தகுதி காண் மதிப்பெண் முறைக்கு எதிராக போராடி
வரும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் என்று தேமுதிக தலைவர்
விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில், தமிழகத்தில் பட்டதாரி மற்றும்இடைநிலை ஆசிரியர்கள்,
ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி என தொடர்ந்து போராட்டம்
நடத்திவருகின்றனர்.
பேரணியில் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் தமிழக அரசோ இதை கண்டும், காணாமல் இருந்து கொண்டுள்ளது. இந்த பிரச்சனைக்கும், தனக்கும் துளிகூட சம்பந்தம் இல்லாதது போலவும், அருகில் உள்ள மாநிலத்தில் இப்பிரச்சனை நடப்பதுபோலவும் தமிழக அரசு நடந்து கொள்கிறது.
தற்போது போராட்டம் நடத்திவரும் அனைவருமே சுமார்
30லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள். இவர்கள் கடந்த பதினைந்து, இருபது
ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்து சுமார் 600 முதல்
750 மதிப்பெண்கள் வரை பெற்று, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும்,
கல்லூரிகளிலும் பயிற்சி பெற்று அதற்கான தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளனர்.
ஆனால் தமிழகஅரசு தகுதிகாண் மதிப்பெண்அடிப்படையில் தேர்வு செய்யும் முறையை
கொண்டுவந்துள்ளதால், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டோர்கள்,
ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் ஆகிய குடும்பங்களில் உள்ளவர்களால்
கண்டிப்பாக இந்த தகுதிகாண் மதிப்பெண்ணை பெறமுடியாது. தற்போதுள்ள முறைப்படி
இவர்களுக்கு வாய்ப்பும் கிடைக்காது. பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள்,
நகர்புறத்தை சார்ந்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்ஆகியோருக்கு
மட்டுமே இந்த தகுதிகாண் மதிப்பெண் முறை அதிகம் பயன் அளிக்கும்.
எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் உரிய கவனம்
செலுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில்பெற்ற மதிப்பெண்கள்அடிப்படையில்பணி
நியமனம் செய்ய வேண்டும். தகுதிகாண் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பணி
நியமனம் செய்வதை முழுமையாக ரத்து செய்யவேண்டும். பட்டதாரி மற்றும் இடைநிலை
ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை
நிறுத்தி வைக்க வேண்டும். சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் காலி
பணியிடங்களை தற்போது தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டே நிரப்ப
வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா முழுவதும் ஆசிரியர்களை போற்றும் விதமாக
நாளை மறுதினம் (05.09.2014)ஆசிரியர்கள் உண்மையான மகிழ்ச்சியுடன் ஆசிரியர்
தினத்தை கொண்டாடும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரி
மற்றும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு அழைத்து பேசி இப்பிரச்சனைக்கு
சுமூக தீர்வுகாண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
yes it is correct way
ReplyDeleteசபாஷ்!
ReplyDeleteவெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...
ReplyDeleteவாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..
திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன், கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்
நன்றி..நன்றி..நன்றி..!
FLASH NEWS
ReplyDelete................................
இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
9.00 PM to 10.00 PM
மற்றும்
இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
10.00 PM to 10.30 PM
கானத்தவறாதீர்கள்.
நன்றி..நன்றி..நன்றி..!
ReplyDelete