ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 210 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்
‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யக்கோரி கடந்த 25 நாட்களுக்கும் மேலாக
இடைநிலை ஆசிரியர்கள் - பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில்
ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு மாநில
தேர்தல் ஆணையம் முன்பு நேற்று பட்டதாரி ஆசிரியர்கள் திடீர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்
முறையை ரத்து செய்ய வேண்டும், தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே பணி நியமனம்
வழங்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பட்டதாரி
ஆசிரியர்கள் தொடர் கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே...
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சிலர்
கூறுகையில், ‘‘ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறை என்பது
ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஆசிரியர்கள் தகுதியின் அடிப்படையில்
நியமிக்கப்பட வேண்டியவர்கள். எனவே நியாயமாக தகுதித்தேர்வு ஒன்றை நடத்தியே
பணி நியமன ஆணை வழங்க வேண்டும். இந்த வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய
வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில்
ஈடுபடுவோம்’’, என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவலறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு
சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து
போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 84 பெண்கள் உள்பட 210 பேரையும்
போலீசார் கைது செய்து மதுரவாயல் காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர்.
பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
போராளிகளே காலை வணக்கம் இன்று நிச்சயம் நீதி வெல்லும்....
ReplyDeleteதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..
தர்மம் மறுபடியும் வெல்லும்-இந்த மர்மத்தை உலகத்தார் இன்று அறியும் வாழ்த்துக்கள்...
புளியங்குடி சிங்கமே, எங்களின் தங்கமே, ராஜலிங்கமே அரசை ஆட்டம் காண வைக்கும் தங்களின் திறமையை பாராட்ட வார்த்தைகளே
ReplyDeleteஇல்லை..,
Mr. Rajalingam You need not worry. All the unselected candidates support with you. All your efforts will get success.. Our C.M. is not an ordinary person. Amma has treated all tamilians are her family members. She will definetely resolve the IDIAPPA SIKKAL. and publish the new revised result which give preference to age, experience and merit from both first attended C.V. list aswell as the provisional list selected candidates. Both seniors and juniors will get the post according to the new G.O.
ReplyDeleteAmma wish to select good and qualified teachers only. Amma's educational background, wide range of experience, Her well known Administrative power she has the potential to resolve the IDIAPPA SIKKAL without any partiality. A good mother will treat both her children equally. She wont neglect the elder and taking care of only the younger one. Amma also no exception. She will take care of our mental agony,pain and her decision will be a turning point in Tamilnadu Education History.!!!.Our lifelong support will be AMMA who uplift our life aswellas the fate of Future citizens.
நானும் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன்..உடுமலையிலிருந்து நிறைய ஆசிரியர்கள் சென்னை வர உள்ளோம். . யாரைத் தொடர்பு கொள்வது போன் நம்பர்தரவும்....
ReplyDeleteMr rajesh pls contact this nos
ReplyDeleteRajalingam - 8678913626
Chelladurai - 9843633012