மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் "ஆசிரியர் தின" வாழ்த்துச் செய்தி
ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
"ஆசிரியராகத்
தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ
மேதை டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம்
நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின
நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"நாட்டின்
எதிர்காலம், பள்ளி வகுப்பறைகளிலேயே தீட்டப்படுகின்றது" என்று ஆசிரியப்
பணியின் உயர்வினை டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் புகழ்ந்துரைத்துள்ளார்.
ஆசிரியப் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பதல்ல -
நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்பையும், பொது அறிவையும், சமூக
சிந்தனைகளையும் மாணவச் சமுதாயத்திற்கு கற்பிப்பதாகும்.
எதிர்கால
இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை அளிப்பதுடன்,
அவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் மகத்தான பணியினை ஆற்றி வரும்
ஆசிரியர்களைப் பாராட்டி தமிழக அரசு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கி
சிறப்பித்து வருகிறது.
உங்கள்
அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு சிறந்த கல்வியை மாணவர்களுக்கு
வழங்கிடும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்களை பணி
நியமனம் செய்துள்ளது. மேலும், 14,700 ஆசிரியர் பணியிடங்கள் தற்போது
நிரப்பப்பட்டு வருகின்றன.
ஆசிரியர் பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
"எழுத்தறிவித்தவன்
இறைவன் ஆவான்" என்று ஆசிரியர் பெருமக்களை பெருமைப்படுத்தி கூறுவதற்கேற்ப,
மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கென இடை விடாது உழைத்திடும் ஆசிரியப்
பெருமக்களின் கல்விப் பணி மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென வாழ்த்தி,
அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை
உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

முன்பு பொன்னையன் போன்றவர்கள் அம்மாவுக்குத் தவறானத் தகவல்களைத் தந்தார்கள்,இந்தமுறையும் ஒரு சில அதிகாரிகள் தவறானத்த கவல்களைத்தருவதால்.அம்மா ,கவனமாக இருக்கவும்.நல்ல முடிவைத்தாருங்கள்.
ReplyDeleteமாண்புமிகு முதல்வர் அம்மா,
ReplyDeleteTET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது.
BA, BEd,DTEd, இது எல்லாம் எப்படி ஆசிரியர் பதவிக்கு அடிப்படை தகுதியோ, அதே போல் இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதும் ஒரு தகுதி அவ்வளவே.
ஆனால் TET மதிப்பெண்ணோ, Degree மதிப்பெண்ணோ, BEd மதிப்பெண்ணோ, இவை அனைத்தின் மதிப்பெண்ணோ கொண்டு தேர்வு செய்வது தேவையற்றது மற்றும்அல்லாமல் சமூக நீதிக்கு எதிரானதும் கூட.
+2 முதல் ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே TET தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார் எனவே, இந்த TET தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற அனைவருமே ஆசிரியர் பதவி பெற தகுதி,திறமை கொண்டவர்கள் ஆவர்.
selecetion என்பது, இத்தனை பிரச்சினைக்குரிய விசயம் அல்ல. மிக சிறந்த தீர்வு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள,
TET பாஸ் செய்த நபர்களை அவர்களின் Employment Registration Seniiority படி Selection செய்து பணி வழங்கினால் அனைவரும் சம வாய்ப்பு பெற முடியும்.
For Example: TET என்ற தேர்வு நடைமுறை படுத்தும் முன்பு வரை DTEd, BEd முடித்த ஆசிரியர்கள் Employment Exchange இன் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றனர். இது எந்த வகையான பிரச்சினையையும் தராமல், தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போதும், employment Exchange இல் பதிவு செய்தவர்களில் TET PASS செய்து, அதை பதிவு செய்த நபர்களில் இருந்து மட்டுமே வாய்ப்பு என்பது, தரமான, பல வருடம் காத்திருந்த முதல் ஆசிரியர்க்கு பணி வழங்குவது தான் நீதி, நியாயம், தர்மம்.
இதில் தகுதி குறைந்த ஆசிரியர் என்ற பேச்சும் இல்லை, தனக்கு நீதி இல்லை என்றும் யாரும் கூற வாய்ப்பும் இல்லை.
சமீபத்தில் படிப்பு முடித்து,TET பாஸ் செய்த நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள், இப்போது முடித்து உடனே பணி எதிர்பார்க்கும் நம்மை போலவே தான் கடந்த 10-15-20 ஆண்டுகள் காத்திருக்கும் (Rs.2000,3000 என சொற்ப சம்பளத்தில் பல வருடம் உழைத்து,) தன் 35-40-45 வயது வரை govt ஆசிரியர் பணி என்பது வெறும் கனவாகி விடுமோ என கண் கலங்கும் மூத்த ஆசிரியர்களுக்கு துரோகம் அல்ல ஒரு தாய் போல நன்மை மட்டுமே செய்வேன் என நீங்கள் சிறப்பான இந்த முடிவை அறிவுக்கும் நாள் உண்மையான ஆசிரியர்களின் பொன் நாள்.
மேலும் ஒவ்வொரு 6 மாதம் அல்லது வருடத்திருக்கு ஒரு முறை TET தேர்வு நடத்தும் போது, தற்போது Seniority இருந்தும், TET தகுதி இல்லாத மூத்த ஆசிரியர்கள் வாய்ப்பை பெற முடியும். தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என உறுதி கூற இயலாது.
தற்போது உள்ள weightage system Degree, DTEd, BEd தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அதிகம் தர, பெற பெருமளவு லஞ்சம் தர வழி செய்யும், மேலும் கல்வியின் தரம் என்பது தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கிடைக்கும் வரம் என பெற்றோர் மற்றோர் நம்பும் வகை செய்யும்.
அரசு பணி பெற துடிக்கும், பெற்று அந்த வசதிகளை அனுபவிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை ஏன் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறீர்கள்?
ஒன்றை நீங்கள் உணர வேண்டிய தருணம் இப்போது, மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 300 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. இது உங்களுக்கும், உங்கள் பணி சூழலுக்கும், எதிர் கால பணி நாடுணர்களுக்கும் மிகப் பெரிய சவால்.
இதை சொல்வதால் தங்களை குற்றம், குறை சொல்வதாக எண்ண வேண்டாம்,குறையும் மாணவர்கள் எண்ணிக்கை, பள்ளிகளை குறைக்கும், குறையும் பள்ளிகள் ஆசிரியர் பணிஇடங்களை குறைக்கும்.
தனியார் பள்ளிகள் monopoly ஆனால் கட்டணம் உயரும், எதிர் கேள்விகள் என எதும் கேட்க முடியாது (இப்பொழுதே இந்த நிலை தான், மேலும் மோசம் ஆகும்).
மக்கள் நல திட்டங்களை முன்னோடியாக செயல்படுத்தும் முதல்வர் அம்மா, படித்து பல ஆண்டுகள் காத்திருக்கும் நபர்களை ஏமாற்றம் அடையாமல் மேற்கண்ட முறையை அங்கீகரித்து ஆவண செய்ய வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.