வாசிப்பு
என்பது ஒரு தவம். யோகாவில்
கிடைக்கும் ஒருநிலைப்பாடு, வாசிப்பில் கிடைக்கும். நல்ல புத்தகங்கள், உடலுக்குள்
நிகழ்த்தும் ரசாயன மாற்றத்தையும், கற்பனைகளையும்,
செயல்வழி தாக்கத்தையும், வேறு எதனாலும் நிகழ்த்த
முடியாது. கடந்த
1950களில், நம் நாட்டில், எழுத்தறிவு
பெற்றோரை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
60 - 70களில், படித்து பட்டம் பெற்றோரை,
மரியாதைக்குரியோராக சமூகம் எண்ணியது. 80களில்,
கல்வியாளர்களும் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்தது. 90களுக்கு பின், கல்வி,
சம்பாத்தியத்திற்கு மட்டுமே என்றானது.
அதன்பின்,
பாட புத்தகங்களை மட்டும் வாசிக்க வைத்து,
பணம் சம்பாதிக்க மட்டுமே கற்றுக்கொடுத்து, வாழ்க்கையை
ரசிக்க தெரியாதோராக, மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க தெரியாதோராக, நடைமுறை
அறிவு அற்றோராக, நாம் ஒரு நவீன
தலைமுறையை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.
அவர்கள், எப்போதும் மனஅழுத்தம் உள்ளோராகவே இருக்கின்றனர். அவர்களை வாசிப்புக்குள் இழுத்துவிட்டால், வன்முறைகளும், குடும்பநல வழக்குகளும் குறையும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...