Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Weightage ரத்து செய்யக்கோரி சென்னையில் பேரணி

        TET Weightage ரத்து செய்யக்கோரி 01.09.2014 அன்று சென்னையில் பேரணி நடைபெற இருக்கிறது. பேரணி நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரும் கடிதம்.


        செப்டம்பர் 01 திங்கள்கிழமை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் சார்பில் நடைபெறும் பேரணியானது சென்னை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து லாங்ஸ் கார்டன் வரை செல்லும் பேரணியை அமைதியாக நடத்துவது குறித்து சென்னை எக்மோர் காவல்துறையினர் பேரணிக்குழுவிற்கு  கொடுத்த வழிகாட்டும் நெறிமுறைப்படிவம் மற்றும் பேரணிக்குழுவினர் அளித்த ஒப்புதலும்..

 


































வாழ்வா? சாவா? போராட்டம்!
------------------------------
      இன்று தகுதிதேர்வு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் வெயிட்டேஜ் முறைக்கு எதிரான போராட்டம் சூடுபிடித்திருக்கிறது. இது அறவழியிலும், சட்டரீதியாகவும் நடைபெறுகிறது. என்ன காரணம்? வெயிட்டேஜ் முறையில் பள்ளி, கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்ணை எடுத்துகொள்வது தான். சரி இந்த மதிப்பெண்ணை கனக்கில் எடுத்து கொள்வது என்பது தவறுதான்.

       ஆனால் இப்பொழுது செய்யும் போராட்டம் சரியா? ஏன் GO 71 வெளியாகி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது, அப்பொழுது தெரியாதா இந்த வெயிட்டேஜ் நமக்கு எப்பொழுதும் பாதிப்பாக தான் இருக்கும் என்று. அன்றே இந்த போராட்டத்தை ஆரம்பித்திருக்கலேமே. அப்படி செய்திருந்தால் இந்நேரம் மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம். ஏன் செய்யவில்லை? இப்போது மட்டும் எப்படி தோன்றியது. ஏனென்றால் இறுதி பட்டியலில் உங்கள் பெயர் வரவில்லை. உங்கள் பெயர் வரவில்லை என்ற உடன் தான் உங்களுக்கு வெயிட்டேஜ் தவறு என்று சொல்கிறீர்கள். இன்று காலம் கடந்து போராடும் அனைவரும் சுயநலவாதிகளே.

       சரி. காலம் கடந்து ஆரம்பித்தாலும் போராட்டத்தின் நோக்கம் என்பது நியாமான ஒன்றே. மதிப்பெண் அதிகமாக பெற்று வேலை கிடைக்கவில்லை என்றால் அதன் வலி என்பது அதிகமாக தான் இருக்கும். போராட்டம் செய்வது பெரிய விசயம் அல்ல. வெற்றி கிட்டும் வரை போராடவேண்டும்.  போராட்டம் ஒன்றை அறிவித்தால் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். ஆனால் இன்றோ ஒவ்வொருவரும் கணக்கு போடுகிறார்கள். இதனால் நமக்கு பலன் உண்டா. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டால் நமக்கு என்ன பயன் என்று யோசிக்கும் சுயநலவாதிகள் தான் அதிகம்.   அப்புறம் எப்படி மாற்றத்தை கொண்டுவர முடியும்.  போராட்டத்தின் வெற்றி என்பது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பொருத்தே அமையும்.

     செப்டம்பர் 1 திங்கள்கிழமை வெயிட்டேஜ் முறையை ரத்து கோரி மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இதில் அனைவரும் தவறாமல் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டுமென தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

Article by
Govindraj.




10 Comments:

  1. indha waitage murai 4 latcham perukku eppaum velai illai

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள போராட்டகார நண்பர்களே ....
      இன்று மட்டும் பணி நியமனம ஸ்டே ஆர்டர் வழங்க பட வில்லை என்றால் தேர்வு பெற்றவர்கள் ஒரு வாரத்திற்குள் பணியமர்த்தப்படுவர் .
      அப்புறம் சென்ற முறை கோர்ட் 2012 ஐ எப்படி GAME OVER என்று கதையை முடித்தார்களோ அதே தான் 2013 க்கும் .. .

      ஸ்டே ஆர்டர் கிடைக்கும் என இன்னுமா நம்புகிறீர்கள் ??????

      Delete
  2. கிளம்பிவிட்டீர்களா சென்னைக்கு...

    எங்கள் மனம் பொங்கி அழுகையில் கண்ணீரை துடைக்க ஆதரவுக்கரம் தருவேர்களா?????

    நாளைய பேரணியில் விடிவுகாலம் பிறக்காதா என்று ஏ(து)க்கத்தோடு செல்கிறோம் வாருங்கள் நண்பர்களே...
    சென்னை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியம் காலை 9:30....

    ReplyDelete
  3. முடியும் வரை போராடு! வெற்றி கிட்டும் வரை போராடு! என்னால் களத்திற்கு சில நண்பர்களுக்கு வழிகாட்டமுடிந்தது .புறப்பட்டு விட்டார்கள் வெற்றி நமதே!

    ReplyDelete
  4. முடியும் வரை போராடு! வெற்றி கிட்டும் வரை போராடு! என்னால் களத்திற்கு சில நண்பர்களுக்கு வழிகாட்டமுடிந்தது .புறப்பட்டு விட்டார்கள் வெற்றி நமதே!

    ReplyDelete
  5. Sir unakalu vellai kidika nam ellam 10, 12 & degree improvement elutha mudiyathu sir. Eppa high score pannara privatr matric schoola namma pasangala join pannunga. Appa than high score eduka mudiyum nam teacher kanavukalai nam pasanga niraivethuvanga sir. Govt support private school. who are study government school pls discintinue anf join the private schhol sir. appa than 480 & 1150 mela vanga mudiyum.

    ReplyDelete
  6. 2012 rules is not affected 2 teachers. please 2013 batchkum intha rules apply pannuga sir. nalla odana vandiya weithage solli route matti vittuthenga sir

    ReplyDelete
  7. பேரணியில் ஈடுபட்ட 5 ஆசிரியர்கள் விஷம் குடித்தனர் 2பேர் உயிருக்கு போராட்டம்...வாழ்க தமிழகம்.

    ReplyDelete
  8. என்ன பாடசாலை எல்லாத்துக்கும் Article போடுவீங்க, இப்ப ரெண்டு பேர் சாக கிடக்குறாங்க யான் இன்னும் Article போடல..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive