Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th Latest Science Study Material

Science Study Material
Click Here For Download Our Other Study Materials.

Prepared by Mr.  M.G.RAYMOND, M.Sc., B.Ed.,
B.T.ASSISTANT,
ST.PAUL’S MAT. HR. SEC. SCHOOL,
BLOCK -4, NEYVELI – 607801

&
 
Prepared by, Mr. K. Uduman Ali, M.Sc., M.Ed.,
GHS, Anampatti- 621312,
Trichy Dt.






5 Comments:

  1. கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

    "நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

    இதற்கு கழுதை சொன்னது
    "நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

    கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

    அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

    "நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

    இதற்கு நாய் கூறியது,
    "கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

    கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

    அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்

    "நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

    இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

    கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.

    கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

    இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

    கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

    கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.

    அன்று முதல்
    மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

    கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

    குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

    வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்...

    இப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு?

    ReplyDelete
    Replies
    1. அவ்வப்போது இது போன்ற பதிவுகளை தொடரும்படி வேண்டுகிறேன் நண்பரே ...

      Delete
    2. அவ்வப்போது இது போன்ற பதிவுகளை தொடரும்படி வேண்டுகிறேன் நண்பரே ...

      Delete
  2. TET Today Cause News...(Update News)

    இன்று காலை 11 அளவில் TET குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 5 முக்கிய வழக்குரைஞ்சர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞ்சர்களும் ஆஜராகி வாதாடினார்கள்.
    அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும் திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர்.

    காலையில் 5% தளர்வு முன் தேதியிட்டு வழங்கியது செல்லாது என்று வாதாடிய வழக்குரைஞ்சர்களுக்கு 5% தளர்வு வழங்குவதும் வழங்காததும் அரசின் கொள்கை முடிவு என்று நீதிபதிகள் தீர்க்கமான வார்த்தைகளை உதிர்த்ததாக தெரிகிறது.எனவே 5% தளர்வு குறித்துயாரும் பயம் கொள்ள வேண்டாம்.

    அடுத்து G.O 71 க்கு எதிரான வாதம்.இந்த வாதத்தின் போது தமிழகத்தில் பல்வேறு பாடத்திட்டம்(syllabus) பின்பற்றப்பட்டு பல்வேறு வகையான வழியில்(medium-CBSC,STATE BOARD.......like that) கல்வி கற்பிக்கப் படுகிறது.எனவே weightage முறையில் அவர்கள அனைவரையும் ஒரே மாதிரி கணக்கில் கொள்வது தவறு என்று வாதிகளின் வழக்குரைஞ்சர்கள் வாதாடினார்கள்..

    அதற்கு மறுப்பு தெரிவித்த மாண்புமிகு நீதிபதிகள், பிற கலந்தாய்வுகளின் பொழுது CBSC க்கு தனியானதொரு கலந்தாய்வும் state board க்கென ஒரு தனியான கலந்தாய்வும் நடைபெறுகிறதா என்ற கேள்வியை அந்த வாதங்களை முன் வைத்த வழக்குரைஞ்சர்களிடமே முன் வைத்தார்.அதற்கு சில வினாடிகளுக்குப் பிறகு இல்லையென்றே பதில் வந்தது.அதைப்போலவே CBSC,STATE BOARD க்கு என தனித்தனியான weightage மதிப்பெண் வழக்கும் முறை கடைபிடிக்க முடியாது என நீதிபதி அவர்களே தெரிவித்துள்ளார்கள்.வாதிகளின் பல கேள்விகளுக்கு நீதிபதிகள் அவர்களே எதிர் கேள்வி கேட்டு நியாத்தை வெளிக்கொணர்கிறார்கள்.

    அரசு தரப்பில் வாதாடும் AG அவர்களும் இன்ன பிற வழக்குரைஞ்சர்களும் சிறப்பாக வாதாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.வாதங்கள் தற்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.முழுமையான விவாதம்விரைவில் update செய்யப்படும்

    ReplyDelete
  3. நமது அரசு தரப்பு வக்கீல் திரு. சோமையாஜி தெளிவான, மிகக் கடுமையான வாதங்களை வைத்துக் கொண்டு இருக்கிறார்.
    சந்தர்ப்பவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
    கடவுளின் பார்வை நம்மை நோக்கியே..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive