Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Article: மேலே கழுகுகள் வட்டமிடுகின்றன!

மேலே கழுகுகள் வட்டமிடுகின்றன!



வெற்றிபெற்றவர்களுக்கு :

         தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ... உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்துள்ள ஆசிரியப்பணிக்கு கைமாறாக எண்ணற்ற ஏழை மாணவர்களின் மனதில் கல்வி ஒளியையும் அவர்கள் வாழ்வில் அறிவு ஒளியையும் ஏற்றிவைத்து கூடவே அன்பு, அறம், ஒழுக்கம், தியாகம், கருணை, வீரம் போன்ற விழுமியங்களையும் கற்றுத்தாருங்கள் .........

தோல்வியடைந்தவர்களுக்கு :

          உங்கள் தோல்விகளை விதையுங்கள், நம்பிக்கை எனும் உரமூட்டுங்கள், தொடர்ந்து முயற்சி எனும் நீர்வார்த்து வாருங்கள், நாளை உங்கள் கைகளிலும் வெற்றிக்கனி வந்து விழலாம் ! வெற்றி பெற்றவர்கள் தங்கள் வாழ்க்கையை வரலாற்றில் வெறுமனே பதிவு செய்துவிட்டு மட்டும் செல்கிறார்கள். தோல்வியடைந்தவர்கள்தான் தங்கள் வாழ்க்கையையே ஒரு பாடமாக விட்டுச் செல்கிறார்கள் ! தோல்வி நமது தகுதிகளையும் திறமைகளையும் இன்னும் ஒருபடி மேலே இட்டுச்செல்வதற்கான ஒரு தளம் ! தோல்வியடைந்தவர்களே மனம் தளராதீர்கள் ! அரசுப்பணி பெற்றவர்களின் பெயர்களை எல்லாம் வரலாறு தமது பக்கங்களில் எழுதிக்கொள்வதில்லை ! ஒரு விவேகானந்தர் அரசுப்பணியாளர் அல்ல , ஒரு வைரமுத்து அரசுப்பணியாளர் அல்ல, ஒரு சச்சின் டெண்டுல்கர் அரசுப்பணியாளர் அல்ல , ஒரு அம்பானி அரசுப்பணியாளர் அல்ல, ஒரு ரஹ்மான் அரசுப்பணியாளர் அல்ல , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !

" இதையெல்லாம் வெளியிலிருந்து சொல்வதற்கு நன்றாகத்தான் இருக்கும் . தோல்வியடைந்தால்தான் தெரியும் அதன் துக்கமும் வலியும். " என்று சொல்பவர்களுக்கு

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் நானும் மோசமான முறையில் தோல்வியைத் தழுவியவன்தான் ! இந்தத் தோல்வியை முன்கூட்டியே உத்தேசித்து நானெழுதிய ஒரு கவிதை :

ஒரு தோல்வியை
அதன்
பச்சை வாசனையோடு
அப்படியே
அப்படியே
எதிர்கொள்ளப் போகிறேன் !

என்
நம்பிக்கையெனும் தீவுகளை
ஒரு சுனாமியென
அது
ஆக்கிரமிக்கட்டும் !

தன்
பள்ளத்தாக்கைக் காட்டி
அது என்னை
பயமுறுத்தினாலும்
தற்கொலைக் கிளைகளை
நாடப்போவதில்லை
நான் !

ஒரு
சிகெரெட் புகையைப் போல
நுரையீரல் முழுக்க
இதமாய்ப் பரவட்டும்
விரக்தி !

என்
முயற்சிகளுக்கு அடிக்கும்
சாவுமணியோசையில்
தியானம் பழகவேண்டும்
நான் !

தோல்வியின் மயானத்தில்
செவ்வனே நடக்கட்டும்
என்
காத்திருப்புகளின்
இறுதிச்சடங்கு !

ஒரு வெற்றியை
அத்தனை தயாரிப்புகளோடும்
கொண்டாட
காத்திருப்பது போல
நான்
காத்திருக்கிறேன் .............

வா
தோல்வி
வா !

By, குருச்சந்திரன், எழுச்சிமிகு பாடசாலை வாசகர்!




17 Comments:

  1. தோல்வி கண்டு
    தோல்வி கண்டு
    துவண்டுவிட்டேன்.
    ஆனால்
    வீழ்ந்துவிடவில்லை!
    வாழ்ந்துகாட்டுவேன்!

    ReplyDelete
    Replies
    1. Next time u will definitely tatste the fruit of success , don't worry cheer up brother, tomorrow will be yours. All the best.

      Delete
    2. paper 1 sc BV vecancy evlo sir

      Delete
    3. அருமையான கட்டுரை திரு குருச்சந்திரன் sir.வாழ்த்துகள்.

      Delete
  2. guru chandra !
    manathu valikerathu
    vaalkaiea veruthu vidum pol
    ulathu !
    keli solucu alaki !
    manathukul aluthu
    enani nane amaithi paduthi a
    velai il
    thetrukerathu umathu kavithai
    nandri ............!

    ReplyDelete
  3. திருப்பதி பற்றிய அரிய
    தகவல்கள்
    * தெய்வச் சிலைகள்
    பொதுவாக கருங்கல்லில்
    செதுக்கப்பட்டிருக்கும்.
    எங்காவது ஓரிடத்திலாவது
    சிற்பியின் உளி பட்ட
    இடம் தெரியும். ஆனால்,
    இப்படி எவ்விதமான
    அடையாளத்தையும்
    வெங்கடாஜபதி சிலையில்
    காணமுடியாது.
    அது மட்டுமல்ல சிலையில்
    வடிக்கப்பட்டுள்ள நெற்றிச்
    சுட்டி, காதணிகள,
    புருவங்கள், நாகாபரணங்கள்
    எல்லாம் பாலிஸ் போட்ட
    நகைபோல் பளபளப்பாக
    மின்னுகின்றன.
    * திருமலை 3000
    அடி உயரத்தில் உள்ள
    குளிர் பிரதேசம்.
    இருந்தாலும், அதிகாலை 4.30
    மணிக்கு குளிர்ந்த நீரால்
    அபிஷேகம் செய்யும் போதும்,
    பெருமாளுக்கு வியர்த்துவிடும்
    . பீதாம்பரத்தால் அந்த
    வியர்வையை ஒற்றி
    எடுப்பார்கள். ஏனெனில்
    ஏழுமலையான்
    சிலை எப்போதும் 110
    டிகிரி பரனைட்
    வெப்பத்திலேயே இருக்கும்.
    இது ஒரு அதிசயம் தானே!
    ஒவ்வொரு வியாழக்கிழமையும்
    ஏழுமலையானுக்கு அபிஷேகம்
    செய்வதற்கு முன்னதாக
    நகைகளைக் களைவர்.
    அப்போது ஏழுமலையானின்
    ஆபரணங்கள் சூடாகக்
    கொதிப்பதை உணர்கின்றனர்
    .
    * இங்குள்ள
    மடைப்பள்ளி மிகவும்
    பெரியது. இங்கு லட்டு,
    பொங்கல், தயிர்சாதம், புளிச்
    சாதம், வடை, முறுக்கு,
    ஜிலேபி, அதிரசம், போளி,
    அப்பம், பாயாசம், தோசை,
    ரவாகேசரி, பாதாம்கேசரி,
    முந்திரப்
    பருப்பு கேசரி ஆகியவை
    தினமும் தயாராகின்றன.
    இதில் லட்டு முதலிடம்
    பெற்று விளங்குகிறது.
    *
    ஏழுமலையானுக்கு ஒரு புதிய
    மண்
    சட்டியிலேயே பிரசாதம்
    படைப்பர். தயிர் சாதம்
    தவிர வேறு எந்த
    நைவேத்யமும்,
    கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ள
    குலசேகரப் படியைத்
    தாண்டுவதில்லை. இந்த மண்
    சட்டியும் தயிர் சாதமும்
    பிரசாதமாக
    கிடைப்பதை வாழ்வில் மிகப்
    பெரிய பாக்கியமாகப்
    பக்தர்கள் கருதுகின்றனர்.
    * பெருமாளுக்கு உடுப்பு
    மிகவும் பிரத்யேகமாகத்
    தயாரிக்கப்படுகிறது.
    ஒரு முழம் நீளமும்,
    ஆறு கிலோ எடையும் கொண்ட
    பட்டுப் புடவை பீதாம்பரமே
    இவருக்குரிய ஆடையாகத்
    திகழ்கிறது.
    இதை பெருமாளுக்கு சாத்த
    அலுவலகத்தில் 12
    ஆயிரத்து 500 ரூபாய்
    செலுத்த வேண்டும். இந்த
    ஆடைக்கு மேல்
    சாத்து வஸ்திரம்
    என்று பெயர்.
    வெள்ளியன்று மட்டுமே இதை
    அணிவிக்க முடியும். பணம்
    செலுத்தியவர்கள் வஸ்திரம்
    சாத்த 3 வருடங்கள்
    காத்திருக்க வேண்டும்.
    * உள்சாத்து வஸ்திரம் என்ற
    ஆடையையும்
    பெருமாளுக்கு அணிவிப்பர்.
    இதற்குரிய கட்டணம் 20
    ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு
    வெள்ளிக்கிழமையும் 15
    வஸ்திரங்கள் சாத்துவதற்கு
    அனுமதிக்கிறார்கள். பணம்
    செலுத்திய பின்
    இதை அணிவிக்க 10
    வருடங்கள் காத்திருக்க
    வேண்டும்.
    * பக்தர்கள் சமர்ப்பிக்கும்
    வஸ்திரங்கள் தவிர,
    அரசாங்கம் சமர்ப்பிக்கும்
    வஸ்திரங்களை ஆண்டுக்கு
    இரண்டு முறை பெருமாளுக்கு
    அணிவிக்கின்றனர்.
    * ஏழுமலையானின்
    அபிஷேகத்திற்கு எங்கிருந்து
    பொருட்கள்
    வருகிறது தெரியுமா?
    * ஸ்பெயினில்
    இருந்து குங்குமப்பூ,
    நேபாளத்தில்
    இருந்து கஸ்தூரி, சீனாவில்
    இருந்து புனுகு, பாரீசில்
    இருந்து வாசனைத்
    திரவியங்கள் வருகின்றன.
    ஒரு தங்கத் தாம்பாளத்தில்
    சந்தனத்தோடு கரைக்கப்பட்டு
    அபிஷேகம் செய்யப்படும் 51
    வட்டில் பால் அபிஷேகம்
    செய்தபின் கஸ்தூரியும்,
    புனுகும் சாத்துவர். தினமும்
    காலை 4.30 – 5.30
    மணிக்குள் அபிஷேகம்
    நடக்கும்
    அபிஷேகத்திற்கு ஆகும்
    செலவு ஒரு இலட்சம் பணம்
    செலுத்தியவர்கள் 3
    ஆண்டுகள் வரை காத்திருக்க
    வேண்டும்.

    ReplyDelete
  4. All the best friends ...next tet la 130 score pannunga..muyarchi thiruvinaiyaakum...

    ReplyDelete
  5. Ulagil adhigamaa peyargalai vudaya arpudhamaana kadavul lord venkatesaperumal

    ReplyDelete
  6. Ulagil adhika makkalaal vanangappadum irandaam panakkaara kadavul venkatesa perumal

    ReplyDelete
  7. Aanmavai, sarirathil irundhu bagavath geethai moolam thanimai paduthi kaattiyavar venkatesaperumal

    ReplyDelete
  8. Christ pirappadharku 1000 aandugalukkumun thondriya mahabaratha kadvul vishnu

    ReplyDelete
  9. Ulagil anaivarum therindhu kolla vendiya ore vishayam bagavath geedhai.

    ReplyDelete
  10. friends pls give tips 2 clear pg trb.....

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. கவிஞர் குருச்சந்திரன் ,தோல்வியில் இப்படி ஒரு அற்புத கவிதை பிறக்குமானால் நீங்கள் மீண்டும் மீண்டும் தோல்வி பெற வாழ்த்துகிறேன் (மன்னிக்கவும் தோல்வி இந்த பணிக்குத்தான்.).உங்களுக்கு ஒரு சிம்மாசனம் காத்திருக்கும் .-ஒரு ரசிகன்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive