் மோதல்கழுக்கும் இதுவே அடிப்படைக்காரனமாக அமைந்து விடுகிறது. நீதி போதனை வகுப்புகள் தொடங்கப்படவேண்டியது அவசியம்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive