மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்: அக்டோபர் 14ம் தேதி உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக தஞ்சை மாவட்ட பொதுக்குழு
கூட்டம் அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை
வகித்தார். மாவட்ட செயலாளா ரமேஷ், பொருளாளர் முருகையன், அமைப்பு செயலாளர்
ஆல்பர்ட் திவ்யசீலன் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்ட செயலாளர்
கிருஷ்ணகுமார் வரவேற்றார்.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக முன்னாள்
இயக்குனர் கருணாகரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அறிக்கையை தமிழக அரசு
வெளியிட்டு நியாயமான தீர்வு வெளியிட வேண்டி வரும் அக்டோபர் 14ம் தேதி
திருச்சியில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு தஞ்சை மாவட்டத்தில்
பணியாற்றும் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கலந்து கொள்ள
வேண்டும். அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க வேண்டும்.
மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த நலத்திட்ட
தொடர்பு அலுவலரை ஒவ்வொரு பள்ளிக்கும் நியமிக்க வேண்டும் என்பது உட்பட
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...