Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா? தமிழ் முரசு

           தமிழக அரசு துறைகளில் அதிகமான குழப்பங்கள் காணப்படுவதும், அதிகமான வழக்குகளை சந்திப்பதும் பள்ளி கல்வி துறையாகவே இருக்கும். சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது இருந்த அதே அதிகாரியே, ஆட்சி மாறியதும் அந்த கல்வி திட்டம் சரியல்ல என்று உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்தார்.  
 
          அதுதான் முதல் கோணல். அதன்பின், ஆசிரியர் நியமனம் உள்பட பல்வேறு விஷயங்களிலும் குழப்பங்கள் நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு கடந்த ஆண்டில் தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களையும் சேர்த்து புதிதாக வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இப்போதைய காலகட்டத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு கூட, இன்டர்நெட் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்து வசதிகளும் கிடைத்து விடுகின்றன. அதனால், கிராமப்புற மாணவர்களும் பொது தேர்வுகளில் சர்வசாதாரணமாக 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்று விடுகிறார்கள். ஆனால், அந்த காலத்தில் அதிகமாக போராடி 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதனடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுத்து வேலை நியமனம் செய்வது அவர்களை மிகவும் பாதிக்கிறது. இது ஒரு வகையில் அவர்களை நிராகரிப்பதற்கு சமமாகிறது. இது நியாயமற்றது. இதனால், பாதிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன் தினம் கவன ஈர்ப்பு பேரணி நடத்திய போது, கடும் மன உளைச்சலில் இருந்த 4 பேர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதன்பின்பும், கல்வி துறையினர் இந்த விஷயத்தை பற்றி கவலைப்படாமல் அமைதி காப்பது சரியாக இருக்காது. மாணவர்களை நல்வழிப்படுத்தி வருங்கால சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். அவர்களுக்கு எந்த ஒரு அரசும் எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை ஆய்வு செய்ய அரசு முன் வர வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, போராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.




15 Comments:

  1. Thank you tamilmurasu, kalvi iyal aringnargalin mounam yeno? neegalum 10-20 varudam munbu padithavargal thane, ammavuku payapadugireergala......

    ReplyDelete
    Replies
    1. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு
      1, சட்டசபை மீட்டிங்ல English medium school la மட்டுமே 1,30,000 மாணவர்கள் சேர்க்கை னு சொன்னாங்கஂ teachers association மூலம் conduct பன்றாங்கஂ30:1 ratio follow பன்ன எவ்ளவு வேகன்சி create பண்லாம்,

      sep 5 நமக்கு சாதகமான அறிவிப்பு அம்மா சொல்லுவார் என நம்புகிறோம் . எனவே அனைவரும் சென்னை வாருங்கள் .ஆதரவு தாருங்கள்.ஓர் நாள் சிரமம் பார்க்காமல் விரைந்து வாருங்கள். கண்டிப்பாக vacancy increase செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைப்போம். நிச்சயம் நம்மை கை விடமாட்டார்.

      குறிப்பு: இங்கு வரும் அனைவருக்கும் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
      9543391234
      09663091690

      Delete
  2. Itharku ena than theervu....I think result get positive or negative but govt get only negative name before teachers...intha pavam lam suma vidathu. "GOD"

    ReplyDelete
  3. மாண்புமிகு முதல்வர் அம்மா,
    TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது.
    BA, BEd,DTEd, இது எல்லாம் எப்படி ஆசிரியர் பதவிக்கு அடிப்படை தகுதியோ, அதே போல் இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதும் ஒரு தகுதி அவ்வளவே.
    ஆனால் TET மதிப்பெண்ணோ, Degree மதிப்பெண்ணோ, BEd மதிப்பெண்ணோ, இவை அனைத்தின் மதிப்பெண்ணோ கொண்டு தேர்வு செய்வது தேவையற்றது மற்றும்அல்லாமல் சமூக நீதிக்கு எதிரானதும் கூட.
    +2 முதல் ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே TET தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார் எனவே, இந்த TET தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற அனைவருமே ஆசிரியர் பதவி பெற தகுதி,திறமை கொண்டவர்கள் ஆவர்.
    selecetion என்பது, இத்தனை பிரச்சினைக்குரிய விசயம் அல்ல. மிக சிறந்த தீர்வு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள,
    TET பாஸ் செய்த நபர்களை அவர்களின் Employment Registration Seniiority படி Selection செய்து பணி வழங்கினால் அனைவரும் சம வாய்ப்பு பெற முடியும்.
    For Example: TET என்ற தேர்வு நடைமுறை படுத்தும் முன்பு வரை DTEd, BEd முடித்த ஆசிரியர்கள் Employment Exchange இன் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றனர். இது எந்த வகையான பிரச்சினையையும் தராமல், தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போதும், employment Exchange இல் பதிவு செய்தவர்களில் TET PASS செய்து, அதை பதிவு செய்த நபர்களில் இருந்து மட்டுமே வாய்ப்பு என்பது, தரமான, பல வருடம் காத்திருந்த முதல் ஆசிரியர்க்கு பணி வழங்குவது தான் நீதி, நியாயம், தர்மம்.
    இதில் தகுதி குறைந்த ஆசிரியர் என்ற பேச்சும் இல்லை, தனக்கு நீதி இல்லை என்றும் யாரும் கூற வாய்ப்பும் இல்லை.
    சமீபத்தில் படிப்பு முடித்து,TET பாஸ் செய்த நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள், இப்போது முடித்து உடனே பணி எதிர்பார்க்கும் நம்மை போலவே தான் கடந்த 10-15-20 ஆண்டுகள் காத்திருக்கும் (Rs.2000,3000 என சொற்ப சம்பளத்தில் பல வருடம் உழைத்து,) தன் 35-40-45 வயது வரை govt ஆசிரியர் பணி என்பது வெறும் கனவாகி விடுமோ என கண் கலங்கும் மூத்த ஆசிரியர்களுக்கு துரோகம் அல்ல ஒரு தாய் போல நன்மை மட்டுமே செய்வேன் என நீங்கள் சிறப்பான இந்த முடிவை அறிவுக்கும் நாள் உண்மையான ஆசிரியர்களின் பொன் நாள்.
    மேலும் ஒவ்வொரு 6 மாதம் அல்லது வருடத்திருக்கு ஒரு முறை TET தேர்வு நடத்தும் போது, தற்போது Seniority இருந்தும், TET தகுதி இல்லாத மூத்த ஆசிரியர்கள் வாய்ப்பை பெற முடியும். தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என உறுதி கூற இயலாது.
    தற்போது உள்ள weightage system Degree, DTEd, BEd தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அதிகம் தர, பெற பெருமளவு லஞ்சம் தர வழி செய்யும், மேலும் கல்வியின் தரம் என்பது தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கிடைக்கும் வரம் என பெற்றோர் மற்றோர் நம்பும் வகை செய்யும்.

    ReplyDelete
    Replies
    1. Sir, your views may be convincing. But in the last two are three sessions, the TRB has deviated its erstwhile procedure and started selecting from TET exam qualified highscored people in 2011,2012, 2013 For this year also, TRB has not conducted any separate recruitment Exam instead they released select list from among TET people only. So based on the present procedure, many candidates including freshers are expecting appointment. You know, being the TET papers tough, most of the candidates had quit their jobs 1 1/2 years ago for preparation by self or coaching. Then after TET Exam in August 2013, they are waiting till now for appointment. They are jobless. The fact is that private schools do not engage them on the plea that they might leave the job anytime if getting govt appt. The position is very bad for lady candidates especially unmarried ; many schools demand bond for at least one or two academic year ; they unofficially place condition of non marriage or non shifting for at least two academic years. So this is the ground reality. Many are remaining jobless with B.Ed, M.Ed, DTEd for 2 years. If any change is done, they may have to wait for another several years. Hence, if any change as you suggest is to be done on emp seniority, it can be applied only for 2015 and beyond vacancies and the current system is to continue in the interest of deserving candidates. Sundarsuresh.

      Delete
    2. Your view is correct sir
      That is the finel solution also
      TET PASS AND SENIORITY WISE JOB IS CORRECT JUDGEMEMT
      Novother way to choose

      Delete
    3. THANK YOU SIR ! U' R JUDGEMENT IS VERY CORRECT.
      Employment Registration Seniority,AND TET pass.

      Delete
  4. நன்றி. manjunath eswaran... இந்த போராட்டத்திற்கு அனைத்து ஆசிரியர் சங்கங்களும். ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன் .....

    ReplyDelete
  5. முக்கிய செய்தி:

    THIS IS FOR FINAL CHANCE TO ALL TEACHERS,

    ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் முறை மதிப்பெண் அடிப்படையிலான பணி நியமனத்தை ரத்து செய்யக் கோரி செப்டம்பர் 1-ம் தேதி மாநிலம் தழுவிய பேரணி நடத்தது.
    இதை தொடர்ந்து செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் அனைத்து பட்டதாரி மற்றும் இடைநிலை பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் இணைந்து சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை சென்னை DPI (அரசு தேர்வுகள் இயக்ககம்) அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக அறிவித்துல்லனர்.
    வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.

    அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

    வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

    வருகின்ற அனைவருக்கும் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    வெற்றி வெற்றி வெற்றி
    CONTACT NO:9788012814(R.DEEPAN)



    ReplyDelete
  6. டியிடி+சினியாரிட்டி சரியான முடிவு.

    ReplyDelete
  7. பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி:
    புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சியளிக்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. புதிய பட்டதாரி ஆசிரியர்கள், கவுன்சிலிங் முடிந்து, நியமன உத்தரவு பெற்றதும், உரிய அரசு பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு, இடைநிலை கல்வித்திட்டம் மூலம், புத்தாக்க பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, பாடவாரியாக மூத்த ஆசிரியர்களைக் கொண்டு, பயிற்சியளிக்கப்படும். இதில், மாணவர்களுடனான உறவு, எளிதில் புரியம்படி வகுப்பில் பாடம் நடத்துவது போன்றவை கற்றுத்தரப்படும்' என்றார்.

    ReplyDelete
  8. பட்டதாரி ஆசிரியர்கள் கைது

    -புதிய தலைமுறை

    ReplyDelete
  9. நாளை ஆசிரியர் தினம். ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!அம்மா போராடும் ஆசிரியர்களுக்கு நல்லசெய்தியைத்தாருங்கள்!

    ReplyDelete
  10. இந்த அனைத்து பிரச்சனைக்கும் காரணம் சபிதா அவர்களின் தன்னிச்சையான போக்கு

    ReplyDelete
  11. wish u happy teachers day to all the teachers.

    All the best result to the teachers day

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive