Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

சென்னை, தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை 

          இடைநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தமிழகம் முழுவதும் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. சென்னை மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
     இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
ஆன்லைனில் கலந்தாய்வு
         ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடக்கக் கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டு தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள 1,649 இடைநிலை ஆசிரியர்களுக்கும், 167 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்கு வதற்கான கலந்தாய்வு ஆன்லை னில் நடத்தப்பட இருக்கிறது. 
 
         இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் உள்ள காலி யிடங்களுக்கு இன்றும் (திங்கள் கிழமை), வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு நாளை யும் (செவ்வாய்) கலந்தாய்வு நடைபெறும். இதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங் களுக்கு 4-ம்தேதியும் கலந்தாய்வு நடத்தப்படும்
9 மாவட்டங்களில் காலியிடம் இல்லை 
           ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இருப்பிட முகவரி உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்தில் குறிப்பிட்ட மையத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். கலந்தாய்வின்போது, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் டிஆர்பி தெரிவுக்கடிதம் ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும். 
           சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, பெரம் பலூர், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலியிடம் இல்லாத தால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் இன்று (திங்கள்கிழமை) கலந்தாய்வில் கலந்துகொள்ளாமல் வேறு மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங் களுக்காக நாளை (செவ்வாய்க் கிழமை) தங்கள் மாவட்டத்தில் நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொண்டு பணிஒதுக்கீட்டு ஆணை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 




3 Comments:

  1. Dear Padasalai admin plz reply. Yaar andha 167 BTs. Idhaipatri idhuvarai endha thagavalume illaye. Naanum BT dhan. Theni dt chemistry candidate. Plz give the information.

    ReplyDelete
  2. dear padasalai
    kindly update bt counselling news. anybody know bt district vise vacancy. im bt tamil major there is any vacancy south district??????????////

    ReplyDelete
  3. Dted-2004la muduchiruken.na adhula participate panlama?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive