பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வுச்
செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு புதன்கிழமை (செப்.3)
தொடங்குகிறது என்று பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான
http://trb.tn.nic.in/ என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 10,444 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. தங்களது மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 3-ஆம் தேதியும், வேறு மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 4, 5-ஆம் தேதிகளிலும் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
இதில் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லாததால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 4, 5-ஆம் தேதிகளில் நடத்தப்படும் கலந்தாய்வில் மட்டும் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொள்ளலாம்.
கலந்தாய்வில் கலந்து கொள்வோர் தங்களது கல்விச் சான்றுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றைத் தவறாமல் கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

what is தெரிவுக் கடிதம்? where can we download it?
ReplyDeleteplease explain ASAP.
http://111.118.182.232/Paper2_08082014/
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete