அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை
ஆசிரியர்கள் 49 பேர் மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பள்ளி கல்வி பணியில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை
ஆசிரியர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிவோருக்கு மாவட்ட கல்வி
அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவி உயர்வு மற்றும்
பணியிடமாற்றம் செய்து பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் திருநெல்வேலி
நகரம், ஜவஹர் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை விஜயகுமாரி நலதம்,
நாகர்கோவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குமாரபுரம் தோப்பூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை ஜெசிந்தா,
ராமநாதபுரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். குமரி
மாவட்டம் காப்புக்காடு மாராயபுரம் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்
சாராள் மேரி, சிவகங்கை மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக
உதவியாளர் ஹெர்மித் ரிச்சர்டு சிராப், பழனி மாவட்ட கல்வி அலுவலராக
நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம், மல்லையாடிப்பட்டி அரசு உயர்நிலை
பள்ளி தலைமை ஆசிரியர் ஜாண் பெர்க்மான்ஸ், நாகர்கோவில் மாவட்ட கல்வி
அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று தமிழகம் முழுவதும் 49 பேருக்கு
பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த
பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் முற்றிலும் தற்காலிகமானது என்றும்,
தலைமை ஆசிரியர்கள் தனது பணியிட பொறுப்புகளை அப்பள்ளியின் மூத்த உதவி தலைமை
ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு உடனே புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று
உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...