பல பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை தனியார்
பள்ளிகளில் சேர்க்க விரும்பினாலும், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு
கடும் போட்டியைத் தருபவையாக உள்ளன. அரசுப் பள்ளிகள், தங்களின் தரத்தை
சிறிதுசிறிதாக உயர்த்தி வருகின்றன என்று கல்வியாளர்கள் ஒப்புக்
கொள்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 80% அரசுப் பள்ளிகள்,
தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், அத்தியாவசிய நடைமுறைகளைப்
பின்பற்றுகின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
மத்திய மனிதவள அமைச்சகத்தின் கணக்குப்படி,
மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களால், நாட்டில் மொத்தம் 2
லட்சம் பள்ளிகள் வரை நடத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...