இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியில்
உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள்
கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து
அந்த கூட்டமைப்பு அமைப்பு செயலர் எட்வர்டு சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கல்வித் துறையில், கடந்த 2000ம் ஆண்டு முதல் விரிவுரையாளர் மற்றும் அதற்கு
மேற்பட்ட பதவிகள் இறுதி பணிமூப்பு பட்டியல் இல்லாமலேயே தற்காலிக பணி
மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. விதிகளுக்கு
புறம்பாக வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை நிறுத்தக் கோரி, சென்னை மத்திய
நிர்வாகம் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில், இறுதி பணி மூப்பு அடிப்படையில்
பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து,
சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்வித்துறை வழக்கு தொடுத்தது. அந்த
நீதிமன்றத்திலும், மத்திய நிர்வாகம் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு சரி என உறுதி
செய்யப்பட்டது. அந்த நிலையிலும், கல்வித்துறை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை
அமல்படுத்தாமல், உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கும், தள்ளுபடி
செய்யப்பட்டது.
இந்த வழக்கு குறித்து கல்வித்துறை மீண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்து, இந்த
வழக்கை முடிக்க கல்வித்துறை முடிவு செய்தது. இதை விரைந்து முடிக்காமல்,
திடீரென ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்த முயற்சிப்பது தவறு. எனவே,
உச்சநீதிமன்ற ஆணை அடிப்படையில் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க
வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...