ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த கூடாது என்பது என் கருத்து இல்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளில்
குறிப்பிடப்பட்டுள்ளது," என தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன்
தெரிவித்தார்.மதுரையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
தொடக்க
கல்வித் துறையில் குழுக்கள் அமைத்து மாணவர்களின் கல்வித் தரம் குறித்து
ஆய்வு செய்யப்பட்டது. இதில், வாசிப்பு மற்றும் எழுதும் திறன் ஆய்விற்கு
எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேலும் சிறப்பாக
ஆசிரியர்கள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டது.தொடக்க கல்வியில் மாணவர்கள் கல்வித் திறன் குறைந்து
வருகிறது என்ற தகவல் தவறானது. அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில்
நடத்தப்பட்ட ' மாணவர் அடைவு திறன்' ஆய்வில்,
குறிப்பிட்ட வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்
ரூம்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நன்னெறி கல்வி
போதிக்கப்படுகிறது. இதை பின்பற்றாத பள்ளிகளை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்
கண்காணிப்பார்கள்.ஆசிரியர்கள், கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள்,
போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவை நான் பிறப்பிக்கவில்லை. அது
ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது தான்,
என்றார்.மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, தொடக்க கல்வி
அலுவலர் சுப்பிரமணியன் உடன் இருந்தனர்.
பின்னணி என்ன?
கடந்த சில வாரங்களுக்கு முன் தொடக்க கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட
சுற்றறிக்கையில், 'கல்வி அலுவலங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட
போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது,' என உத்தரவிடப்பட்டது.இதற்கு,
ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. செப்.,10ல் மாநில அளவில்,
உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி
சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இந்நிலையில், சுற்றறிக்கை குறித்து
இளங்கோவன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎப்படிப்பா...ஆஆஆ,, எப்படி? உஸ்ஸ்....இப்படி எல்லாம் வெளியில்
Deleteசொல்லக் கூடாது.