எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்களுக்கான
விருப்ப நாடுகளில், இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது என ஆய்வு ஒன்று
தெரிவிக்கிறது. இந்த வரிசையில், முதலிடத்தில் அமெரிக்கா வருகிறது.
அதற்கடுத்து, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இந்தியா, ஹாங்காங், ஜெர்மனி,
சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகள், முதல் 10
இடங்களுக்குள் வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, கல்வி அமைப்பிற்கான
நன்மதிப்பை பெற்றிருத்தல் என்ற காரணத்தை தாண்டி, கல்வி மற்றும் இதர
அம்சங்களுக்கான செலவினங்கள், கிடைக்கும் நிதியுதவி ஆகிய அம்சங்களுக்காக
இந்தியா, எம்.பி.ஏ. படிப்பதற்கான நல்லவொரு இடமாக மாணவர்களால்
விரும்பப்படுகிறது.
பொதுவாக, மேலாண்மை கல்வியை மேற்கொள்ள அதிகம்
செலவாகிறது. எனவே, மாணவர்கள், தங்களுக்கான செலவினங்களை சமாளிக்க வங்கிகளை
நாட வேண்டியுள்ளது. மேலும், தங்களின் சேமிப்பு, படிப்பின்போதே பணி
செய்தலின் மூலம் பெறும் சம்பளம் ஆகிய அம்சங்களையும் மாணவர்கள்
நம்பியுள்ளனர்.
படிப்பதற்கான நாட்டை தேர்வு செய்யும்போது,
அந்நாட்டில் நடைமுறையிலுள்ள விசா விதிமுறைகளும், மாணவர்களால் கணக்கில்
கொள்ளப்படுகிறது. மேற்கண்ட விஷயங்களைப் பொறுத்தவரை, எம்.பி.ஏ. படிக்க
விரும்பும் மாணவர்களுக்கு, இந்தியா ஒரு நம்பிக்கைத் தரும் இடமாக உள்ளது.
எனவேதான், முதுநிலை மேலாண்மை படிப்பை மேற்கொள்ள நினைப்போருக்கான, சிறந்த ஐந்தாவது தேர்வாக இந்தியா திகழ்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...