Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெயிட்டேஜ் மார்க் முறையால் பாதிப்பு கண்ணில் கருப்பு துணி கட்டி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்: 35 பேர் கைது

          ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்  முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், தங்கள் கண்களில் கருப்பு துணி  கட்டிக்கொண்டு நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். 
 
         அவர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு  நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ்  மதிப்பெண் வழங்கப்பட்டதில் சுமார் 60,000 பேர் பணி நியமனத்துக்கான  தகுதியை இழந்துள்ளனர். அதனால் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை  ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு பாதிக்கப்பட்ட பட்டதாரிகள்  அரசுக்கு கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். கடந்த மாதம் 18ம்  தேதி தொடங்கிய இந்த போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லை.  பட்டதாரிகள் ஒவ்வொரு நாளும் சென்னையில் முக்கிய அலுவலகங்கள்  முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தபிரச்னை குறித்த வழக்கில், பணி நியமனத்துக்கு மதுரை உயர்  நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் சிலருக்கு அரசு பணி  நியமனம் வழங்கியுள்ளது. இது நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றது  என்று பட்டதாரிகள் நேற்று முன்தினம் கருத்து தெரிவித்தனர். இதை  பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் விமர்சனம் செய்தனர்.  இதற்கு பட்டதாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள்  கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் கண்களில் கருப்பு  துணியை கட்டிக் கொண்டு நேற்று காலை டிபிஐ வளாகத்துக்கு வந்த 35   பட்டதாரிகள், டிஆர்பி முன்பு கோஷம் போட்டனர். உடனடியாக  நுங்கம்பாக்கம் போலீசார் அவர்களை கைது செய்தனர். மாலை 5.30  மணி அளவில் அவர்களை விடுவித்தனர்.




4 Comments:

  1. சில்தினங்களூக்குமுன் ஒரு வருடமாக கணிணி ஆசிரியர்கள் இல்லாமல் ஒரு வருடமாக+2 மாணவர்கள் அர்சுப்பள்ளிகளில்படித்து வருகின்றனர்.அவர்களி ன்எதிர்காலம்?என் பாடசாலையில் வினா எழுப்பியிருந்தேன்அரசு நல்ல அறிவிப்பைத்தந்துள்ளது. போராடும் பட்டதாரிகளுக்கும் நல்ல அறிவிப்பைத் தாருங்கள்!.நன்றி

    ReplyDelete
  2. நிமிர்ந்து நில் படத்தை போல் தான் நம் கல்விதுறையின் செயல்பாடும் உள்ளது. தாங்கள். செய்த தவறை சரி என்று நிரூபிக்க கடந்த 2 வாரமாக எவ்வளவு வேகமாக செயல்படுகின்றனர் என்பது மனசாட்சி. உள்ள அனைவரும் அறிவர்.... கல்வித்துறை. அதிகாரிகளே.... உங்களின் செயல்களை ஆண்டவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள் ....

    ReplyDelete
  3. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. why do you take risk unnecessary ? Its may be lead to affect the vote banks in future election of MLA. thanking you.

    This batch is very difficult to come to conclusion. So give job to all candidate whether full time or part time teacher that is better to all. Because our CM already told in the MP election (concession of 5% relaxation) AMMA got 37 sheets. Now give job to all passed candidate AMMA own 234 MLA in future that is true, because the teachers more contact with public.

    ReplyDelete
  4. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. why do you take risk unnecessary ? Its may be lead to affect the vote banks in future election of MLA. thanking you.

    This batch is very difficult to come to conclusion. So give job to all candidate whether full time or part time teacher that is better to all. Because our CM already told in the MP election (concession of 5% relaxation) AMMA got 37sheets. Now give job to all passed candidate AMMA own 234 MLA in future that is true, because the teachers more contact with public.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive