Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

652 கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான GO Available Now.

          652  கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது. அரசானை எண் GO MS NO : 130 DATED 05/09/2104 

கணினி பயிற்றுநர் பதிவு மூப்பு பட்டியல்

SENIORITYLIST AS ON 21/12/2010:- Click Here

                    இந்த பணி நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உரிய தகுதி பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, பதிவு மூப்பின்படி வழங்கப்படஉள்ளது. மேலும் இந்த பணி நியமனத்திற்கு உரிய கல்வித்தகுதியுடன் பி.எட். தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள். முன்னதாக இப்பணியிடங்களில் பணிபுரிந்த 652 கணினி பயிற்றுநர்களுக்கு இந்த பணிநியமனத்தில் எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது. 

         மேலும் இனி வரும் காலங்களில் உருவாக்கப்படும் இத்தகைய கணினி ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புகையில், அரசின் தற்போதைய கொள்கை முடிவின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உரிய எழுத்துத் தேர்வு வைத்து மட்டுமே நிரப்பப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.












34 Comments:

  1. தற்போது (827 இடங்களுக்கு) பதிவு மூப்பின் படியு ம்,இனி வரும் காலங்களில் போட்டித் தேர்வு அடிப்படையிலும் பணி நியமனம் .

    ReplyDelete
    Replies
    1. *********************************************************
      இடைநிலை ஆசிரியர்களுக்கு
      அழைப்புக் கடிதம்
      **********************************************************

      """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
      SGT

      இடம் : சென்னை மெரினா
      நாள் : 14.09.2014
      நேரம்:காலை 10 மணி

      மிக முக்கியமான செய்தி:
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

      ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

      நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
      நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

      ***************************
      !! SUNDAY 14.09.2014 !!
      !! COME TO CHENNAI !!
      !! JOIN AT MERINA !!
      !! DEMAND +VACCANCY !!
      ***************************

      நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
      WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

      வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

      95433 91234 Sathyamoorthy
      9597239898
      09663091690 Sathyajith

      Delete
  2. Please if anybody know the correct upto date seniority list publish it in this site or send to my e-mail id geetha.guru29@gmail.com. God only know who are the lucky persons. by V.L. Geetha

    ReplyDelete
    Replies
    1. *********************************************************
      இடைநிலை ஆசிரியர்களுக்கு
      அழைப்புக் கடிதம்
      **********************************************************

      """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
      SGT

      இடம் : சென்னை மெரினா
      நாள் : 14.09.2014
      நேரம்:காலை 10 மணி

      மிக முக்கியமான செய்தி:
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

      ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

      நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
      நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

      ***************************
      !! SUNDAY 14.09.2014 !!
      !! COME TO CHENNAI !!
      !! JOIN AT MERINA !!
      !! DEMAND +VACCANCY !!
      ***************************

      நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
      WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

      வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

      95433 91234 Sathyamoorthy
      9597239898
      09663091690 Sathyajith

      Delete
  3. Sir, I need seniority list please

    ReplyDelete
  4. ஆசிரிய நண்பர்களே ...
    நமது துன்பத்தை துகிலுரித்து காட்டிடும் படம் "கற்றது தமிழ்-பிரபாகரன் தமிழ் எம்.ஏ" ..... கலைஞர் தொலைகாட்சியில் . .

    ஒரு சராசரி மனிதனையும் எப்படி இந்த சமூகம் மிருகமாக்கும் என்பதை எனக்கு உணர்த்திய இயக்குனர் "ராம்" அவருடைய அருமையான படைப்பு .....

    எச்சரிக்கை ; படத்தை பார்ப்பதோடு நிறுத்தி கொள்ளவும்

    ReplyDelete
  5. ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருக்கும் கணினி பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல் செய்ய ஆவண செய்யலாமே

    ReplyDelete
  6. ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண குழு: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
    பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 12, 10:21 AM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது26 பிரதி

    அரக்கோணம், செப்.12–

    அரக்கோணம் நகரமன்ற தலைவர் பதவிக்காக தேர்தல் வருகிற 18–ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.கண்ணதாசன் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அ.தி.மு.க. தேர்தல் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். அரக்கோணம் எம்.பி. கோ.அரி, வேலூர் எம்.பி. செங்குட்டுவன், அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவி, மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன், அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் பால்ராஜ் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் நகர செயலாளர் துரைகுப்புசாமி வரவேற்றார்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:–

    அரக்கோணம் நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.கண்ணதாசனை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு வார்டாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து முதல்–அமைச்சரின் 3 ஆண்டு சாதனைகளை கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும்.

    ஒவ்வொரு வார்டிலும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக உழைத்து அதிக வாக்குகளை பெற்றுத்தர வேண்டும். சுயேச்சை வேட்பாளர்கள்தான் என அலட்சியமாக இருந்து விடக்கூடாது. நகரமன்ற இடைத்தேர்தலில் அரக்கோணம் நகரத்தில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

    தமிழ்நாட்டில் கடந்த ஆட்சி காலத்தில் 71 ஆயிரம் ஆசிரியர் காலியிடம் இருந்தது. அதன்பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 53 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாக நியமனம் செய்தார்.

    தமிழ்நாட்டில் விரைவில் 14 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் வேலூர் மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருந்து வந்தது. ஆனால், கடந்த கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் 4 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்றுள்ளது.

    வரும் கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதல் 10 இடங்களுக்குள் வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி குழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete
    Replies
    1. இதுவே சரியான. வழியாக. இருக்கும்

      Delete
  7. ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி குழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.(edn minister..maalaimalar)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வசந்த் அவர்களே .... தங்களது மெயில் அட்ரஸ் தர முடியுமா ???

      Delete
    2. Good evening sir!
      vasamigiri357.vg@gmail.com

      Delete
  8. 652 computer instructors ulaippai surandivittu 40vayathil valiye virattinal...nagal enge pogamudium sabitha avarkalukku ennathan kopam engal mel. pavam 1 mark thappuna kodukkira trb 27 mark thappaga irunthum en mark kodukkavillai...

    ReplyDelete
  9. ===========
    HOT NEWS :
    ===========

    ஆசிரியர் தகுதி தேர்வில்

    வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண

    கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–

    அமைச்சர் ஜெயலலிதா

    வழிகாட்டுதல்படி குழு

    அமைக்கப்பட்டு

    முறைப்படுத்தப்படும்.

    K.C. VEERAMANI.

    ReplyDelete
  10. Computer teacher qualification ku BCA BED applicable ah....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. U r Eligible. . BE ( cs ), Bsc.(cs ) or id ,Bca with B ed...

      Delete
  11. 652 கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாதது வருத்தமளிக்கிறது. இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் மற்றும் பி.எட்., கல்வித்தகுதி பெற்றிருக்கிறார்கள்.


    உச்சநீதி மன்றம் 652 கணினி ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றது. ஆனால் சபிதா அவர்கள் அதை நிராகரித்துவிட்டார். அப்படி இவர்கள் மிது என்ன கோபமோ என்று தெரியவில்லை.

    652 கணினி ஆசிரியர்கள் வயது 40 மற்றும் அதற்கு மேலும் உள்ளது. இவர்கள் இனி எந்த வேலைக்கு செல்ல முடியும். இவர்கள் மீது அரசு கருணை காட்டாதா? இவர்கள் வாழ்க்கை என்ன பாழடைந்து விடும். உச்சநீதி மன்றம் இவர்களுக்கு முன்னுரினை அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றது. தயவு செய்து எங்களை காப்பாற்றுங்கள்.

    ReplyDelete
  12. YOUR ATTENTION:


    TOMORROW PORATTAM UNDU frnds some stupid person Rajalingam namela comments poduran.
    TOMORROW VAREER VAREER CHENNAI VAREER
    ANY DOUBT IMMEDIATELY CONTACT PORATTA COMMITTEE PLS
    VAREER VAREER CHENNAI VAREER NALAI VETRI PERA POGIROM

    ReplyDelete
  13. அம்மா வாழ்க வீரமணி வாழ்க

    ReplyDelete
  14. 15 yearsa schoola uzhaitha avargalukku arasukodukkum kooliya. Amma pavam endha pillaigal.

    ReplyDelete
  15. I Have completed B.sc B.ed in 2010.is it possible to get job in this?and community is MBC.Please clarify me

    ReplyDelete
  16. I have completed B.sc B.ed in 2010,is it any possible to get job on this seniority?and community is MBC.Please clarify me.

    ReplyDelete
  17. Thanks to all ...WE ARE READY TO WORK IN OUR SOCIETY....

    ReplyDelete
  18. Are 652 eligible for DGE(S): Discharged Govt. Employee (State)

    ReplyDelete
  19. Are 652 eligible for DGE(S): Discharged Govt. Employee (State)

    ReplyDelete
  20. கணினி ஆசிரியர்களின் உண்மை நிலையில் 50சதவீதம் மட்டும் உங்கள் பார்வைக்கு

    .ஒரு முறை மட்டுமே வாய்ப்பு என்று வைக்கப்பட்ட தேர்வில் 27 வினாக்கள் தவறானவையாக இருந்தால் யாரால் தான் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் . அது தான் நடந்தது 2வது தேர்வில் . ஆனால் அதற்கான தண்டனை டிஆர்பி க்கு கிடையாது . தண்டனை 652 கணினி ஆசிரியர்களுக்கு . அனைவரும் பிஎட் கல்வி தகுதி பெற்றிருந்தும் 14 வருட பணிஅனுபவம் இருந்தும் இவர்களுக்கு வேலை வாய்ப்பில முன்னுரிமை கிடையாது. காரணம் இவர்கள் திமுக ஆட்சியில் வேலைக்கு வந்தவர்கள் . உச்சநீதிமன்றம் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க கூறியும் ஏன் கல்வித்துறை செயலர் சபீதா மறுத்துள்ளார் . இவரும் ஒரு அரசு அதிகாரிதான் . ஆனால் கல்வி துறை இவருடைய செந்த நிறுவனம் போல் நடந்து கொள்கிறார். எத்தனை பேர் துன்பபட்டாலும் தான் முன்வைத்த காலில் யார் நசுக்கப்பட்டாலும் அதற்காக அவர் தன் காலை பின் வைக்க மாட்டார். 652 பேரின் 13 வருட உழைப்பிற் எந்த பலனும்மில்லை . அனைவரும் 40 வயதை கடந்தவர்கள் . புதிதாக வரும் 50 வயது காரர்களுக்கு வேலை கொடுப்பார்களாம் ஆனால் தங்கள் இளமையை பள்ளியில் கழித்து 13 வருடம் பணிஅனுபவம் இருந்தும் அரசு ஆதரவு தேவை படும் காலங்களில் கைவிடுவது என்பது மிகப் பெரிய கொடுமை. 652 பேரின் உழைப்பு உண்மை என்றால் இறைவன் பார்த்து கொள்வார்.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. I need the seniority list please forward to this email address drruben_2001@yahoo.co.in

    ReplyDelete
  24. I need seniority list .can you send to dsmailme15@ Gmail. Com

    ReplyDelete
  25. I have finished at 2010 batch and SCA community. Is any chance to get job

    ReplyDelete
  26. பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களின் நிலை

    தமிழக அரசின் இரு வேறு விதமான முடிவுகள் - இதனால் பாதிக்கப்பட்டவர்கள் : கணினி ஆசிரியர்கள்.

    83-உயர் அதிகாரிகள் விசயத்தில் அரசின் நிலை;
    2005 ஆம் ஆண்டு TNPSC-ஆல் துணை கலெக்டர், டி.எஸ்.பி, வணிக வரித்துறை போன்ற பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 83 நபர்களும் தமிழ்நாடு தேர்வாணையம் வகுத்த விதிமுறைகளை மீறியுள்ளனர் இதனால் அவர்களை பணியிலிருந்து நீக்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் 2011 மார்ச் 4ம் தேதி தீர்ப்பளித்தது. ஆனால் தமிக அரசு இந்த 83 நபர்களையும் பணிநீக்கம் செய்யாமல் இருந்து வந்தது.

    இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டின் தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 83 நபர்களையும் உடனடியாக பணிநீக்கம் செய்யும் படி உத்தரவிட்டது.

    தமிழக அரசு 83 நபர்களையும் பணிநீக்கம் செய்யமுடியாது என்று கூறு உச்சநீதீமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு 27.08.2014 அன்று விசாரணைக்கு வந்தது. இதில் நீதியரசர்கள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் 83 நபர்களும் பணியில் தொடரலாம் என்று கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    652 கணினி ஆசிரியர்கள் விசயத்தில் அரசின் நிலை;
    இதே சென்னை உயர் நீதிமன்றம் 2013 ஆகஸ்ட் மாதம் வழங்கிய தீர்ப்பில் 652 கணினி ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க உத்தரவிட்டது. (காரணம் இவர்கள் TRB நடத்திய தேர்வில் 50% சதவீதத்திற்கு குறைவாக மதிப்பெண் எடுத்ததால்) உடனே தமிழக அரசு உடனடியாக 652 கணினி ஆசிரியர்களை பணிநீக்கம் செய்தது.
    83 உயர் அதிகாரிகளை இதே நீதிமன்றம் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டபோது அரசு இவர்களை பணிநீக்கம் செய்யவில்லை. 652 கணன ஆசிரியர்களை மட்டும் அரசு உயர்நீதிமன்றம் கூறிய உடனே பணிநீக்கம் செய்தது. இதிலும் இன்னொரு வேதனை 83 நபர்களையும் பணிநீக்கம் செய்யும் படி உச்சநீதிமன்றம் கூறியும் அரசு இவர்களை பணிநீக்கம் செய்யவில்லை. மாறாக அரசு 83 பேருக்காக வரிந்துகட்டிக்கொண்டு உச்சநீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்கிறது 83 அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்யமாட்டோம் என்று. அதற்கு உச்சநீதிமன்றமும் 83 நபர்களும் பணியில் தொடரலாம் என்று கூறியிருக்கின்றது.

    அரசு 652 கணினி ஆசிரியர்களின் நிலையில் அரசு இவர்களை பணிநீக்கம் செய்ய மாட்டோம் என்று மேல் முறையீடு செய்யவில்லை. மேல்முறையீடு செய்யவில்லை என்றாலும் கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடும் போதாவது அரசு தரப்பில் 652 கணினி ஆசிரியர்களையும் பணிநீக்கம் செய்யமாட்டோம் என்று கூறியிருந்தால் அன்றே 652 நபர்களும் காக்கப்பட்டிருப்பார்கள்.

    652 கணினி ஆசிரியர் எந்த தவறும் செய்யவில்லை.

    50% சதவீத மதிப்பெண்ணை 35% சதவீதமாக மாற்றி 652 கணினி ஆசிரியர்களையும் பணியமர்த்தியது தமிழக அரசுதான்.

    TRB நடத்திய தேர்வில் 45 கேள்விகள் தவறாக கேட்டது TRB-யின் தவறு.

    இதில் சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசின் நிறுவனமான சென்னை IIT-க்கு கேள்வி தாளை அனுப்பி எத்தனை கேள்விகள் தவறு என்று அறிக்கை கேட்டது. IIT-யின் அறிக்கையில் 20 கேளவிகள் முற்றிலும் தவறு 7 கேளவிகளுக்கு No Idea என்று பதில் அறிக்கை கொடுத்துது. ஆக நீதிமன்றம் மூலம் 20 கேள்விகள் தவறு என்று கூறியது. இதில் 150 வினாக்களில் 20 தவறான வினாக்களை கழித்து 130 வினாக்களுக்கு மட்டும் 50% மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது TRB.

    நீதிமன்றமும் 652 வாழ்கைகயில் விளையாடியது No Idea என்று IIT-கூறிய 7 வினாக்களை விட்டுவிட்டது. இதையும் சேர்த்தால் மொத்தம் 27 வினாக்கள் தவறானது.

    இவ்வளவு குளறுபடி இதல் இருந்தது. இதல் 652 நபர்கள் பாதித்தனர்.

    அரசு 83 அதிகாரிளை காப்பாற்றியது. ஆனால் 652 கணினி ஆசிரியர்களையும், அவரது குடும்பங்களையும் நடுத்தெருவில் குழிதோண்டி புதைத்துவிட்டது.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive