ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக
ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்த
நிலையில், தான் உயிராக நினைத்த புத்தகப் பையை தேசிய மீட்புப் படையின்
உதவியுடன் மீட்டுள்ளான் பத்து வயது சிறுவன்.
ராஜ்பாக் பகுதியில் வெள்ளம் மூழ்கியதால்,
தங்களது வீட்டின் கூரையில் அமர்ந்திருந்த 5ம் வகுப்பு சிறுவன் தக்கீர்
அகமது மற்றும் அவரது குடும்பத்தார் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டபோது, உடமைகள்
அனைத்தையும் வீட்டின் கூரைப் பகுதியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டனர்.
பாதுகாப்பான இடத்துக்கு வந்த பிறகு, தக்கீர்
தனது புத்தகப் பையை கேட்டு அழுதுள்ளான். அவனிடம் எவ்வளவு எடுத்துச்
சொல்லியும் அவனால் சமாதானம் ஆக முடியவில்லை.
எனவே, அவனது தந்தை, வீடு இருக்கும் பகுதிக்கு
அவனை அழைத்துச் சென்று வெள்ள நிலைமையை காட்டி அவனுக்கு விளக்க முயன்றார்.
வெள்ளம் தங்களது வீடுகளை மூழ்கடித்திருப்பதை காட்டி மகனை சமாதானம்
செய்தார். ஆனால், சிறுவனோ, அப்பகுதியில் படகில் சென்று மீட்புப் பணிகளில்
ஈடுபட்டு வந்த மீட்புப் படையினரிடம் சென்று தனது கவலையை தெரிவித்தான்.
உடனடியாக அவனுக்கு உதவ மீட்புக் குழுவினர் முன் வந்தனர்.
சிறுவனின் வீட்டுக்குச் சென்று, கூரையில் இருந்த புத்தகப் பையை எடுத்து சிறுவனிடம் கொடுத்து அவனது மகிழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.
எத்தனையோ சோகங்களை சுமந்து கொண்டிருக்கும்
காஷ்மீர் வெள்ளத்தில் இதுபோன்ற சின்ன சின்ன சந்தோஷங்களை பார்க்கும்
வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மீட்புக் குழுவினர் பெருமிதம் அடைந்தனர்.
அதிர்ச்சி தகவல் : ஆசிரியர் வேலை வாங்கி தாரேன் என கூறிய இடைத்தரகர்கள் ரகசியமாக பணத்தை ஒப்படைக்கிறார்களா??? - நீதி விசாரணை தேவை என புலம்பும் ஆசிரியர்கள் கண்டுகொள்ளுமா தமிழக அரசு???
ReplyDeleteSource From : The Hindu Covai Edition