Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

17வது நாள் தொடர் நூதன போராட்டம்

          இன்றைய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் 17வது நாள் (08.09.2014) தொடர் போராட்டம் காலையில் பத்துமணிக்கு தொடங்கியது. நான்கு ஆசிரியர்கள் பிணமாக போராட்டம் செய்ய மாலை, வெள்ளைத்துணி, நெத்திக்காசு ஆகியவை கொண்டு சென்றனர் அவை போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது...

          மாலை நேரத்தில்  பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 300 க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டு சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க. முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் வருவதாக கூறினார்கள். ஆனால் யாரும் வரவில்லை. அனைவரும் உள்ளேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      தொடர்ந்து வரும் ஞாயிறு அன்று சென்னையில் கல்வி உரிமை மாநாடு நடத்துவது குறித்து தேர்வர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அரசியல் தலைவர்கள் அனைவரையும் அழைக்கவிருப்பதாகவும், பல்வேறு ஆசிரியர் சங்கத் தலைவர்களையும் அழைக்கவிருப்பதாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.





15 Comments:

  1. 1) 1௦ வருடங்களுக்கு முன் படித்தவர்களை (அதாவது +2, degree , B.ed இவற்றை 2004 க்குள்) ஆசிரியராக தேர்ந்தெடுக்க கூடாது என நமது அரசாங்கம் துளியளவும்
    நினைக்கவில்லை,என்பதை தற்போது தேர்ந்தெடுத்தவர்களை ஆராய்ந்தால்
    2) தமிழ் பிரிவில் - 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 90 நபர்கள்
    3) ஆங்கிலத்தில் 1961 to 1980 க்குள் பிறந்தவர்கள் 223 நபர்கள்
    4) கணிதத்தில் 1972 to 1980 க்குள் பிறந்தவர்கள் 35 நபர்கள்
    5) இயற்பியலில் 1967 to 1980 க்குள் பிறந்தவர்கள் 70 நபர்கள்
    6) வேதியலில் 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 125 நபர்கள்
    7) தாவரவியலில் 1970 to 1980 க்குள் பிறந்தவர்கள் 66 நபர்கள்
    8) விலங்கியலில் 1965 to 1980 க்குள் பிறந்தவர்கள் 97 நபர்கள்
    9) வரலாறில் 1957 to 1980 க்குள் பிறந்தவர்கள் 1536 நபர்கள்
    10) புவியியலில் 1960 to 1980 க்குள் பிறந்தவர்கள் 266 நபர்கள்

    மேற்கண்ட புள்ளிவிவரங்கள்படி 2508 இது பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வில் 24% இவர்கள் அனைவரும் 14 வருடங்களுக்கு முன் +2 முடித்து , 11 வருடங்களுக்கு முன் degree முடித்து, 10வருடங்களுக்கு முன் B.ed முடித்தவர்கள்.இவர்கள் +2, degree , B.ed ஒவ்வொரு பிரிவிலும் above 80% பெற்றவர்கள் . இவர்களை தேர்ந்தெடுத்ததில் என்ன தவறு ?
    இவர்களைப்போல் 1981 to 1987 க்குள் பிறந்தவர்கள் 64% மீதி 12% 1988 க்கு பிறகு பிறந்தவர்கள் ……இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு படபிரிவிலும் குறைந்தபட்சம் 75% மேல் பெற்றவர்கள் ...இது போன்று சிறந்தவர்களை அரசு தேர்ந்த்தேடுத்ததில் என்ன தவறு இருக்கிறது ...இதைப்பற்றி கூறினால் அரசாங்கத்தை பாராட்டவேண்டும் ..அதை செய்வதற்கு நல்ல மனது வேண்டும் ...குற்றம் சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு ஒரு காரணம் தேவை அதுதான் தற்போது போராட்டம் என்ற பெயரில் தனது இயலாமையை வெளிப்படுத்தி ....பொது மக்களுக்கு இடையூறு ,தேர்தல் ஆணையம் ,ஆசிரியர் தேர்வு வாரியம், போலீஸ் இவர்களின் வேலையை தடுப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல்வாதிகள்...
    ஒரு சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுப்பது அரசாங்கத்தின் வேலை ...என்பது எங்களுக்கு புரிந்தது ...
    தற்போது இந்த தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என நினைப்பது தனக்கு வாய்ப்பு இல்லை என்ற ஒரே காரணம்தான்.
    நம்முடன் நாம்.....

    ReplyDelete
    Replies
    1. V.Good.Sir Thank You for your information

      Delete
    2. Sir konjam Caste wise reference kudunga SC,ST,MBC,BC and OC wise pls....

      Delete
    3. Caste wise koduka mattanga unmai veliya therinjudum

      Delete
  2. அய்யா Godwin tamizh என்னுடைய கருத்தை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி ......இரா .சங்கீதா சங்கரானந்தம்...உண்மை உரைக்கட்டும் ....

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ஆனால் இந்த தேர்வு எழுதியவர்களில் 65% கும் மேல் 1980 முன்பு பிறந்தவர்கள்.! 65% population ல் இருந்து வெறும் 24% பேர் மட்டுமே (உங்கள் கணக்குப்படி) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளானர்..!மீதமுள்ள 35% பேரிலிருந்து 76% பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. இது எப்படி நியாயமாகும்? அதேசமயம் PG TRB தேர்வானவர்களில் பெரும்பாலானவர்கள் 1985 க்கு முன்பு பிறந்தவர்கள் என்பதை நினைவில் கொள்க..! வேலைவாய்பிற்கான போட்டித்தேர்வு என்பது நிகழ்கால திறமையை சோதனை செய்ய வேண்டும்.. பள்ளியிலோ பட்டப்படிப்பிலோ பெற்ற மதிப்பெண்கள் மேற்படிப்பில் சேருவதற்கு மட்டுமே என்பதை புரிந்துகொள்ளவும்..நம் நாட்டின் கல்விக் கொள்கைகளும் இதனையே வலியுறுத்துகின்றன..!

    ReplyDelete
  6. நல்லாதான் இருக்கு இருந்தாலும் Wtg முறை ஒழிக்கப்படவேண்டும்.Tet mark work experience employment seniority இதுதான் சரியான முறை.யாரும் பாதிப்படையவில்லை என்ற நிலையை அடைய இதுவே சிறந்த வழியாக கருதுகிறேன்

    ReplyDelete
  7. டெட் மார்க்+ சீனீயாரிட்டிக்கு வாய்ப்பளித்தால் அனைவரும் வேலை பெற முடியும் பிரச்சினையில்லாமல். அதெல்லாம் சரிதான். இடைநிலை ஆசிரியர் 2587 பேர் நியமிக்கப் பட உள்ளனர் என அறிவித்த டிஆர்பி 1645 ஆசிரியர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளது.அதிலும் போன டெட்டில் பணியிடம் கிடைக்காதவர்கள் 825 பேரை நியமித்திருக்கிறது. தற்போதைய தேர்வில் தேர்வானவர்கள் 820 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். 825 பேருக்கு இந்த பணிநியமனத்தில் முன்னுரிமை அளித்த டிஆர்பி .

    ‘ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான், ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்’ என, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர். பி.,) வட்டாரம் தெரிவித்தது.

    இது எந்த வகையில் நியாயம்........

    ReplyDelete
  8. மாநாட்டில் கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்க. நன்றி

    ReplyDelete
  9. ஒரு வேலை ஆசிரியர் வேலைக்கு 10. , 15. ஆண்டுகளுக்கு முன் படித்தது தப்போ ????

    ReplyDelete
  10. TET is only the eligible test...TRB can only measure subject expert teachers. ..so TET and TRB should be conducted. ..This is the only way of all problems and right teachers can get job.

    ReplyDelete
  11. I agree with you Mr. Boopathi... TRB and TET should be conducted........ but who is responsible for wrong questions in PG TRB in 2013, in my major (Mathematics) there were 15 wrong questions and some of the questions had three correct options... i missed my chance by just by 1 mark.... if the above specified questions were correct, I would have scored more marks, since all the wrong questions had been taken from my favorite chapters...... In 2009, Karunanidhi period, three times result were published for a single exam.... my score was 90, 98, and 103. How this is possible in OMR system..... The one who works at TRB board are playing with our life...... if they do not know how to conduct exam, they might handover all responsible to some department like CSIR, ..... and it would not be correct if they blame someone who is taking care of printing......

    ReplyDelete
  12. hello hello
    tet mark aபொருத்த வரை 100 % அப்படியே பணி நியமனத்திற்கு பயன் படுத்தக்கூடாது. இதுதான் NCTE விதிமுறை..
    ஆனால் 0% முதல் 99% வரை பயன்படுத்த முடியும்...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive