ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 2174 முதுநிலை ஆசிரியர்களுக்கு மதுரை உட்பட ஏழு மாவட்டங்களில் சிறப்பு பயிற்சி அளிக்க
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.,29, 30 மற்றும் அக்.,1ல் பயிற்சிகள்
நடக்கின்றன.
மதுரை: அழகர்கோவில் மகாத்மா பள்ளியில், 178 வரலாறு ஆசிரியர்கள்.
திண்டுக்கல்: பாறைப்பட்டி ஆர்.வி. எஸ். பொறியியல் கல்லூரியில், 225 இயற்பியல் ஆசிரியர்கள்.
சேலம்: சின்னதிருப்பதி ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 219 வேதியியல் ஆசிரியர்கள்.
நாமக்கல்: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 317
ஆங்கிலம் மற்றும் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் 191 தாவரவியல் ஆசிரியர்கள்.
விழுப்புரம்: சின்னசேலம் சிறுமலர் பள்ளியில் 283 கணித ஆசிரியர்கள்.
ஈரோடு: கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளியில் 178 விலங்கியல் ஆசிரியர்கள்
மற்றும் வெங்கடேஸ்வரா பள்ளியில் 313 வணிகவியல் ஆசிரியர்கள்.
பயிற்சி விவரம் மற்றும் பங்கேற்கும் நேரம் குறித்த தகவல் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளன.
பத்து பைசா செலவில்லாமல்
ReplyDeleteயாருடைய சிபாரிசும் இல்லாமல் அரசு வேலை வாங்க முடியும் என்றால்,....
அது புரட்சித் தலைவி மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சியில் மட்டுமே, ,ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றிவைத்த அம்மா அவர்களுக்கு நீண்ட ஆயுளை அருள எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஆயுளை அவர் கொடுத்தால் ஆட்சியை நாங்கள் தந்துவிடுவோம்.
அம்மாவின் நல்லாட்சி தொடர எங்களின் வாழ்த்துக்கள்.
ஒரு நண்பனைப்போல இரவு பகலாக உடனிருந்து ஆறுதல் அளித்த பாடசாலை அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி