ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முரண்பாடுகள் நிறைந்துள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறையை ரத்து செய்யவேண்டும், மாநில
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலேயே ஆசிரியர்களை பணிநியமனம்
செய்யவேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை பணியில் நியமிக்கும் முறை ஆரம்ப
காலத்தில் அந்தந்த மாவட்டங்களிலுள்ள வேலைவாய்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு
அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த முறையில், சில மாவட்டங்களில் பதிவு
மூப்பு பட்டியலில் யாரும் இல்லாத நிலையும், சில மாவட்டங்களில் பதிவு
செய்தவர்களின் எண்ணிக் கை மிக அதிகமாகவும் இருந்தது.
இதனால், ஆசிரியர்களுக்கு சமமான விகிதத்தில் பணி கிடைப்பதில் சிக்கல்
எழுந்தது. இதனையடுத்து கடந்த திமுக ஆட்சியில் மாநில பதிவு மூப்பு
அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதன்
மூலம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் இடைத்தரகர்களின் எவ்விதமான
இடையூறுகளும் இன்றி சமவாய்ப்பு முறை யில் பணி வாய்ப்பினை பெற்றனர்.
மத்திய அரசின் செக ண்டரி கல்வி போர்டானது (சிபிஎஸ்இ) சில மாநிலங்களில்
ஆசிரியர் பயிற்சி பெறாதவர்களையும் ஆசிரியர்களாக நியமித்ததால் அதனை
தடுக்கும் பொருட்டு கடந்த 2011ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு முறையை
கொண்டு வந்தது. இந்த தகுதித்தேர்வு முறையை ஒரிசா, ஆந்திரா, மத்தியபிரதேசம்
உள்ளிட்ட சில மாநிலங்கள் வேண்டாம் என்று புறக்கணித்து விட்டன.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இதனை செயல்படுத்த முன்வந்துள்ளது. இதன்
மூலம் கொண்டு வரப்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி சட்டப்படி முதல்
வகுப்பில் இருந்து 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நியமனம்
செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கண்டிப்பாக
தகுதித்தேர்வை எழுதவேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம்
நடத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தமிழகத்திலுள்ளவர்கள் இடைநிலை
ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் பட்டப்படிப்பை இரண்டாண்டுகள்
படித்துவிட்டே ஆசிரியர் பணிக்கு வருகின்றனர். இதனால் இவர்களுக்கு
தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை என்பது ஆசிரியர்களின்
வாதமா கும். இருந்தாலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் தகுதி
தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற சுமார் 18 ஆயிரம் பேர் பணியில்
அமர்த்தப்பட்டுள் ளனர்.
இந்நிலையில், இந்தாண்டு புதிய நடை முறையாக ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி
பெற் றாலும், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும்
பட்டப்படிப்பு போன்றவற்றில் எடுத்த மதிப்பெண்களை கணக்கிட்டு அளிக்கப்படும்
வெயிட் டேஜ் (கருணை) மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இடைநிலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கூறியிருப்பதற்கு ஆசியர்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இருந்த கல்வி முறை மிகவும் கடினமானதாகும். அப் போது பிளஸ்
2 பொதுத்தேர்வில் 1000 மதிப்பெண் கள் எடுப்பதே பெரிய விஷயம். ஆனால்
தற்போதுள்ள காலகட்டத்தில் சாதாரணமாக 1190 வரை மதிப்பெண்கள் எடுக்கும் நிலை
உள்ளது. அன்றுள்ள கல்வி முறைக்கும், இன்று ள்ள கல்வி முறைக்கும் ஏகப்பட்ட
மாறுதல்கள் உள்ளது என்பது கல்வி அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்தும் இதற்கு
அவர்கள் மறுப்பு தெரிவிக்காததால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் மருத்துவம், பொறியியல் போன்ற பட்டப் படிப்புக்கான
நுழைவுத்தேர்வு முறைகளை எதிர்க்கும் தமிழக அரசு, ஆசிரியர்
தகுதித்தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஆசிரியர்கள் மத்தியில்
ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முரண்பாடுகள் நிறைந்துள்ள ஆசிரியர்
தகுதித்தேர்வை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும், முன்பிருந்தது போன்று மாநில
பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று
ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக் கை விடுத்துள்ளனர்.
===================
ReplyDeleteமுரண்பாடுகள் !!
====================
ஆசிரியர்கள் மத்தியில்
ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Vijay sir Monday clear ah theerpu solvangla,,,,
ReplyDelete