நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற பட்டதாரி
ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வின் போது, பல பணியிடங்கள் ஆன்லைனில்
காட்டப்படாமல் மறைக்கப்பட்டன.
இதனால் உள்மாவட்டத்தில் பணியிடம் கிடைக்காமல்
வெளி மாவட்டங்களுக்கு ஆசிரியர்கள் சென்றனர். நேற்று முன்தினம்
கலந்தாய்வில் கலந்து கொண்டு, பள்ளிகளை தேர்வு செய்த 444 பட்டதாரி
ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. மறைக்கப்பட்ட
பள்ளிகளுக்கு, சென்னை பள்ளி கல்வித்துறை மூலம் 50 செல்வாக்கு பெற்ற
ஆசிரியர்கள் நேரடியாக பணி நியமனம் பெற்றனர். நேற்று காலை சென்னையில்
இருந்து தனி நபர்கள் மூலம் நாமக் கல்லுக்கு நியமன ஆணைகள் கொண்டு வரப்பட்டு,
சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.
அந்த உத்தரவுடன் குறிப்பிட்ட பள்ளிகளில் பணியில் சேர சென்ற ஆசிரியர்களுக்கு
அதிர்ச்சி காத்திருந்தது. 2 பணியிடம் காலியாக உள்ள பள்ளிக்கு, 3
ஆசிரியர்கள் ஒரே உத்தரவுடன் சென்றனர். ஒரு சில ஆசிரியர்களுக்கு
அளிக்கப்பட்ட உத்தரவில், பள்ளியின் பெயர் மாறியிருந்தது. காலிப்பணியிடமே
இல்லாத பள்ளிக்கும், புதிய ஆசிரியர்களுக்கு பணிநியமன உத்தரவு வந்திருந்தது.
இதனால், அவர்களை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர்த்து கொள்ள
அனுமதி மறுத்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த ஆசிரியர்கள், நேற்று மாலை
நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாசை சந்தித்தனர். பின்னர்
அந்த ஆசிரியர்களுக்கு வேறு பள்ளிகள் மாற்றி கொடுக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...