'காலியாக உள்ள பணியிடங்களை, அரசாணைப்படி, நிரப்ப வேண்டும்' என, அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
முதல்வர் அலுவலகத் தில் கொடுத்த, மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2012ல்,
451 உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட, 753 பணியிடங்களை நிரப்ப, அரசு அனுமதி
அளித்தது. அதன்படி, காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வுக்கான
பணிகளும் துவக்கப்பட்டன. தகுதி வாய்ந்த நபர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு
பணியும் நடந்தது. அதன்பின் அப்பணி நிறுத்தப்பட்டு விட்டது. அடுத்து,
2013ல், 116 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு ஏற்கனவே
வெளியிட்ட அரசாணையின்படி, உடனடியாக மாநில பதிவு மூப்பு பட்டியல்
வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி நியமனம் வழங்க, முதல்வர்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதுவம் படிப்பதற்கு அதிக மதிப்பெண் நிர்னயிக்கப்படுகிறது. பொறியியல் கல்விக்குஅதிக மதிப்பெண் நிர்னயிக்கப்படுகிறது உயர்ந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.TN.TET ல் மட்டும் தகுதித்தேர்வில் உயர்ந்த மதிப்பெண்களை எடுத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.எது எவ்வகையில் நியாயமாகும்?
ReplyDeleteவிளையாட்டுத் துறையில் சாதிப்போருக்கு பல லட்சங்களை கொடுத்து
ReplyDeleteகெளரவிக்கும் இந்த அரசு விளையாட்டின் அடிப்படையை கற்பிக்கும்
உடற்க்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்..