பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின்
பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு
எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக
வந்துவிடும். National Vaccine Remainder என்று இதற்குப் பெயர். இது ஓர்
இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்?
Immunize<குழந்தையின் பெயர்><பிறந்த
தேதி> என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.
உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.
உடனே ‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று முதல் கட்டத் தகவல்
வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில்
போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத்
தகவல்கள் வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில்
மூன்று முறை நினைவூட்டுவார்கள்.
மிகவும் உபயோகமான தகவல் எப்போதும் போல ... நன்றி
ReplyDeletePADASALAIKU NANRI.MIGAVUM UBAYOGAMANA THAGAVAL.
ReplyDelete