“அரசு தொடக்க பள்ளிகளில், அக்டோபர் இறுதியில், 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,” என்று கர்நாடக தொடக்க கல்வித்துறை அமைச்சர், கிம்மனே ரத்னாகர் கூறினார்.
பெங்களூரு, குயின்ஸ் சாலை, காங்., அலுவலகத்துக்கு வந்த, அமைச்சர் கிம்மனே ரத்னாகர், கட்சியினரிடம் குறைகளை கேட்டார். பின், நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடக பள்ளிகளில், 11,400 ஆசிரியர்களை நியமிக்க, நிதித்துறையிடமிருந்து, ஏற்கனவே அனுமதி கிடைத்துள்ளது. மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், விரைவில் ஒப்புதல் கிடைக்கும்.
ஆசிரியர் நியமன செயல்பாடுகள், மாநிலத்தின், 30 மாவட்ட மையங்களில், ஒரே நாளில் நடக்கும். இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.இது, அக்டோபர் இறுதியிலோ அல்லது நவம்பர் முதல் வாரத்திலோ முடிவடையும். சி.இ.டி., மூலம், ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். டி.எட்., முடித்துள்ள, 22 ஆயிரம் பேர், இந்த தேர்வை எழுதவுள்ளனர். ஆசிரியர்களுக்கு, கம்ப்யூட்டர் அறிவு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க, ஆண்டு தோறும், 5,000 ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ள, முதல்வர்சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகள் பணியாற்றிய கல்வி அதிகாரி, டி.டி.பி.ஐ., அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, அவசர சட்டம் வெளியிடப்படும். இச்சட்டத்தின்படி, அதிகாரிகள், தங்களின் சொந்த மாவட்டங்களில், இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக, பணியில் நீட்டிக்க வாய்ப்பிருக்காது.கல்வி அலுவலகங்களில் உள்ள கிளர்க்குகள் உட்பட ஊழியர்களை, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமாக பணிபுரிய அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் இடமாற்றம், தற்போது, ஐந்து சதவீதமாக உள்ளது. இதை, எட்டு சதவீதமாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.கணவன், மனைவி ஒரே இடத்தில் பணியாற்ற, மனிதநேய அடிப்படையில் வாய்ப்பளிக்கப்படும்.
கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ௧.12 லட்சம் மாணவர்களுக்கு, தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன.சில பகுதிகளில், மாணவர்களே தனியார் பள்ளிகளுக்கு செல்ல விரும்பவில்லை. இன்னும், 11 ஆயிரம் மாணவர்கள், கல்வி உரிமை சட்டத்தின் கீழ்,தனியார் பள்ளிகளில் சேர வாய்ப்புள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்தாத, தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளிகளில், குடிநீர் வினியோகிப்பது, கழிப்பறைகள் அமைப்பது ஆகியவை தொடர்பாக, கிராம வளர்ச்சித் துறையுடன் இணைந்து, திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதற்காக, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், தலா, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...