Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET - ஆசிரியர் பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் - தினமணி

          இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி கூறினார்.

         இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) வெளியிடப்பட்டுள்ளது.

இதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையிலும் தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தினமணி நிருபரிடம் கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான பல்வேறு வழக்குகள் காரணமாக தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது பெரும்பாலான வழக்குகள் நிறைவடைந்த நிலையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் சில பாடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்கள், வழக்குகள் காரணமாக நிலுவையில் இருந்தன. நீதிமன்ற உத்தரவுப்படி, சில விடைகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் நபர்களுக்கான திருத்தப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்குள்...

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல், எஞ்சியுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் ஆகியவை தொடர்பாக பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, இந்த இரண்டு தேர்வுப் பட்டியல்களும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்குள் வெளியிடப்படும்.

அடுத்ததாக, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். ஒரு மாதத்துக்குள் இப்போது நிலுவையில் உள்ள பெரிய அளவிலான ஆசிரியர் பணி நியமனங்கள் முடிக்கப்படும் என்றார் அவர்.




6 Comments:

  1. hi friends
    if you are in madurai, please help me to find O.C.P.M Hr.Sec.School ,Madurai. I am from nellai. please give the route& landmarks

    ReplyDelete
    Replies
    1. From periyar bus stand u can get c-3 bus..

      Delete
  2. 1. தற்பொழுது உள்ள சூழலிலும் ,எதிர்காலத்திலும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

    2. முக்கியமாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை திடீரென நீக்கியது. இதனால் 15 மற்றும் 20 ஆண்டுகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து பதிந்துவந்து ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற ஏமாற்றமும் மன வலியுமே மிச்சம்.

    வெய்டேஜ் பிரச்சனை

    1. தற்பொழுது உள்ள வெய்டேஜ் முறையால் +2 மற்றும் ஆசிரிய பட்டய மதிப்பெண்ணை அதிகப்படுத்த வாய்ப்பில்லை

    2. வெய்டேஜ் முறையில் தற்பொழுது ஆசிரியர் பணி கிடைக்கவில்லையெனில் அடுத்து வரும் தகுதித்தேர்வில் வெற்றி பெறுபவர்களுடன் போட்டி போடவேண்டிய சூழல் ஏற்படும்.அப்பொழுதும் இதே நிலமைதான்.ஆக எந்த காலத்திலும் ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பே இல்லை.

    3. இப்பொழுது உள்ள பாட முறைக்கும் 15 மற்றும் 20 வருடங்களுக்கு முன்பு உள்ள பாட முறைக்கும் உள்ள வேறுபாடு, பாட பிரிவுகளின் வேறுபாடு மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்களின் வேறுபாடு இவற்றால் தகுதியான வெய்டேஜ் மதிப்பெண்ணை கண்க்கிடுவது சரியானதாக இருக்க முடியாது.


    4. அப்பொழுது உள்ள சூழ் நிலைவேறு. இப்பொழுது கம்யூட்டர்,இன்டர்னெட் வசதிகள் அதிகம்.வாய்ப்புகளும் வசதிகளும் தற்பொழுது அதிகமாக உள்ளது.


    5. 2010 கல்விக்கொள்கையின்படி நடப்பு ஆண்டின் அறிவை சோதிக்கவேண்டுமே தவிர பழைய மதிப்பெண்களை வெய்டேஜ் முறைக்கு எடுப்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.


    6. தேர்விற்கு முன்பாக அறிவிக்கவேண்டிய GO க்களை நினைத்த நேரத்தில் ,நினைத்த இடத்தில் தமிழக அரசு அறிவித்ததது.


    7. தமிழக அரசு 5 சதவீத தளர்வை 2013 தேர்வர்க்கு மட்டும் கொடுத்து 2012 தேர்வர்களை ஏமாற்றியது. 2012 தேர்வர்களுக்கும் கொடுத்தால் 2012 இல் தேர்வாகி பணியில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணம். அப்படி கொடுத்தால் டி.ஆர்.பிக்கு வேலை பளு அதிகமாகும்.

    8. தமிழக அரசின் இது போன்ற முறையற்ற அறிவிப்புகளால் என்னைப்போன்றோர் பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரமும், உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது

    .



    9. ஆசிரியர் பணி வழங்க இவ்வளவு கால தாமதம் ஆனதற்கு காரணம் வெய்டேஜ் முறையாகும். இதற்கு 2012 ஆம் ஆண்டின் முறையில் (TET Pass + SENIORITY) ஆசிரியர் பணி வழங்கியிருந்தால் இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது

    10. இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,

    (அல்லது)… தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம் , வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்.

    ReplyDelete
  3. Dear Paadasalai.. And Respected Thinamani எத்தனை ஒரு மாதம் என்று தெரிந்துக்கொள்ளலாமா........

    ReplyDelete
  4. Nallathen sollurainga detailu.....Nambbathan mudiyala.

    ReplyDelete
  5. innum ethane naal chavvu mathiri ilupinga???oh my god..engalukku epothan nalla neram varumo theriyalaiye????????///

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive