குரூப் 2 முதல்நிலைத் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, பிரதான தேர்வு எழுத
11, 497 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிரதான தேர்வு வரும் நவம்பர் 8ம் தேதி
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
For View & Download Group 2 Preleminary Exam Result - Click Here
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவு வெளியீடு: நவம்பரில் பிரதான தேர்வு
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியாயின. இதில், 11,497 பேர் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), கடந்த 2013, டிச.1ம்
தேதி குரூப்-2 தேர்வை நடத்தியது. இதில், தொழிலாளர் உதவி ஆய்வா ளர்,
நிதித்துறையில் உதவிப் பிரிவு அலுவலர், சட்டத்துறை யில் உதவிப் பிரிவு
அலுவலர், கைத்தறி ஆய்வாளர், கூட்டு றவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்
உள்பட பல்வேறு துறைகளில் உள்ள 19 பதவிக ளுக்கான 1,047 பணியிடங்களுக்கு
நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை 4,98,471 பேர் எழுதினர்.
இதற்கான முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப் பட்டது. இதில், 11,497 பேர்
பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். பிரதான தேர்வு வரும் நவ.8ம் தேதி
நடைபெறுகிறது. தேர்வு பெற்றவர்கள் பட்டியல், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில்
(www.tnpsc.gov.in) பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இத்தகவல், டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா வெளியிட்டுள்ளார். 11,497 பேர் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். பிரதான தேர்வு வரும் நவ.8ம் தேதி நடைபெறுகிறது.
1,047 காலி பணியிடங்களுக்கான குரூப்–2 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
1,047 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப்–2 முதல் நிலை தேர்வு
முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
குரூப்–2
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமை பணி
தேர்வு–2–ல்(குரூப்–2) துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர் நிலை–2,
தொழிலாளர் உதவி ஆய்வாளர், நிதித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர்,
சட்டத்துறையில் உதவிப்பிரிவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை
ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட துறைகளில் காலியாக
உள்ள 19 பதவிகளுக்கான 1,047 பணியிடங்களுக்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 1–ந்
தேதி தேர்வு நடந்தது.
இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 114 நகரங்களில், 2 ஆயிரத்து 269 தேர்வு
மையங்களில் நடந்தது. 4 லட்சத்து 98 ஆயிரத்து 471 பட்டதாரிகள் தேர்வு
எழுதினர். முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
இதில், 11,497 பேர் தேர்ச்சி பெற்று, அடுத்தக்கட்ட முதன்மை தேர்வுக்கு
தேர்வாகி உள்ளனர். அவர்களின் விவரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
11,497 பேர் தேர்ச்சி
குரூப்–2–ல் காலியாக உள்ள 19 பதவிகளுக்கான 1,047 காலி பணியிடங்களுக்கான
முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி நடந்தது.
தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி மற்றும்
அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில்
முதன்மை எழுத்து தேர்விற்கு தேர்வு செய்யப்பட்ட 11,497 விண்ணப்பதாரர்களின்
பதிபெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைவளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதன்மை எழுத்து தேர்வு நவம்பர் 8–ந் தேதி காலை மற்றும் மதியம் நடைபெறும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 8–ந் தேதி நடக்கும் முதன்மை தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள்,
அடுத்தபடியாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில்
வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...