Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Article: வெயிட்டேஜ் முறை எதிர்ப்பு போராட்டம் யாருக்காக!?

      தகுதிதேர்வு என்ற ஒன்று நடந்து முடிந்து கிட்டதட்ட ஓராண்டுகாலம் முடிவடைந்து விட்டது. இந்த தகுதிதேர்வில் கிட்டதட்ட 6லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதினர். அதில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 ம் சேர்த்து 75000 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் பேப்பர் 2 க்கான தேர்வு பட்டியல் சமீபத்தில் வெளியானது. தேர்வு பட்டியல் வெளியானதும் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் யார் பெயரெல்லாம் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லையோ அவர்களில் பலபேர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பலபேர் ஒருங்கினைந்து உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றனர்.

            இதில் உண்மையில் பாதிக்கபட்டவர்கள் யார்? 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்களா? மற்றவர்களுக்கு எல்லாம் இந்த பாதிப்பு என்பது கிடையாதா? நாம் நடத்திய இந்த போராட்டத்தின் நோக்கம்தான் என்ன?  நமது கோரிக்கைகள் இரண்டாக பிரித்து பார்க்கலாம்.

  (I). 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என்பதா? அல்லது

  (II). ஜிஓ 71 ஐ ரத்து செய்து தகுதிதேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனீயாரிட்டி & பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுத்து பணிநியமணம் செய்யவேண்டும் என்பதா?

   இரண்டிற்கும் முரண்பாடு உண்டு என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் நமது நோக்கம் தவறான பாதையில் சென்றுவிடகூடாது.

               நாம் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் என்று சொன்னால் அது அரசு கொடுத்த 5% மதிப்பெண் தளர்வை எதிர்ப்பதாகும். ஆனால் நாம் GO 71 வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவும், டிஇடி யில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவேண்டும் என்று கோரிக்கை அழுத்தமாக வைக்கப்படும் போது, இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரையும் அரவனைத்து செல்வதாக அமையும். மேலும் இதில் 90க்கு மேல், 90க்கு கீழ் என்ற பாகுபாடெல்லாம் அகற்றுபட்டுவிடும். இந்த வெயிட்டேஜ் முறையால் இப்போது மட்டும் பாதிப்பில்லை அடுத்தடுத்த தேர்வுகளில் எதிர்காலங்களிலும் இது தொடரும். இப்போது நாம் ஒன்றினைந்து இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற தவறினால்  நமது எதிர்காலம் என்பது? ??? ஆகவே இந்த போரட்டம் நமது எதிர்காலத்திற்கான போரட்டம்.

              இந்த போராட்டம் யாருக்காக என்பதை நாம் தெளிவாக சிந்திக்க வேண்டும். 90க்கு மேல் பெற்றவருக்கு மட்டும் தான் இந்த போராட்டமா? ஏன் இன்று 82 மதிப்பெண் பெற்ற ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெறும் போது அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா?  இன்று தேர்ச்சி பெறாத ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெற மாட்டாரா? அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா? சிந்திக்க வேண்டும் நண்பர்களே. 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்கள் போராட்டத்தில் கலந்து கொன்டால் கூட தேர்வு பட்டியலில் பெயர் வரவில்லை என்ற ஆதங்கத்தில் கலந்து கொள்கிறார்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாவோம்.  ஆகவே இந்த வெயிட்டேஜ் முறை பாதிப்பு என்பது தகுதிதேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் 3 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை உனர்ந்து இனிவரும் காலங்களில் யாரையும் மதிப்பெண் அடிப்படையில் பாகுபடுத்தாமல்  அனைவரும் ஒன்றினைந்து போராடுவோம்.
 சிந்தியுங்கள் நண்பர்களே! இது நம் எதிர்காலம்.

Article by.
கோவிந்தராஜ்.,
நாமக்கல் மாவட்டம்.




42 Comments:

  1. காலை 9 மணி அளவில் ஆசிரியர்

    தேர்வு வாரியத்தை முற்றுகை

    ReplyDelete
    Replies

    1. நண்பர்களே உங்கள் போராட்டம் வெற்றீ அடைய வாழ்த்துகள்
      ஆனால் நீங்கள் ஒன்று சேர்ந்து உச்சமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் மட்டுமே உங்களுக்கு விமோசனம்.நீதிபதி திரு.நாகமுத்து அளித்துள்ள தீர்ப்பு அங்கே செல்லுபடியாகது.
      1.அவர் சொன்ன Formula for weightage ஒரு யோசனை மட்டுமே.மேலும் வேரு ஏதாவது நல்லமுறை இருந்தால் அரசு மேறகொள்ளலாம் என்பதே தீர்ப்பு.
      2.அவர் சொல்லும் முறையை Kendryiya Vidhyalaya Sangatan அதாவது (Central Government-ன் நிறுவனம்) மைய அரசால் நிர்வகிப்படும் நிருவனமே weightage system முறையை ஏற்றுகொள்ளாமல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் ஒரு தேர்வை கல்வி தகுதியை சோதிக்க நட்த்தி ஆசிரியர்களை தேர்வு செய்கின்றது.
      3. TET தேர்வில் 5% தகுதி தளர்வானது பின் தங்கியவர்களூக்கு அளித்து போதிலும் TET தேர்வில் 90 மதிப்பெண்க்கு மேல் வாங்கியுள்ள பின் தங்கியவர்களை 90 மதிப்பெண்க்கு கீழ் வாங்கீயுள்ள SC,ST,BC,MBC.BCM.SCA பின் தங்கியுள்ளோர் வேலைக்கு Weightage formula மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
      இதை சமீபத்தில் வெளியிட்டுள்ள தேர்வு பட்டியலிள் காண முடிகின்றது.
      4.G.O 252 –ல் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வி அமைச்சர் இடம் பெற்று இருப்பது சட்டப்படி முறையாகாது ஏன் என்றால் அவர் மற்ற உறுப்பினர்களின் ஆதிக்கம் செய்யும் அதிகாரம் கொண்டவர்,மேலும் அரசியல்வாதியாவர் அதனால் அந்த குழு எடுக்கும் முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது என்பது அவதூறு ஆகும்..
      Thanks to jayveni

      Delete
    2. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பணி நியமன பட்டியலில் இடம்பெறாத ஆசிரியர்களில் பலர் சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு வரும்பொழுது ஆங்காங்கே கைது செய்யப்படுவதாக தொலைகாட்சியில் செய்திகள் வருகின்றன. இது மிகவும் வருந்தத்தக்கதும் வேதனை அளிக்கும் செய்தியாகும். நியாயமான கோரிக்கை வைத்து போராடுபவர்களை கைது செய்யாமல் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமுகமான நிலையை அரசு ஏற்படுத்த வேண்டுகிறேன்.

      Delete
    3. TET pass செய்தால் வேலை என்று கூறப்பட்டது. Pass செய்தவர்கள் வேலை கேற்பது நியாயம். அவர்களை கைது செய்வது சரியானதன்று.

      Delete
  2. வணக்கம் திரு. கோவிந்தராஜ்,
    தங்கள் கட்டுரை தெளிவாக, நியாயமான கருத்துகளை எடுத்துரைப்பதாக இருந்தது. அதனால் உடனடியாக தற்போது நமது பாடசாலை வலைதளத்தில் வெளியிட்டுள்ளோம். தங்கள் போராட்டம் வெற்றி பெற்று பணி அனுபவம் மற்றும் பதிவு மூப்புக்கு (தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ) முன்னுரிமை வழங்கினால் மிகவும் மகிழ்வோம். வாழத்துக்கள்!
    நன்றி!
    - அன்புடன் பாடசாலை.

    ReplyDelete
    Replies
    1. Very nice Article...
      Good morning friends....

      Delete
    2. பணி அனுபவம் மற்றும் பதிவு மூப்புக்கு குறிப்பிட்ட அளவிற்காவது பணி நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்கி இளையோர், மூத்தோர் என அனைவருக்கும் சமமாக பணி வாய்ப்பு வழங்கினால் மிகச்சிறப்பாக இருக்கும் என பாடசாலை கருதுகிறது. இவற்றை இனிவரும் காலங்களிலாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறோம்.

      Delete
    3. Ippoluthu porattam nadathuvorin kavanathirgu.... neengal tharbodhu seidu kondirupavai anaithum..needhimandram.... matrum. Arasai ethirpadhu pol ullathu..thayavuseithu karuthil kollungal.... ellorum idam pera vendum endruthan.. nedhimandram.. intha waightage method kuduthanga...ipoluthu neengal vaikum korikkai...younsters ... mattrum...poradi avargal petra relaxationku ethiragavum ullathu....nandri nabargaley...

      Delete
    4. உங்களுக்கு தெரியுமா!!!!!!!!!!!!

      கடந்த வாரம் ஆசிரியர் தேர்வு வாரியம் வௌயிட்ட முதுகலை ஆசிரியர் ஆங்கில தேர்வுபட்டியலில் 151 பேரின் பிறந்த தேதி மாறியுள்ளது அதாவது பிறந்த நாள் பிறந்த மாதமாகவும் பிறந்த மாதம் பிறந்த தேதியாகவும் மாறியுள்ளது அவர்களின் தரவரிசையும் மாறியுள்ளது மேலும் மாநில அளவில் முதல் இடம் பெற்றவருக்கும் மாறியுள்ளது பிறந்த தேதி மாறியுள்ளதால் கடைச கட்ஆப் ல் உள்ளவர்களின் பிறந்த தேதி மாறி வயதில் மூத்தவருக்கு கிடைக்காமல் இளையவருக்கு தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் if u have doubt in it plz download and compare cv list and selection list

      Delete
    5. தெரிந்துகொள்வோம் :

      தகவல்களை சேமித்து வைக்க பெரும்பாலான நபர்கள் USB Pendrive-களை பயன்படுத்துவார்கள். இதில் முக்கியமான பிரச்னை வைரஸ் பிரச்னை, வைரஸ்கள் மிக சுலபமாக Pendrive-ல் புகுந்து, தகவல்களை பாதிக்கிறது. அப்போது கணனியில் Pendrive-வை ஓபன் செய்தால் எந்த தகவலும் இருக்காது. ஆனால் Properties சென்று பார்க்கும் போது பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.

      கோப்புகளை மீண்டும் திரும்ப பெறுவதற்கு, எந்தவொரு மென்பொருளையும் உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.

      இதற்கு முதலில்,

      1. Pendrive-யை கணனியில் சொருகி கொள்ளுங்கள்.

      2. Start –> Run –> cmd –> Enter கொடுக்கவும்.

      3. இப்போது உங்கள் Pendrive எந்த டிரைவில் இருக்கிறது என பாருங்கள். இதற்கு My Computer சென்று தெரிந்து கொள்ளலாம்.

      4. உதாரணமாக E: டிரைவில் Pendrive இருக்கிறது என வைத்து கொள்வோம், அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

      5. அதன் பின் attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள், ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும்.

      சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள், உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

      Delete
  3. இன்று மாற்றுத்திறனாளி ஆசிரிய நண்பர்களின் டிஆர்பி முற்றுகைப்போராட்டம் இருப்பதாக தெரிகிறது....

    ReplyDelete
  4. Yallam suyanallamga porattam yengaya naanga one month munnadi porattam nadatthyapothu avan,avan enakku velai kifaikkum en nambikkya vittele irunthinga eppo unhalukku velai illa endravudan suyanlama yengangaya intha suna porattam'ungallukku job kidaikkala endravudan porattama ponga,ponga FIR waiting for you go,go.jailukku pooppa.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. இதிலும் முரண்பாடு உள்ளதே.வேலைவாய்ப்பு அலுவலக மூப்பு மற்றும் அனுபவம் அடிப்படையில் என்றால் சமீபத்தில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இளங்கலை கல்வியியல் பயின்ற இளைஞர்களின் கதி

    ReplyDelete
    Replies
    1. Aduthu orirandu varudathil kidaikka pogirathu dontoryma

      Delete
  6. I want to ask one thing mr kovindharaj seniority method follow pannina youngsters yarrum velaikku poga mudiyathu..itharkku etharkku exam vaikkanum..employment seniority padiye poda vendiyathu thana...pala aandukalukku munbu +2 mudithom degree mudithom endru koorum neengal pala aandukku munbu kodutha mathiri salary kodutha vaangibingala...tharpothu ulla muraiyil anaithu tharapinnarum ullanare enbathu than unmai..neengal maruthalum unmai ithuthan...

    ReplyDelete
    Replies
    1. vani thiru அவா்களே நாங்கள் முழுக்க சீனியாாிட்டி அடிப்படையில் வேலை போட சொல்லவில்லை. எல்லோருக்கும் சமமான டிஇடி மதிப்பெண் வைத்து வேலை போடுங்கள் என்றுதான் கூறுகிறோம். எப்போதோ படித்த +2, degree ஐ வைத்து ஏன் வேலை போட வேண்டும் என்று தான் கூறுகிறோம். நீ +2, படித்தது வேறு காலம் நாங்கள் +2 படித்தது வேறு காலம் . அதை ஏன் எடுக்க வேண்டும். இரண்டு பேருக்கும் பொதுவான டிஇடி மதிப்பெண்ணை வைத்து வேலை தருவதால் youngsters senior என்று இல்லாமல் தகுதி உடையவா்கள் வரலாமே? அது ஏன் உங்களுக்கு தொிய மாட்டேங்குது. இப்போது வைக்கும் டிஇடி ஐ நாங்கள் படித்த காலத்தில் வைத்திருந்தால் நாங்களும் அப்போதே வேலையில் சோ்ந்து இருப்போம். சீனியாாிட்டி என்று சொல்லி இத்தனை ஆண்டுகளாக காக்க வைத்து தற்போது வேலையை நெருங்கும் போது போட்டி தோ்வு என்று சொன்னால் எங்கள் இடத்தில் இருந்து நீங்கள சிந்துத்து பாருங்கள்.

      Delete
    2. Direct ah sollavidallum seniority ku mark kodukkum pothe youngster yarum vara mudiyathu illa..60 percentage given for tet only if u score high mark in that +2 degree wont affect you ..y u cant do that...kalathitku erba palveru mattrangalai virunum naam arasin puthiya kolkaikalai yettrukkollathan vendum..

      Delete
    3. Flash news:
      Sendra aandu nadandhu mudindha tet thervil (2012)82 -89 varai mathippen petravargalukkum mathippen thalarvu sellum..maelum avarguluku vaelaiku munnurimai endrum arasu arivuppu...thideernu ippadi oru news vandha???

      Delete
    4. Yen sir ippa irukkara pirachanai paththathunu avangalaium porada thoondivid aringala???



      Delete
    5. Apo indha tet la cv mudichapram 82-89 eduthaale paassnu thoondivittadhu yaar mam

      Delete
    6. dear vani suppose neenga pathu anduku mun piranthirunthal ippadi than paesuveengala, chinna ponnu adhan ungalala mathavangala pathi yosika mudiyala

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  7. something is better than nothing....
    உரிமை போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. அழைக்காவிட்டால் தொலைத்து விடுவேன்
    சி.இ.ஒ-வை மிரட்டிய அதிமுக எம்.பி.-தினமலர்

    முதல்வர் அவர்கள் அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும்...
    இது கல்வித்துறையின் அரசியல்
    தலையீடை காட்டுகிறது.....

    கல்வித்துறைக்கு இதுதான் சுதந்திரமா???

    ReplyDelete
    Replies
    1. CEO விற்கே இந்த கதி ...
      வாழ்க ஜனனாயகம் !!!!

      Delete
    2. Ingee nadappathu jananayakamaa illai pananayakamaaa???????

      Delete
    3. ஜனனாயகம் ரூ200க்கு விற்கப்பட்டது..

      Delete
  9. உங்களுக்கு தெரியுமா!!!!!!!!!!!!

    கடந்த வாரம் ஆசிரியர் தேர்வு வாரியம் வௌயிட்ட முதுகலை ஆசிரியர் ஆங்கில தேர்வுபட்டியலில் 151 பேரின் பிறந்த தேதி மாறியுள்ளது அதாவது பிறந்த நாள் பிறந்த மாதமாகவும் பிறந்த மாதம் பிறந்த தேதியாகவும் மாறியுள்ளது அவர்களின் தரவரிசையும் மாறியுள்ளது மேலும் மாநில அளவில் முதல் இடம் பெற்றவருக்கும் மாறியுள்ளது பிறந்த தேதி மாறியுள்ளதால் கடைச கட்ஆப் ல் உள்ளவர்களின் பிறந்த தேதி மாறி வயதில் மூத்தவருக்கு கிடைக்காமல் இளையவருக்கு தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் if u have doubt in it plz download and compare cv list and selection list

    ReplyDelete
  10. TET Pass and Employment Seniority is the real solution for this problem. If this weightage system continues this will make more problem in the coming year also

    ReplyDelete
  11. Opportunities are same for all bt the only difernz is:
    "Successful Person gives Results&Unsuccessful Person gives Reasons"

    ReplyDelete

  12. சுருக்கமாக ஒரு புரட்சி தேவை

    சமீப காலமாக அச்சு ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இடப் பிரச்சினை, நேரச் சிக்கனம் போன்றவற்றின் காரணமாக மொழியில் மாற்றங்களும் சிதைவுகளும் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை சொற்களின் சுருக்கங்களை இயல்பாகப் பயன்படுத்திவருகிறார்கள் என்பதற்கு ஆங்கில நாளேடுகளின் செய்தித் தலைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் டிவிட்டர், ஃபேஸ்புக் பதிவுகளையும் பார்க்கும்போது தெரிகிறது.
    -
    ஆங்கிலம் அளவுக்குத் தமிழில் சுருக்கங்கள் உருவாக்கப்படாததால், பெரியதாக இருக்கும் தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாக, இடப் பற்றாக்குறை காரணமாக, ஆங்கிலச் சொல்லின் எழுத்துப் பெயர்ப்பையே பல சமயங்களில் தமிழில் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக, 9 எழுத்துக்களைக் கொண்ட ‘உயர் நீதிமன்றம்’ என்ற சொல்லுக்குப் பதிலாக 4 எழுத்துக்களைக் கொண்ட (துணை எழுத்துக்களையும் சேர்த்தால் 6) ஐகோர்ட் என்ற எழுத்துப் பெயர்ப்பைப் பல இடங்களில் பயன்படுத்துகிறார்கள்.
    -
    தமிழைச் சுருக்கமாகப் பயன்படுத்துவதால் தமிழ் சிதையும் என்று வாதிட்டுக்கொண்டிருந்தால் அந்த இடத்தை ஆங்கிலம்தான் எடுத்துக்கொள்ளும். தவிர, இந்தச் சுருக்கங்கள் கட்டுரைகள், புத்தகங்கள் போன்ற வற்றில் பயன்படுத்துவதற்காக அல்ல; பத்திரிகைகளின் செய்தித் தலைப்புகள், குறுஞ்செய்திகள், சமூகவலைத்தளங்கள் போன்றவற்றின் வசதிக்காகத்தான்.
    -
    கட்சிகள் (தி.மு.க., பா.ஜ.க., காங்.), சில அமைப்புகள் (ஐ.நா.), தலைவர்கள் (மு.க., வைகோ), ஊர்கள் (புதுவை, மயிலை) என்று சுருக்கங்கள் தமிழில் மிகவும் பிரபலம். இவற்றைத் தவிர பெரும்பாலான சுருக்கங்களை ஆங்கிலச் சுருக்கங்களின், ஆங்கிலச் சொற்களின் எழுத்துப் பெயர்ப்பாகத்தான் (சார்க், ஐ.ஏ.எஸ்., எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஐகோர்ட்) எழுதுகிறார்கள்.
    -
    இவற்றையெல்லாம் தவிர்க்க, தமிழின் இயல்பும் அழகும் மாறாமல் நாமும் சில சுருக்கங்களை முயற்சித்துப் பார்க்கலாம். சுருக்கங்களை உருவாக்கும்போது சொற்களின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து உருவாக்குவது பொது வழக்கு. அதுதவிர, சொற்களைப் பாதியாகவோ, சொற்களிலுள்ள முக்கியமான எழுத்துக் களை மட்டும் எழுதியோ உருவாக்குவது மரபு. சொற்களைக் குறைக்கும்போது சொற்களின் எந்தப் பகுதியில் வெட்டுகிறோமோ அங்கே ஒரு முற்றுப்புள்ளி வைப்பதன்மூலம் அந்தச் சொல் குறுக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தலாம்.
    -
    சில பரிந்துரைகள்:
    -
    உச்ச நீதிமன்றம் = உச்ச நீதி.
    உயர் நீதிமன்றம் = உயர் நீதி.
    மக்களவை = ம.அவை
    மாநிலங்களவை = மா.அவை
    கடன் அட்டை = க. அட்டை
    போக்குவரத்து = போ.வரத்து
    மூத்த குடிமக்கள் = மூ.கு.மக்கள்
    பதவியேற்பு = ப.ஏற்பு
    மருத்துவர் = மரு. (எ.கா- மரு. ராமதாஸ்)
    ராணுவம் = ராணு.
    காவல் துறை = கா.துறை
    சுற்றுச்சூழல் = சு.சூழல்
    குறுஞ்செய்தி = கு.செய்தி
    இணையதளம் = இ.தளம்
    -
    இவற்றைப் போல் மேலும் எண்ணற்றச் சுருக்கங்களை உருவாக்க முடியும்.
    -
    இந்தச் சுருக்கங்களெல்லாம் ஆரம்பத்தில் சற்று விசித்திரமாகத் தோன்றினாலும் போகப்போகப் பழகிவிடும். பத்திரிகைகள், கைபேசி, சமூகவலைத்தளங்கள் போன்றவற்றில் தமிழின் பயன்பாட்டு மதிப்பை மேலும் அதிகரிக்க இந்தச் சுருக்கங்களும் உதவக்கூடும்.
    -
    மறக்கப்பட்ட சொல்: ஓங்கில்
    -
    ஓங்கில் என்ற உயிரினத்தைச் தெரியுமா உங்களுக்கு? வேறொன்றுமில்லை, டால்ஃபினின் தமிழ்ப் பெயர்தான் அது. தமிழக மீனவர்களிடையே இப்படி ஒரு அழகான சொல் புழக்கத்தில் இருப்பது தெரியாமல் டால்ஃபின் என்ற ஆங்கிலச் சொல்லையே நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
    -
    சொல் தேடல்
    -
    ‘டெக்ஸ்ச்சர்’ (texture) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்: இழைவு.
    -
    கோயில் கோபுரத்துக்குப் பின்னாலிருந்து சூரியன் பிரகாசமாக ஒளி வீசும்போது கோபுரத்தின் வடிவம் இருண்டும், வடிவத்தின் வெளிப்புறம் பிரகாசமாகவும் தோன்றும். இது போன்ற உருவங்களுக்கு ஆங்கிலத்தில் சிலுவட் (silhouette) என்று பெயர். இதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
    -
    இந்தக் கேள்விக்கான பதிலையும் மொழி குறித்த புதுமையான தகவல் களையும் வாசகர்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

    ReplyDelete
  13. If a person waiting for 10 years and have 10 years school teaching experience, what preference is given in TET weightage ? How the weightage is real?

    ReplyDelete
    Replies
    1. i understand sir but its very difficult to satisfy each and every group, what govt will do, if one prob solves another case?

      Delete
  14. தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,

    அல்லது தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்

    ReplyDelete
  15. Bye bye padasalsalai... indru selection listil irukum naan ... koodiya viraivil... export company or milk production company tholilali .... ena matra ninaikum.. thudikum kadasi nera porattakaragaluku nandri... bye tet... bye bye pg trb...jenmathukum marakamaten...

    ReplyDelete
  16. கவன ஈர்ப்பு போராட்டம் BT ASSISTANT


    நண்பர்களேநேற்று முடிந்த உண்ணா விரத போரட்டத்தை அடுத்து இன்று TRB ( DPI ) பள்ளிகல்வி துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அனைவரையும் காவல்துறை கைது செய்தது. அனைவரும் உணவுகூட உண்ணாமல் மாலைவரை சமுதாய கூடத்தில் தொடர்கிறது. நாளையும் தொடரும். அனைவரும் நாளையும் இதேபோல் TRB அலுவலகம் முன்பு வந்துவிடவும். கடைசி முயற்சி நன்றி.
    BT ASSISTANT 2013

    ReplyDelete
  17. Nam porattam nichayam vetri adayum

    ReplyDelete
  18. I am vasatha i got 67.85 in paper -1 tamil midium . MBc women any chance plz reply me

    ReplyDelete
  19. Iharke evalo thudikkirare..

    ReplyDelete
  20. 108 mark vangi...verify..poi...adutha..irupathu nalil. amma kail ader. Vanga. Katuirun thavargal....oru. varusamagi....listla. illatha. Podu. eppadi. thudithirupargal....porttathai. comment. Adikiravargal. Unaravendum....

    ReplyDelete
  21. முதலமைச்சரின் நாடகம் தான் நம் வாழ்வை இப்படி சோதிக்கிறது. அவர்கள் தேர்தலில் வெற்றியபெற நம் வாழ்க்கையை பந்தாடிவிட்டனர்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive