Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு : கோயம்பேட்டில் மறியல் செய்த 250 பட்டதாரி ஆசிரியர்கள் கைது

               தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடந்தது. 
 
           சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். இதில், 90க்கு மேல் மதிப்பெண் பெற்று சுமார் 23,000 பேர் தேர்ச்சி அடைந்தனர். இடஒதுக்கீடு அடிப்படையில் மேலும் 40,000க்கு மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், ஒவ்வொருவரின் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட் மதிப்பெண்களுடன் தற்போது தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கூட்டும் வெயிட்டேஜ் முறையை அரசு கொண்டுவந்தது. இந்த முறையை பின்பற்றினால் கிராமப்புறங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய கல்வித்தரத்தால் குறைவான மதிப்பெண்களை பெற்று, பல வருடங்கள் ஆசிரியர் கனவில் உள்ளவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27 நாளாக உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
           இந்நிலையில், கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க நேற்று பட்டதாரி ஆசிரியர்கள் வந்தனர். அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக்கூடாது என போலீசார் கூறினர். அதனால் ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையும் போலீசார் தடுக்கவே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதையடுத்து 250 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 100 பேர் ஆசிரியைகள். அவர்களை மதுரவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, தங்கள் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.





23 Comments:

  1. kadavulae intha kodumaikaluku oru mudivae illaya, teacher aganum na ivlo kastapadanuma, illa idhuvum oru macroteaching method a?

    ReplyDelete
    Replies
    1. After passing TET through employment its a final and best solution

      Delete
    2. 100*/* correct mr.mani.

      Delete
    3. ஆசிரியர் தகுதித்தேர்வில் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்னை(82/150) பெற்றுவிட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்தால்,நீண்ட வருடங்கள் காத்திருக்கும் என்னை போன்றவர்களுக்கு மிகவும் ஆறுதலாக அமையும்.
      இப்படிக்கு,
      10 வருட Seniority உடன் TET Pass செய்து,அரசை ஆவலாய் நோக்கியிருப்பவன்.
      எனது Paper 1 Seniority - 10 வருடங்கள்
      Paper 2 Seniority - 5 வருடங்கள்
      தகுதி பெற்றது-Paper 1 மற்றும் Paper 2.

      Delete
  2. அரசும் தேர்வானவர்களும் அமலில் உள்ள தகுதிகாண் முறையே சிறந்தது என்று வாதிடுகின்றார்கள்.

    நடப்பில் உள்ள தகுதிகாண் முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தேர்வாகாத தேர்வர்கள் பழைய தகுதிகாண் முறை முற்றிலும் தவறானது என்று வாதிடுகின்றார்கள்.

    நீதிமன்றம் இருசாராரிடமும் விசாரித்து 'எவரும் ஏற்கும் தகுதிகாண் முறையை' தீர்ப்பாய் வழங்கும் என நம்புவோம்.

    அவசரப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிடாமல் - 'எவரும் ஏற்கும் தகுதிகாண் முறையை' - கல்வித்துறை அரசு அதிகாரிகள், நீதிபதிகள், கல்வியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து - நீதிமன்றம் இறுதி முடிவு செய்து தீர்ப்பை வழங்கட்டும்.

    நீதிமன்றம் அமைக்கும் குழு முடிவு செய்யும்
    தகுதிகாண் முறைப்படி - நியமனம் நடைமுறைபடுத்தப்படட்டும்.

    ReplyDelete
  3. போராளிகளே காலை வணக்கம் இன்று நிச்சயம் நீதி வெல்லும்....
    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..
    தர்மம் மறுபடியும் வெல்லும்-இந்த மர்மத்தை உலகத்தார் இன்று அறியும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. போராளிகளே காலை வணக்கம் இன்று நிச்சயம் நீதி வெல்லும்....
    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..
    தர்மம் மறுபடியும் வெல்லும்-இந்த மர்மத்தை உலகத்தார் இன்று அறியும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. Thanks friend kandippa neethi vellum

      Delete
    2. neethi vellum brother not for you

      Delete
  5. போராளிகளே எனது 9543079848 குற்றப்பிரிவு புலனாய்வுத் துறையின் குரல்பதிவு ஆக்கிரமிப்பில் உள்ளது...

    போராட்டம் பற்றிய தொடர்புக்கு
    இராஜலிங்கம் 8678913626
    செல்லதுரை 9843633012

    ReplyDelete
  6. போராளிகளே எனது cell number 9543079848 குற்றப்பிரிவு புலனாய்வுத் துறையின் குரல்பதிவு ஆக்கிரமிப்பில் உள்ளது...

    போராட்டம் பற்றிய தொடர்புக்கு
    இராஜலிங்கம் 8678913626
    செல்லதுரை 9843633012

    ReplyDelete
  7. WEITAGE SYSTEM WILL BE CANCELLED... DONT WORRY ANYBODY......

    ReplyDelete
  8. hello vijay vijay chennai sir plz update todays court details immediately thank you sir

    ReplyDelete
  9. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள் , வெயிட்டேஜ் முறை அறவே ரத்துசெய்ய. வேண்டும் , தகுதிதேர்வில் வெற்றிபெற்றவர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பின்படி வேலை வழங்குவதே சரியான. தீர்வாகஇருக்கும், இல்லையென்றால் மீண்டும் இடியாப்ப. சிக்கலே நீடிக்கும்

    ReplyDelete
  10. Case enna aachi update pannuga sir.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. கேஸ் நடைபெறுகிறதா? என்ன நடக்கிறது? என்பது பற்றி தகவல் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  13. அரசு ஆசிரியர்கள் வாழ்வில் விளையாடிக்கொண்டிருக்கிறது. 60 சதவீதம் மார்க் எடுத்தால் தான் வேலை என்று தேர்வூக்கு முன்னர் சொன்ன அரசு தேர்வூ முடிவூ வெளிவந்து பிறகு எம்.பி எலக்ச்ன் என்பதற்காக 55 சதவீதம் என்று அறிவித்தது. அறிவித்து டெட் மார்க் அடிப்படையில் வேலை என்றால் யாரும் பாதிக்க மாட்டார்கள். வெயிட்டேஜ் என்ற ஒரு அரசானை உருவாக்கியதால் 60 சதவீத மதிப்பெண் மேல் எடுத்த எத்தனை ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசாரங்கம் முதலில் 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த ஆசிரியர்களுக்கு வேலை வழங்கட்டும். பிறகு ஏற்படும் காலிபணியிடத்திற்கு 82-89 எடுத்தவர்களை வெயிட்டேஜ் முறையில் நியமிக்க வேண்டும்.

    வெயிட்டேஜ் என்பது சரியானது அல்ல. 1 முதல் 10 வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு எதற்காக 12ம் வகுப்பு மற்றும் டிகரி மற்றும் பி.எட் போன்றவை தேவையா? அவர்;;;;;கள் காலேஜ்க்கு பாடம் சொல்லி கொடுக்க போகிறார்களா?

    செலக்ட் கேன்டடிட் என்ற தளத்தில் ஒரு பார் டையகிராம் அழகாக போட்டு உள்ளர்கள். இதில் 35 வயதுக்கு மேற்கு உள்ளவர் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று? ஆம் உண்மை தான் இந்த வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் இன்னும் 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செலக்ட் ஆக வாய்ப்புள்ளது.

    மேலும் இந்த வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் இந்த தேர்வூகளில் தேர்ச்சி பெற்ற அனைவரும் பாதிப்படைவார்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் 35 வயதுடைய தேர்வூ செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர் மாவட்டத்திலும் அவரது குடியிருப்புகளுக்கும் பக்கத்தில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது.

    ஒரு சிலர் வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் யாருக்கும் பணி கிடைக்காது என்று பெய்யான கருத்துகளை முன்வைக்கின்றனர். ஒரு உண்மை வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் ஏற்கெனவே உள்ள வயது மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும் இன்னும் சில ஆயிர கணக்கான ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு காத்திருக்கிறது. எதிர் காலத்தை இவர்களை நம்பி டெட் வெயிட்டேஜ் கேன்சல் செய்து. 1 -10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பது அரசின் தலையாய கடமையாகும்.

    ReplyDelete
  14. Trb. tet. அவர்களே வெயிட்டேஜ் முறையை அறவே நீக்க. வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையும் , 82-89. க்குள் இருப்பவர்களுக்கு மட்டும் அது என்ன. வெயிட்டேஜ் ,வெயிட்டேஜ் முறையை அறவே நீக்க. வேண்டும் ,தகுதிதேர்வில் வெற்றிபெற்றபெற்றவர்களை மட்டும் வேலைவாய்ப்பு பதிவுமூப்பின்படி வேலைவழங்க வவேண்டும்

    ReplyDelete
  15. Case enna achi sir ? judgement 2day varuma ? Yaravathu solluga sir

    ReplyDelete
  16. dear frds theriyama than kekuren 90 kum 89 kum evlo periya different iruku ipathan ithellam unkaliku theriyutha scientific method selection list vanthapa elam ena paninka yen ipdi thanum valama enkalaiyum valavidama panrinka pala prachanaikaluku naduvula paduchu pass pani 1 yr wait pani ipo iruntha velaium vitu sapatuku aduthavankala nampi irukura nilila irukom thayavu seithu intha prachanaikana mudiva eduka vidunka porattam panranala ethum nadakaporathu illa intha porathunala selected and selected candidates matrum tet pass panama adutha tet exam ethir parthu kondirukum namai pondra matra aasiriyarkalukum vethanai than .

    ReplyDelete
  17. 34 kum 35 kum ulla different sir. In 2013 I got 85. Now 92. But unselected.

    ReplyDelete
  18. அரசாணை 71 மாறுவது உறுதி உறுதி...விளக்கங்களும் நடப்பு அறிவிப்புகளும்.
    அடித்தட்டு மக்களின், கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழ்மையான ஆசிரியர்களின் எதிரியான அரசாணை 71 மாறுவது
    உறுதி! உறுதி!! உறுதி!!!
    விளக்கங்கள்:
    1)இதுவரை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் என வரிசைக்கிரமமாக நடைபெறும்...
    ஆனால் இந்த கலந்தாய்வை சிந்தித்துப் பாருங்கள்...
    2முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணிஆணை பெற்றவுடன் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டது...ஆனால் இடைநிலை ஆசிரியர்க்கு பணிஆணை பெற்றும் ஒருவார காலம் தாமதமாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டது...
    3)பணிநியமனம் கலந்தாய்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே பணிநியமண தடையாணை வழங்கியது...
    4)பணிநியமன ஆணை வழக்கு எண் 707,708க்கு உட்பட்டது என குறிப்பிட்டது..
    5)நீதியரசர் சசிதரன் ஐயா தடைஆணைக்கான விளக்கத்தை தெள்ளத்தெளிவாக 16பக்க அறிக்கையாக வெளியிட்டது..
    6)தடைஆணைக்கான மேல்முறையீடு தாமதமாக நடைபெற்றது.
    7)உண்மையில் சொல்லப்போனால் தடைஆணையை உடைப்பதற்கு அரசு முழு முயற்சி எடுக்கவில்லை.. (நீதிமன்ற நடவடிக்கைகள் நன்கு தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பாருங்கள் உண்மை புரியும்)
    8)புதிய அரசாணை வந்தால் நடைமுறைப்படுத்த தயார்- டி.ஆர்.பி அறிவிப்பு...இந்த அறிவிப்பு உணர்த்தும் உள்நோக்கம் தான் என்ன?? சிந்திக்கவும்...
    9)மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த வெய்ட்டேஜ் முறையில் எனக்கு உடன்பாடு இல்லை என கூறியதன் காரணம்...
    10)சில நாளுக்கு முன் கல்வித்துறை அமைச்சர் கூறியது "நீதிமன்ற ஆணையின் படியும் முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் வெய்ட்டேஜ் முறைக்கான ஒரு குழு அமைக்கப்படும்"-இந்த அறிவிப்பை யோசிக்கவும்..
    இன்னும் ஏராளமான விளக்கங்கள் உண்டு....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive