மெரினா காந்தி சிலை அருகே கோரிக்கை முழக்கமிட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்
தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய
வேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம்
நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில்
உண்ணாவிரதம் இருந்தனர். முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
எனினும் அரசிடம் இருந்து எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை. எனவே, பட்டதாரி
ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் நடத்தி
வருகின்றனர்.
இந்நிலையில், மெரினா காந்தி சிலை முன்பு நேற்று காலை கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை முழக்கமிட்டனர். தகவல் அறிந்து மெரினா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து 8 பெண்கள் உள்பட 18 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
T.N.P.SC போன்றத் தேர்வுகளை லச்சக்கணக்கானவர்கள் எளுதுகின்றார்கள்,இவர்களின் தேர்வானது போட்டித்தேர்வில் யார் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார்கலோ அவர்களில் தொடங்கி பிறகு படிப்படியாகக்குறையும்.ஆனால் T.R.B? தேவையில்லாமல் குழப்பத்தை உண்டாக்கியது.போராடுபவர்களின் நியாயத்தை உணர வேண்டும். P.G. T.R.B யில் கூட இம்முறை உள்ளபோது T.N.TETக்கு ஒரு நியாயமா?
ReplyDeleteThanku saravanan and anitha tho .. ithu than ennai ponravarkalin karuthum... uyir ullavarai poraduvom sir..
ReplyDeleteசரவணன் என்னைப்போல் பலர் போராட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமாய் இருந்தாலும், நீங்கள் கொடுத்துள்ள கைப்பேசி எண்களைத்தொடர்பு கொள்ள முடியவில்லை. சென்னையில் தங்கிப்போராட பல ஆசிரியர்கள் விரும்பினாலும் வழிகாட்டல் இன்மையால் தவிக்கிறார்கள். சரியான கைப்பேசி எண்ணைப்பதிவிடுங்கள். தொடர்பு கொள்வோருக்கு வழிகாட்டுங்கள். அப்போதுதான் செப் 5போராட்டம் மாபெரும் வெற்றி அடையும் வகையில் பலர் திரள முடியும்.
ReplyDelete